சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Oct 2014

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அரசியலுக்கு வருவேன்!



அரசியல் அனல், சொத்துக் குவிப்பு தீர்ப்புக் கனல்... இதற்குச் சமமாக கோடம்பாக்கத்தில் எகிறுகிறது ரஜினியின் 'லிங்காஃபீவர்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'உடம்பை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஒரு படம்என்பது மட்டும்தான் ரஜினியின் பிளான். அதைச் சுற்றி 'லிங்கா கோட்டைகட்டிவிட்டார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

படத்தில் இரண்டு ரஜினிகள். இருவருமே இளமைத் தோற்றத்தில்தான் வருவார்கள். ஆச்சர்யமாக, படத்தில் ரஜினிக்கு பிரத்யேக 'பன்ச்டயலாக் இல்லையாம். ஆனால், கதையின் சூழலுக்குப் பொருத்தமான 'பன்ச்கள் ஏராளம்; தாராளம். இன்ஜினீயர் ரஜினி அணை கட்டும்போது வரும் பிரச்னையில் அவருக்கு உதவ ஊர் மக்கள் தயங்கி நிற்பார்கள். 'எனக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், நாடார், செட்டியார், தேவர்னு யாரும் வேணாம்... 'இந்தியன்மட்டும் என்கூட அணை கட்ட வாங்க!’ என ரஜினி சொல்வது ஒரு சாம்பிள்!



தமிழ் சினிமாவில் 'பொங்கல் பாடல்வந்து மாமாங்கம் ஆகிவிட்டதே. அந்தக் குறையைப் போக்க, பொங்கல் விழாவுக்கு ரஜினியும் சோனாக்ஷி சின்ஹாவும் ஆடும் கலகல டூயட் களைகட்டும்.
வழக்கமாக ரஜினி பட ஓப்பனிங் ஸாங்கை எக்கச்சக்க ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் புடைசூழ பிரமாண்டமாகப் படம் பிடிப்பார்கள். அது பெரும்பாலும் ஆந்திரா அல்லது கர்நாடகா பகுதிகளில் நடக்கும். ஆனால் 'லிங்காவின் ஓப்பனிங் ஸாங் வெளிநாட்டில் படமாகியிருக்கிறது.

கர்நாடகாவில் படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினியைச் சந்தித்திருக்கிறார் தமிழக சேனல் உரிமையாளர் ஒருவர். 'லிங்காபடத்தைத் தன் பட நிறுவனமே மொத்தமாக விலைக்கு வாங்கிக்கொள்வதாகவும், சாட்டிலைட் உரிமையையும் தனக்கே தர வேண்டும் எனவும் ரஜினியிடம் கேட்டாராம். ஆனால் ரஜினி எந்த உறுதிமொழியும் தரவில்லையாம்.

படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினியிடம் தான் இயக்கிக்கொண்டிருக்கும் 'வை ராஜா வைபடத்தின் சில காட்சிகளைப்  போட்டுக்காட்டி இருக்கிறார் அவர் மகள் ஐஸ்வர்யா. 'நல்லா பண்ணிருக்கேம்மாஎன ரஜினி முகம் மலர்ந்து பாராட்ட, 'அப்பா உங்களை இயக்க, இன்னும் ஒரே ஒரு சான்ஸ் எனக்குக் கொடுங்க. டைரக்ஷன் நான், மியூசிக் அனிருத். மத்த ஆட்களெல்லாம் நீங்க சொல்றவங்கதான்!’ எனக் கோரிக்கை வைக்க 'பார்க்கலாம்மா...’ என்று மட்டும் சொல்லிச் சிரித்திருக்கிறார் ரஜினி.
கர்நாடகாவில் இருந்த ரஜினியை அந்த மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பி.ஜே.பி-யின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பா இருவரும் சந்தித்து நீண்டநேரம் பேசியிருக்கிறார்கள். அதன் பின்னரே 'பி.ஜே.பி-யில் ரஜினிஎன்ற செய்தி சூடு பிடித்தது.


தொடர்ந்து கர்நாடகாவில் ஷூட்டிங்கில் இருந்தபோது, பேரன் லிங்காவை ரொம்பவே மிஸ் பண்ணி​யிருக்கிறார் ரஜினி. அதனால் லிங்காவின் சேட்டைகளை ஐஸ்வர்யா வீடியோ எடுத்து அனுப்ப, அதை மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்கிறார்.


ரஜினியைச் சந்தித்த பெங்களூரு ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் இளவரசன், 'நீங்க அரசியலுக்கு வரணும் தலைவா!’ எனச் சொல்ல, 'என்னை இந்த அளவுக்கு வளர்த்தவங்க நீங்கதான். உங்களுக்கு எதுவும் செய்யாம நான் போயிட மாட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கஎனப் பதில் கொடுத்திருக்கிறார்.


ரஜினியின் தற்போதைய செல்லம்டால்மேஷன் நாய்போயஸ் கார்டனில் இருக்கும் அவரது ஆபிஸ் வாயிலின் துவாரக பாலகன் இந்த டால்மேஷன்தான்லதாஐஸ்வர்யாசௌந்தர்யா எல்லோரையும்விட ரஜினியைக் கண்டால் குஷியாய் குதிக்கிறது டால்மேஷன்.

இமயமலைக்கு யாத்திரை செல்லும்போது தங்குவதற்குச் சொந்தமாக ஓர் இடம் வாங்கிதியான மண்டபம் கட்ட வேண்டும் என்பது ரஜினியின் கனவுதனக்குப் பிடித்த மாதிரி அந்த இடத்தையும் வாங்கிவிட்டார்ஆனால்உடல் நிலையைக் காரணம் காட்டிகுடும்பத்தினர் அவரது இமயமலைப் பயணத்துக்குத் தடை விதித்து இருக்கிறார்கள்.

இதனால் சென்னையில் இருக்கும்போது மதியம் சாப்பாட்டுக்குப் பின் குட்டித் தூக்கம் போட்டுவிட்டுநாலு மணிக்கு தனது இன்னோவா காரில் கிளம்பிசென்னையின் வீதிகளில் நிதானமாக உலா வருகிறார்நன்றாக இருட்டிய பின் மெரினா பீச்சில்ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கடலைப் பார்த்து மௌனமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார்.

மௌனம் கலைப்பாரா சூப்பர் ஸ்டார்?


No comments:

Post a Comment