சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2014

ஆகாயத்தில் பறந்த மணமக்கள். அதிசயித்த கிராம மக்கள்!

 ஹெலிகாப்டர் மூலம் மாப்பிள்ளை, மணப்பெண் அழைப்பு நடத்தி, நடந்த நிச்சயதார்த்தத்தை ஒரு கிராம மக்களே அதிசயமாக கண்டு களித்தனர்.

காரைக்குடி அருகே உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி கண்ணகி. ஆறுமுகம் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு சென்று, தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு கலையரசி, திருவாசகம், கௌதமன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், கலையரசி மற்றும் திருவாசகத்திற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து பிரான்சில் வசித்து வருகின்றனர்.

  

இந்நிலையில், பிரான்ஸ் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கடைசி மகன் கௌதமனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யபட்டது. அதேநேரத்தில் தனது தம்பியின் திருமணத்தை வித்தியாசமாக நடத்த திருவாசகம் முடிவு செய்தார். அதற்காக அவர் ஹெலிகாப்டரை தேர்ந்தெடுத்தார். தமிழகத்தில் நடைபெற்ற பல பிராமண்ட திருமணங்களில் கூட ஹெலிகாப்டர் பயன்படுத்தியது இல்லை. அதையே தங்கள் வீட்டு திருமணத்திற்கு ஹைலைட் ஆக்க முடிவு செய்தார். 

இந்நிலையில், அறந்தாங்கியில் வசித்து வரும் பானுப்பிரியா என்ற பெண்ணுக்கும் கௌதமனுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று (29ஆம் தேதி) எஸ்.ஆர்.பட்டிணத்தில் நடந்தது. இதற்காக பெங்களுரில் இருக்கும் டெக்கான் ஏர்லைன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, ஹெலிகாப்டர் ஆர்டர் செய்யபட்டது. பெண் அழைப்பு மற்றும் மாப்பிள்ளை அழைப்பு அனைத்தும் ஹெலிகாப்டர் மூலம் நடத்துவது என முடிவு செய்யபட்டது.

                                   

இதற்காக எஸ்.ஆர்.பட்டிணம் அருகே இருக்கும் திருவாசகம் தோட்டத்தில் செட்டிங் போடப்பட்டு, ஹெலிபேடும் அமைக்கபட்டது. அதேபோல் அறந்தாங்கியில் பெண் வீட்டிற்கு அருகேயும் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை, மாப்பிள்ளை கௌதமன், தனது பெற்றோருடன் பெண் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இந்த காட்சியை கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு கண்டுகளித்தனர்.

அவர்கள் அறந்தாங்கி சென்று, அங்கு நிச்சயதார்த்தம் முடிந்ததும், மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் அதே ஹெலிகாப்டரில் எஸ்.ஆர்.பட்டிணம் திரும்பினர். மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியபோது, அந்த கிராம மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

இதேபோல், நாளை (30ஆம் தேதி) நடைபெற உள்ள திருமணத்திலும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் ஹெலிகாப்டரில் ஊர் சுற்ற உள்ளனர்.



இதுகுறித்து, மாப்பிள்ளை கௌதமன்இந்த ஐடியா உருவானது அண்ணனுக்குதான். அவர்தான் வித்தியாசமாக செய்ய வேண்டும் என ஹெலிகாப்டரில் ஊர்வலம் வைக்க முடிவு செய்தார். பிரான்ஸ் நாட்டில் இது பெரிய விஷயம் அல்ல. அங்கு திருமணமே ஹெலிகாப்டரில் நடந்து இருக்கு. ஆனால் இங்கு ஹெலிகாப்டரை பார்ப்பதே மக்களுக்கு அரிதாக இருக்கும். எங்கள் திருமணம் இதற்கு ஒரு முன்னுதாரணம்என்றார்.

'
ஹெலிகாப்டர் திருமணம்..அதுவும் கிராமத்திலே..!' என்று நகரவாசிகளும் வாய் பிளக்கும் நிலைக்கு இந்த திருமணம் நடைபெறுகிறது.


No comments:

Post a Comment