சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2014

ராமதாஸ் இல்ல திருமணம்: சுவாரஸ்ய பிட்ஸ்!



பா.. நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண விழா, வருங்கால அரசியல் மாற்றத்துக்கான தொடக்கப் புள்ளி. இந்தத் திருமண நிகழ்ச்சியால், அரசியல் டி.ஆர்.பி எக்கச்சக்கமா எகிறி இருக்கு.

இந்தத் திருமணத்தைப் பற்றிய சுவாரஸ்யமான டிட்-பிட்ஸ்.



* அன்புமணி ராமதாஸ் - செளமியா அன்புமணியின் மகள் சம்யுக்தாவுக்கும், ஜெ.பரசுராமன்ஸ்ரீகாந்தி பரசுராமனின் மகன் ப்ரித்தீவனுக்கும்தான் கல்யாணம். 

*
ஸ்ரீகாந்தி பரசுராமன், ராமதாஸின் மூத்த மகள்; அன்புமணியின் சகோதரி. சொந்த அக்கா பையனுக்கே தன் மூத்த பெண்ணை கொடுத்திருக்கிறார் அன்புமணி 



*
மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்லூயன்ஸ் பாங்க்குயிட்ஸ் - ரிசார்ட்டில் அக்டோபர்  29ஆம் தேதி ரிசப்ஷனும் மற்றும் 30ஆம் தேதி கல்யாணமும் மிகப் பிரமாண்டமாக நடந்தது.

*
ரிசப்ஷன் மேடையின் அலங்காரத்தைப் பார்த்துவிட்டு சிலர், 'உதயசூரியன் உதயமாவதுபோல உள்ளது' என ஆச்சர்யப்பட்டார்கள். இன்னும் சிலரோ 'அது அன்னப்பறவை பறப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது' என்று கிசுகிசுக்க, அந்த இடத்தில் பா... தொண்டர்கள் கூட்டணிப் பற்றியப் பேச்சு ஆரம்பமானது 

*
ரிசப்ஷன் நிகழ்ச்சியில் ராமதாஸ் சந்தன நிற சட்டையும், கறுப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தார். பக்கத்திலேயே அவரது மனைவி சரஸ்வதி ராமதாஸ் அமர்ந்திருந்தார். இருவரும் ரிஷப்சன் முடியும் வரை வரவேற்பு மேடைக்கு எதிரில்தான் அமர்ந்திருந்தனர். சரஸ்வதிக்குக் கால் வலித்ததால், சின்ன நாற்காலி போட்டு அதன்மேல் கால் வைத்து அமர்ந்திருந்தார். 

*
சரியாக 7.10 மணிக்கு ரிஷப்சன் தொடங்கியது. மணமக்கள் ராமதாஸ்-சரஸ்வதி தம்பதியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, மேடையில் அமர்ந்தார்கள். 

*
பா... தொண்டர்களும், ராமதாஸின் குடும்பத்தினரும் மேடைக்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க, கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமானது. திருப்பதி தேவஸ்தானத்தில் சாமியைப் பார்த்தவுடன் எப்படி வேகமாகச் செல்வார்களோ... அதே போன்று தொண்டர்கள் வேக வேகமாக மணமக்களைப் பார்த்து, பரிசுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். 

                                 

*
அன்புமணி, ரிஷப்சனின் ஆரம்பம் முதலே மணமக்களுடன் இருந்தார். 

*
மாப்பிள்ளைக்கும், மகளுக்கும் வேர்க்கும்போது எல்லாம் அன்புமணி தனது கைக்குட்டையை எடுத்து தந்தார். 

*
மேடையில் அன்புமணி விருந்தினர்களைக் கவனிப்பதில் பிஸியாக இருக்க... விழாவுக்கு வந்திருந்த தொண்டர்களையும், உறவினர்களையும் அவர்கள் இருந்த இடத்துக்கே சென்று வரவேற்றார் செளமியா அன்புமணி. 

*
காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கோபண்ணா, ஜி.கே.வாசன், வசந்த் அண்டு கோ உரிமையாளர் வசந்தகுமார்... என பலரும் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். 

*
சரியாக இரவு 7.50 மணிக்கு மண்டபத்தில் நுழைந்தார் ஸ்டாலின். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, செல்வி, மகன் உதயநிதி, சபரீசன் வந்திருந்தார்கள். இவர்களுடன் தமிழச்சி தங்கபாண்டியனும் வந்திருந்தார். 

*
ஸ்டாலின் மேடை ஏறி மணமக்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோது, வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார் வைகோ. இந்த முறை வைகோ அவரது மனைவியுடன் வந்திருந்தார். 

*
ஸ்டாலின் - வைகோ இருவரும் இரவு விருந்தில் தற்செயலாகச் சந்தித்ததுபோல சந்தித்துக்கொண்டார்கள். இந்தச் சந்திப்பில் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. 

*
அப்போதே நிருபர்கள் ஸ்டாலினிடம் இது 'கூட்டணி தொடக்கமா?' எனக் கேள்வி கேட்க, 'இந்தச் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) நினைப்பது நடக்கும்' என்று புன்னகையுடன் கூறினார். 

*
ஸ்டாலின் சொன்ன பதிலை வைத்து வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப, 'ஸ்டாலின் அப்படிச் சொல்லி இருந்தால் எனக்கும் அதில் மகிழ்ச்சிதான்' என்று சொன்னார். 

*
வரவேற்பு விழாவை மிகச் சிறிய பறக்கும் விமானத்தில் படம் பிடித்தார்கள். இதை, தொண்டர்கள் ஆர்வமாகப் பார்த்து ரசித்தார்கள். 
                                   


* இரவும், காலையும் 15,000 நபர்கள் சாப்பிடும் அளவுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. 

*  30
ஆம் தேதி காலை கலைஞர் தலைமையில் கல்யாணம் நடைபெற்றது. கலைஞருடன், ராஜாத்தி அம்மாள், துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு மற்றும் பலர் வந்திருந்தனர். 

*
ராஜாத்தி அம்மாளுக்கும், பொன்முடிக்கும் மெட்ராஸ் . பொன்முடி கறுப்புக் கண்ணாடி அணிந்து வந்திருந்தார். 

*
டி.கே.ரங்கராஜன், ஜி.ஆர்.ராமகிருஷ்ணன், ஏவி.எம்.ராமசாமி செட்டியார் போன்ற முக்கிய விருந்தினர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர். 

*
சரியாக காலை 10.12 மணிக்கு சம்யுக்தா கழுத்தில் தாலி கட்டினார் ப்ரித்தீவன். அப்போது சம்யுக்தா கண்கள் கசிய, அதைப் பார்த்த அன்புமணியும் செளமியாவும் கண் கலங்கினார்கள். 

*
மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசினார். இறுதியாக நன்றியுரை சொன்னார் ராமதாஸ். 

*
அதன்பிறகு மணமக்களை வாழ்த்த வந்தார் நடிகர் கமல்ஹாசன். 



No comments:

Post a Comment