சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Oct 2014

தங்கம் வாங்கும் தருணம் வந்து விட்டதா ?

சென்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்காவின் எப்..எம்.சி (FOMC ) கூட்டத்தின் சாராம்சம்  அக்டோபர் 8ம் தேதி வெளியானது. இதன் பிறகு தங்கம் மேல்நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.


அதாவது , அமெரிக்காவில் 2015 ஜூன் மாதத்துக்கு மேல் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் சில காலங்களுக்கு தள்ளிப் போடப்படும் என்கிற சூழ்நிலைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.



அமெரிக்க டாலரின் மதிப்பு 6 வளர்ந்த நாடுகளுக்கு எதிராக அதிகரித்து வந்தாலும், சர்வதேச நிதி ஆணையம் (IMF ) அடுத்த வருடத்தின் உலக பொருளாதார வளர்ச்சி, ஏப்ரல் மாத கணிப்பிலிருந்து குறைத்து மதிப்பீடு  செய்துள்ளது கவலை அளிப்பதாக பார்க்கப்படுகிறது

அமெரிக்காவின் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை விகிதம் 6% ம்  குறைந்து காணப்பட்டாலும், அங்கு பணவீக்கமானது, 2% என்கிற  நீண்ட வருட இலக்கை எட்டாதது, வட்டி விகிதங்களை உயர்த்த முடியாமைக்கு முக்கிய காரணமாக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ்  நினைக்கிறது

மேலும் நீண்ட வருடங்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் வைத்திருப்பது, பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால், ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. சொல்லப்போனால், 2015க்கு பிறகுதான் வட்டி விகித அதிகரிப்பு பற்றி யோசிக்க முடியும் என்கிற நிலை வரும்பட்சத்தில், தங்கத்தை நோக்கி முதலீடுகள் வரத் துவங்கும்.   


இதுவரை தங்கம் எந்த காரணத்தினால் சரிந்து வந்ததோ, அதற்கு நேர் மாறாக செய்திகள் வரத் துவங்கியுள்ளன.



No comments:

Post a Comment