சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Oct 2014

செல்போன் முதல் கார்கள் வரை 2 நிமிடத்தில் ரீசார்ஜ்!

செல்போன் முதல் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வரை பயன்படுத்தும்  பேட்டரிகளை  இரண்டு நிமிடங்களில் ரீசார்ஜ் செய்யும்  பேட்டரியை சிங்கப்பூர்  பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர். இந்த பேட்டரிகளை  இருபது வருடங்கள் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை துணைப் பேராசிரியர் சென் ஜியாடாங் கூறுகையில், "நாங்கள் உருவாக்கியுள்ள இந்த பேட்டரி மூலம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனங்கள் பயன்பெறும். செல்போன் முதல் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வரை, இதனைப் பயன்படுத்த முடியும்.

ரீசார்ஜ் செய்யத்தக்க லித்தியம்-அயன் பேட்டரிகளின் சராசரி ஆயுள் 500 ரீசார்ஜ்களாகும். அதாவது, சராசரியாக 500 முறை ரீசார்ஜ் செய்ய இயலும். கால அளவில் கூற வேண்டுமானால், முழுமையான ரீசார்ஜ் அளிக்க இரண்டு மணி நேரமாகும் நிலையில், இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே  பயன்படுத்த முடியும்.

இப்போதைய பேட்டரிகளில் உள்ள கிராஃபைட்டுக்கு பதிலாக, டைட்டேனியம் டையாக்சைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித உடலிலுள்ள முடியின் பருமனில், ஆயிரத்தில் ஒரு பங்காக இதனைச் சிறிதாகத் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளோம்.

வேதியியல் அடிப்படையில் இது வேகமாகச் செயலாற்றும் சக்தி கொண்டது  என்பதால், இதனைப் பயன்படுத்தும் பேட்டரியின் ரீசார்ஜ் மிக வேகமாக நிகழ்கிறது. மேலும் இதன் ரீசார்ஜ் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கும். இதன் ஆயுள் 20 ஆண்டுகளாக இருக்க முடியும். அடிக்கடி பேட்டரி சார்ஜ் செய்வது, ஆயுள் தீர்ந்துவிடும் காரணத்தால் பேட்டரியை மாற்றுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். ஆயுள் தீர்ந்த பேட்டரிகளால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் மாசும்  குறையும். இந்த புதிய வகை பேட்டரிகள் அடுத்த 2 ஆண்டுகளில்  விற்பனைக்கு வர உள்ளது" என்றார்


No comments:

Post a Comment