காலம் காலமாக இந்து திருமணங்களில், தாலியையும், பெண்கள் கால்களில் அணியும் மெட்டியையும் சம்பிரதாய அடையாளங்களாகத்தான் பலரும் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் காலம் காலமாக நடைமுறைப்படுத்தி வந்த இந்தப் பழக்கவழக்கங்களிலும், சம்பிரதாயங்களிலும், அறிவியல் உண்மைகள் ஆழப்பதிந்துள்ளன என்கிறது மருத்துவ உலகம். காலுக்கு மெட்டி அணிவது பியூட்டி மட்டுமல்ல... ஹெல்தி என்பதைச் சொல்கிறது இந்தத் தகவல்.
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவிதத் தொடர்பு உண்டு. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. எனவே, பெண்கள் காலில் மெட்டி அணிவதால் கருப்பைப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அந்த மெட்டியும் வெள்ளியில் செய்ததாக இருக்க வேண்டும்.
ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களில் இருந்து நிவாரணம் தரும் ஆற்றல் கொண்டதாம்.
பெண்களின் கர்ப்பக் காலத்தில் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தின் போது இந்தக் கால் விரல் நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். இதனை எப்போதும் செய்து கொண்டு இருக்க முடியாது என்பதற்காக, வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து வலியைக் குறைக்கிறது. மேலும், கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த அந்தக் காலத்தில், கால் மெட்டி ஒலியின் வைத்தே, தன் ஆசை மனைவி வருவதை உணர்ந்து காத்திருப்பாராம் கணவர். இப்படி, புது மணத் தம்பதிகளின் அந்நியோன்யம் பெருகவும், கருப்பைப் பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்கவும், காலில் மெட்டி, கொலுசு போனவற்றை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என்கிறார்கள் வல்லுநர்கள்.
No comments:
Post a Comment