சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Oct 2014

விபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு?



சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது, குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்து எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதில் குழந்தைகள் கூட சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. மேலும், வாகனம் ஓட்டுபவர் சரியான லைசென்ஸ் வைத்திருப்பதில்லை. அதேபோல, இன்ஷூரன்ஸ் இல்லாமல் பல வாகனங்கள் சாலைகளில் ஓடுகிறது. இதனால், விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்காமல் போகும் சூழ்நிலை உள்ளதுஇன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு  தண்டனைகளை கடுமையாக்கினால்தான் அவர்கள் பாலிசியை எடுப்பார்கள் என மத்திய அரசு யோசித்து வருகிறது.

சமீபத்தில் இன்ஷூரன்ஸ் தகவல் மையம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஓடும் வாகனங்களில் சுமார் 70 சதவிகித வாகனம் இன்ஷூரன்ஸ் இல்லாமல் உள்ளது என தெரிவித்துள்ளது. இன்ஷூரன்ஸ் இல்லாமல் சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கான அபராதம் மிகவும் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக செப்டம்பர் 13ஆம் தேதி மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் மக்கள் கருத்து கேட்பும் நடத்தப்பட்டது. 

சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில்  அபராத விதிமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய், இலகு ரக வாகனங்கள் மற்றும் ஆட்டோவுக்கு 25 ஆயிரம் ரூபாய், கார் மற்றும் லாரிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது இன்ஷூரன்ஸ் இல்லாமல் எந்த வாகனத்தை ஓட்டினாலும் ஆயிரம் ரூபாய்தான் அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், இந்த மசோதாவில் சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் ஆகும் காலதாமதம், விரைவாக க்ளைம் கிடைக்க ஏற்பாடு என பல மாற்றங்களைக் கொண்டு வரவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் யோசித்து வருகிறது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு கோல்டன் ஹவர் என்றழைக்கப்படும் (மருத்துவ பராமரிப்பு) சேவையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதை தவிர்க்கிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவ செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியுமா என்பதுதான். மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் என பலரும் விபத்தில் சிக்குகிறார்கள்.

ஏழ்மையானவர்களிடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே ஏழ்மையானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன.

மசோதாவின் பரிந்துரைகள்..!
  • விபத்தில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை கிடைக்கும் வகையில் ஃபண்டை உருவாக்கி அவர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டுமென இன்ஷூரன்ஸ் தகவல் மையம் பரிந்துரை செய்துள்ளது.
  • விபத்து நிகழ்ந்த 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு (காயம்/இறப்பு) க்ளைம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்துபவர்களின் லைசென்ஸை ரத்து செய்து வாகனம் ஓட்ட முடியாத நிலையை உருவாக்க வேண்டும் 
  • இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையிலும் வரையறையைக் கொண்டு வரவேண்டும். அதாவது, விபத்து ஏற்படும்போது வழங்கப்படும் க்ளைம் தொகை அதிகபட்சம் 10 லட்சம் ரூபாயாக இருக்குமாறு சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.
  • வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யாமல் ஓட்டக் கூடாது. 
  • விபத்து நடத்து மூன்று ஆண்டுகளுக்குள் க்ளைம் செய்ய வேண்டும். 
  • இன்ஷூரன்ஸ் சட்டங்களை கடுமையாக்கும்போது அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு பிரீமியம் மூலமாக கிடைக்கும் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • மேலும், வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியின் கால அளவை ஓராண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக மாற்றுவதற்கான திட்டமும் உள்ளது. ஆனால், இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 


No comments:

Post a Comment