சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Oct 2014

ரஜினியுடன் நடிக்கும் மகேஷ் பாபு!
ரஜினியும், மகேஷ் பாபுவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்பதுதான் டோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.
மகேஷ் பாபுவின் நெருங்கிய உறவினர் சூரிய நாராயண பாபு . இவர் தமிழ், தெலுங்கில் ஒரு மல்டி ஸ்டார் படத்தைத் தயாரிக்கிறாராம். அதில்தான் ரஜினியும், மகேஷ் பாபுவும் இணைந்து நடிக்கிறார்கள்.
இதுகுறித்து, சூரிய நாராயண பாபு ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ரஜினியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ரஜினி 'லிங்கா' படத்தில் தற்போது பிஸி. மகேஷ் பாபு தற்போது ஸ்ருதி ஹாசனுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்தப் படங்களை முடித்துவிட்டு ரஜினியும் - மகேஷ் பாபுவும்  இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இயக்குநர் யார்? டைட்டில் என்ன? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.No comments:

Post a Comment