சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Oct 2014

கத்தி படத்தில் வரும் பிரஸ் மீட்டில் விஜய் பேசும் விழிப்புணர்வு வசனங்கள்...!


மிகுந்த சர்ச்சைக்கு பிறகு கத்தி படம் தீபவாளியன்று வெளியானது. இந்த படத்தில் வரும் பிரஸ் மீட்டில் விஜய் பேசிய வசனஙகள் பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. பல விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. அந்த வசனங்கள் இவைதான்...
  • ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாயக் கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எதுத்து நின்ன கிராமம்தன்னூத்து”. அதுக்காக அவங்க குடுத்த விலை 6 விவசாயிங்களோட உயிர். இந்த கொடுமைய உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி பண்ணி,பண்ணி முடியல.
  • 3 வேலை பசி எடுக்கும் போது சாப்பாடு ஞாபக வர நமக்கு அத விவசாயம் பண்ணறவங்களோட ஞாபக என்னைய்காவுது வந்துருக்க. கடந்த 30 வருசத்துல 12,456 ஏரிகள் மூடப்பட்ருக்கு, 27 ஆயிரத்துக்கும் மேல குளங்கள் அழிக்கப்பட்ருக்கு, 7 ஆறுகள் மூடபட்டுருக்கு, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு.
  • தாமிரபரணி ஆறுலயிருந்து ஒரு கோலா கம்பேனி ஒரு நாளைக்கு 9 லட்ச லிட்டர் தண்ணி எடுக்குறாங்க. இதுல விவசாயத்துக்கு தண்ணி எங்கயிருக்கும், விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணுவா. அவங்க பசிக்கு பிச்ச கேக்கல சார், விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க. தன்னூத்து கிராமம் மட்டுமில்ல சொந்த ஊர விட்டு ஓடி போன அத்தன விவசாயிகளுந்தா.
  • 20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவ இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்ச எடுக்குறா, பாலத்துக்கு கீழ துணி தொவக்குறா, சாக்கட அள்றா. உங்கள்ள நெரைய பேருக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன், இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்கிறா, அவங்க குடும்பமே தெருவுக்கு வருது. இது கடந்த 10 வருசமா நடந்திட்டு வருது.
  • அவங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. 2002-லயிருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்ச விவசாயிகள் இந்த தொழிலயே விட்டு வேற வேலைக்கு போய்டாங்க.இப்போ மீத்தேன் வாயு, அத எடுக்குறதுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம்
  • ரெண்டு மாவட்டத்திலும் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேஷனல் கம்பேனி அழிக்கப்போது, அந்த விவசாய குடும்போஎல்லா பசில சாகப்போது.5000 கோடி கடன் வாங்குன ஒரு பியர் ஃபேக்ட்ரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியலைனு கை தூக்குறா, ஆனா அவே தற்கொல பண்ணிக்கல, அவனுக்கு லோன் குடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல, ஆனா 5000 ரூவா கடன் வாங்குன ஒருவிவசாயி அத கட்ட முடியாம, வட்டி மேல வட்டி ஏறி, பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்கிறா.
  • இதையெல்லாம் கவனிக்க சிட்டில இருக்க உங்களுக்கு நேரம் இல்ல, இதை சொல்ல தான் டீ.வி சேனல்ட கேட்டோ, ஆனா டீ.வில லேகியோவிக்கவும், சமையல் செய்யவும், டான்ஸ்க்கு மார்க்கு போடவும் டைம் இருக்கு, ஒரு கிராமமோ அழிய போறத சொல்ல ரெண்டு நிமிஷம் இல்லை.
  • இந்தியாவுக்கு ஃபேக்ட்ரியே வேணாம்ணு நாங்க சொல்ல வரல, குடிக்குற பால்லயிருந்து தயார் பண்ற சோப்பு வேணா. முட்ட, மீனு, கேரட்லயிருந்து எடுக்குற பேர்னஸ் கீரீம் வேணா. தக்காளி, ஆரஞ்சு, பாதாம்ல தயாரிக்குற அழகு சாதண பேக்ட்ரி வேணா. இந்தியால விட்டமீண் குறைபாடுனால ஒரு நாளைக்கு 5000 குழந்தைங்க இறந்து போறங்கய்யா. பணக்காரன் யூஸ் பண்ற ஒரு காண்டம்ல ஃஸ்டாபேரி ஃபேலேவர் வேணும்னா, ஒரு ஏழ குழந்த தன்னோட வாழ்க்கைய்ல ஃஸ்டாபேரிய நெனச்சு பாக்க முடியுமா...
  • (சாதாரண தண்ணி, அதுல என்ன அவ்லோ பணமா கிடைக்கும்) யோவ்.... சாதாரண தண்ணியா...
  • 2ஜினா என்னய்யா.. அலைக்கட்றை.. காத்து.. வெறும் காத்தமட்டுமே வித்து கோடி கோடியா ஊழல் பண்ற ஊர்யா இது, செல்போன் ஆடம்பரம்...... தண்ணி அத்யாவசியம்...
இவ்வாறு வசனம் பேசுகிறார் நடிகர் விஜய்இந்த வசனக்காட்சிகளை கத்தி படத்தில் இருப்பதை பல்வேறு தரப்பினர் விமர்சித்தாலும்இதில் உள்ளஉண்மை மறுக்கமுடியாத ஒன்று.


தினமணி


No comments:

Post a Comment