சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Oct 2014

இது அனிருத் ரவுண்டு


அத்தனை எனர்ஜியோடு இருக்கிறார் அனிருத். 'கத்தி’ படத்துக்கு இசையமைத்தது, 'ஐ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியது என 'ஜென் நெக்ஸ்ட்’ இசையமைப்பாளர்களில், இது அனிருத் ரவுண்டு. ஒவ்வோர் அங்குலமும் அழகாக அலங்கரிக்கப்பட்ட வீட்டில் தனியே அமர்ந்திருக்கிறார். ''வீட்ல எல்லாரும் அமெரிக்கா போயிருக்காங்க. டீ சுமாரா இருந்தா, திட்டாதீங்க. ஏன்னா, கப்தான் வீட்டு கப். அதுல இருக்கிறது, ரோட்டுக் கடை டீ!'' என்று சிநேகமாகச் சிரிக்கிறார்.

 '' 'ஐ’ ஆல்பத்துக்காக மெர்சலான அனுபவம் சொல்லுங்க?'' '

'நான் பாடகனே கிடையாது. பாடுறதுன்னா எனக்கு உள்ளுக்குள்ள உதறும். 'எதிர்நீச்சல்’ மியூசிக் பண்ணப்ப, 'பூமி என்ன சுத்துதே...’ பாட்டு வரிகளைக் கேட்டதும் சொந்த வாழ்க்கையோட ரிலேட் பண்ணிக்கிட்ட மாதிரி இருந்தது. சும்மா பாடினேன். ஹிட் ரெவ்யூஸ் வந்ததும் அடுத்தடுத்து பாட நம்பிக்கை வந்துச்சு. ரஹ்மான் சார் என் பாடல்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் கேட்டு, நல்லா இருந்துச்சுன்னா வாழ்த்துவார். திடீர்னு ஒருநாள், 'ஒரு பாட்டு பாடுறியா?’னு வரச் சொன்னார். பார்த்தா 'ஐ’ ரிக்கார்டிங். ஷங்கர் சார் உக்கார்ந்திருக்கார். நிஜமாவே மெர்சலாகிட்டேன். ரஹ்மான் சார்தான் ரிலாக்ஸ் பண்ணி 'எப்படிப் பாடணும்’னு சொல்லிக்கொடுத்துப் பாடவெச்சார். அவரைப் பார்த்து மியூசிக் பண்ணக் கத்துக்கிட்டவன், அவர் மியூசிக்லயே பாடினது... சர்ப்ரைஸ் சந்தோஷம். சும்மா ஜிவ்வுனு இருக்கு!''

  ''விஜய் + முருகதாஸ்னு 'கத்தி’ படத்துக்கு மாஸ் எதிர்பார்ப்பு. அந்தப் பட இசைக்கு முருகதாஸ் உங்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்?'' 

 '' 'எதிர்நீச்சல்’ வெளியாகி மூணாவது நாள் முருகதாஸ் சார் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. பாடல்கள் ஹிட் ஆனதுக்கு வாழ்த்து சொல்லக் கூப்பிடுறார்னு நினைச்சுப் போனேன். 'இப்பத்தான் 'எதிர்நீச்சல்’ பார்த்தேன். மியூசிக் பிரமாதம். அடுத்து விஜய் சார்கூட 'கத்தி’ பண்றேன். நீங்கதான் மியூசிக்’னு எனக்கு ஷாக் கொடுத்தார் முருகதாஸ் சார். நம்பவே முடியலை. ஒருநாள் கம்போஸிங்ல, 'என்னை ஏன் சார் இந்தப் படத்துக்கு செலெக்ட் பண்ணீங்க?’னு வாய்விட்டே கேட்டுட்டேன்.

'என் ஃப்ளாட்ல சின்ன பசங்கள்லாம் 'எதிர்நீச்சலடி...’ பாட்டை கோரஸா பாடிட்டு இருந்தாங்க. அது ஏதோ ராப் மாதிரி இருந்துச்சு. எனக்குப் புரியலை. ஆனா, குழந்தைகளுக்குப் பிடிக்குதுனா, அதுல ஏதோ இருக்குனு தோணிச்சு. அப்புறம் 'எதிர்நீச்சல்’ பட டைட்டில்ல உங்க பேர் வந்தததும் தியேட்டர்ல பயங்கரமா கை தட்டினாங்க. ஃபுல்பார்ம்ல இருக்கீங்கனு புரிஞ்சுபோச்சு. அதான் உங்களை ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’னு சிரிச்சார்.''

 '' 'கத்தி’ படத்துல விஜய்யை 'லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள...’ பாடல் பாடவெச்ச அனுபவம்...'' 

 ''விஜய் சார் செம சின்சியர். செல்ஃபி பாடலோட டியூனையும் வரிகளையும் அவருக்கு முன்னாடியே அனுப்பிட்டேன். அவர் நாலைஞ்சு வெரைட்டியில பாட்டு பாடி ரிக்கார்ட் பண்ணி எடுத்துட்டு வந்தார். 'அனிருத் இதுல எது ஓ.கே-னு சொன்னீங்கன்னா, நான் அதை ஃபாலோ பண்றேன்’னு சொல்லிட்டு என் ரியாக்ஷன் பார்த்தார். ஒரு மாஸ் ஹீரோ ஒரு பாடல் பாடுறதுக்கு இவ்வளவு சின்சியரா இருக்காரேனு எனக்கு ஆச்சர்யம். பாட்டு கம்போஸிங்ல, 'நாம ஒரு செல்ஃபி எடுத்து ட்விட்டர்ல போடுவோம். வைரல் ஆகும்’னு ஐடியா கொடுத்ததும் அவர்தான்!''

 '' 'தனுஷ்-சிம்பு சண்டை’, 'சிம்பு-நயன் பேசிக்கிறதில்லை’னு நியூஸ் படிச்சுட்டு ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணா, நீங்க, தனுஷ், சிம்பு, நயன்தாரானு எல்லாரும் செம பார்ட்டி பண்ணிட்டு இருக்கீங்க... என்னதாங்க நடக்குது?'' 

  (சத்தமாகச் சிரிக்கிறார்) ''நாங்க எல்லாரும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவங்க எல்லாரையும் நான்தான் சேர்த்துவெச்சேன்னு எழுதுறாங்க. ஆனா, உண்மை என்னன்னா நான்தான் அவங்ககூட போய் சேர்ந்துக்கிட்டேன். சிம்பு-தனுஷ் ரெண்டு பேருமே இப்போ குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஃபாரின் டூர் எல்லாம் சேர்ந்து போயிருக்கோம். அப்படி அப்படியே அந்த கேங்ல எல்லாரும் சேர்ந்துட்டாங்க. யார் மனசுலையும் பழைய விஷயங்கள் எதுவும் இல்லைனு நினைக்கிறேன். ரொம்ப கேஷ§வலா, ஜாலியாப் பேசிப்போம். குரூப்ல ஒரே பிரச்னை... நானும் சிம்புவும்தான் அங்கே பேச்சுலர்ஸ். அதனால எதுனாலும் எங்களைத்தான் ஓட்டி எடுப்பாங்க!''

 ''சமீபத்துல சினிமாவில் திக் ஃப்ரெண்ட்ஸ்னா தனுஷ்-சிவகார்த்திகேயனைச் சொல்றாங்க. ஆனா, திடீர்னு அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில்லைன்னு தகவல்... உண்மையா?'' 

 ''சிவா எப்பவுமே எங்க கேங்லதான் இருக்காருங்க. நான், தனுஷ் சார், சிவா மூணு பேரும் வாட்ஸ்அப்ல ஒரு குரூப்பே நடத்திட்டு இருக்கோம். நடுவுல அவங்கவங்க வேலையில் பிஸி ஆகிட்டதால, முன்ன மாதிரி அடிக்கடி சந்திச்சுக்க முடியலை; அவ்வளவுதான். தனுஷ் சார் தயாரிப்புல சிவா நடிக்கிற 'டாணா’ படத்துக்கும், விஜய் சேதுபதி நடிக்கிற படத்துக்கும் நான்தான் மியூசிக்!''

 ''ஆண்ட்ரியா... காதல்... பிரேக்-அப்... போட்டோ நெட்ல ரிலீஸ்... காயம்லாம் ஆறிடுச்சா?'' 

'' 'கொலவெறி வைரல்’னு இன்டர்நெட் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் நான். என்னை வளர்த்த அதே இன்டர்நெட் என் இமேஜை டேமேஜும் பண்ணுச்சு. எனக்கு அந்த போட்டோ பெரிய ஷாக்தான். ரொம்ப நொந்துட்டேன். எனக்கே அப்படின்னா, வீட்ல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. ஆனா, கடவுள் புண்ணியத்துல வீட்ல எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. ரொம்ப ஆறுதலாப் பேசினாங்க.

ரெண்டு நாள் உடைஞ்சுபோய் இருந்தேன். 'இது இன்டர்நெட் காலம். எதுவுமே ரெண்டு நாளைக்கு மேல பழைய மேட்டர்தான். நாளைக்கே வேற ஒரு விஷயம் வைரல் ஆச்சுன்னா, மக்கள் உன்னை மறந்துருவாங்க’னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். விளையாட்டுத்தனமா செஞ்சது பெரிய பாடம் கத்துக்கொடுத்துச்சு. இப்போ நிறைய மெச்சூரிட்டி வந்திருக்கு. அதனால தெளிவா இருக்கேன்!''



No comments:

Post a Comment