சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2014

நவம்பரில் விற்பனைக்கு வரும் கூகுள் நெக்சஸ் 6!


இந்தியாவில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதை உணர்ந்த கூகுள் தனது புதிய தயாரிப்பான கூகுள் நெக்சஸை வரும் அக்டோபர் 17ம் தேதி இந்தியாவில் முன்பதிவை தொடங்குகிறது.

 கூகுள் தயாரித்திருக்கும் இந்த செல்போனை ஆப்பிள் 6 இந்தியாவில் அறிமுகமாகும் அதே நாளில் முன்பதிவை துவங்குகிறது. கூகுள் நெக்சஸ் 9 டேப்லெட்களையும் அதே நாளில் முன்பதிவை துவங்குகிறது.

இந்த செல்போன்களின் விற்பனை நவம்பர் மதல் வாரத்தில் இந்தியாவில் துவங்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் நெக்சஸ் தயாரிப்புகளான நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன், நெக்சஸ் 9 டேப்லெட்,மற்றும் நெக்சஸ் ப்ளேயர் ஆகியவற்றில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தின் புதிய வெர்ஷன் ஓ.எஸ் ஆன ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் வசதியுடன் வெளியாகவுள்ளது.

 இந்த புதிய வெர்ஷன் புதிய திரை வடிவமைப்புகளையும், பயன்பட்டாளர்களுடனான யூசர் இன்டர்ஃபேஸ் அதிகம் கொண்டதாகவும், ஒரே நேரத்தில் அதிக வேலைகளை செய்யும் மல்டி டாஸ்கிங் திறன் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குரல்வழி செயல்முறையும் இது புரிந்து கொண்டு செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷன்களும் ஏதாவது ஒரு உணவுப்பொருளின் பெயராகவே இருந்து வந்தது.

உதாரணமாக ஐஸ் கிரீம் சான்ட்விச், ஜெல்லிபீன், கிட்கேட் என்ற வரிசையில் தற்போது லாலிபாப் என்ற வெர்ஷனை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெக்சஸ் போனில் தான் முதல் முறையாக லாலிபாப் ஓஎஸ் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment