சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Oct 2014

புளியஞ்செட்டியாரின் பேரன் " ராஜா "


இவரை யாரென தெரிகிறதா...? திருப்பூரில் குறைந்தது 5 வருடங்களாக வசிப்பவர்களுக்கு தெரியாமல் இருக்காது ...முக்கியமாக வீட்டில் கைக்குழந்தைகள் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்காமலிருந்தால்.."அய்யோ பாவம்' தான் அவர்... ( தெரியாமல் இருந்தால் அவர் ஊருக்கு புதியவர் என அறிக) 


                         


மூலிகை , சித்த மருந்துகளை கடந்த எழுபது,எண்பது ஆண்டுகளாக விற்பனை செய்து கொண்டிருக்கும், திருப்பூர் ஈசுவரன் கோவிலை ஒட்டிய "புளியஞ்செட்டியார்"கடை காலம்சென்ற புளியஞ்செட்டியாரின் பேரன் " ராஜா " தான்...

இரண்டு நாட்களுக்கு முன்னால் அவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன் ...

அவரது கடைக்குள் அவரை தவிர யார் நுழைந்தாலும் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான்.ஒரு ஒழுங்கில்லாமல் அப்படி இறைந்து கிடக்கும் ...

" ஐயா, கடையை ஒழுங்குபடுத்தினால்தான் என்ன ?" கேட்டேவிட்டேன் நான்.
"வியாபாரம் கெட்டுபோய்விடும் தம்பி ,இந்த கடை இப்படித்தான் இருக்கணும்.நல்லா வைச்சா நடக்காது" கொஞ்சம் கூட தயங்காமல் சொன்னார்.. ( இதைப்போல இன்னும் சில இடங்களில் கூட இப்படி வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன் , கேட்டபொழுது அவர்களும் இந்த காரணத்தையே சொன்னார்கள் )...??

விசயம் இதுதான்....இவருக்கு வயது 70 .. இவருக்கு பிறகு இந்த தொழிலை செய்ய யாருமில்லை .... அத்தனை மூலிகைகளும் , அதன் மருத்துவ குணங்களும் இவருக்கு அத்துப்படி...இவர் காலத்திற்குள்ளாக இவரின் ஆழ்ந்த மூலிகை ஞானத்தை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்..

ஒரு சின்ன உதாரணம்....என் மனைவி கருவுற்றிருந்த பொழுது , விடாமல் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டிருக்க , எந்த ஆங்கில மருந்துகளை கொடுத்தாலும் பயனற்றுப்போக , இறுதியில் இவர் கடையை கேள்விப்பட்டு அவரே தேடிப்போய் பார்த்தேன்..... மனிதர் "ஆல்பக்கோடப்பழம் "என்ற பழத்தை வாந்தி வருகிற சமயத்தில் வாயில் போட்டு சுவைக்க சொன்னார்....இனிப்பும்,புளிப்பும் கலந்த சுவை கொண்டது.... என்ன அதிசயம்... காலை நேரம் ஏற்படும் வாந்தியை தவிர, மற்ற நேரங்களில் நின்று போனது என் மனைவிக்கு...

இவருடைய அனுபவத்தை , ஆழ்ந்த மூலிகை அறிவை தயவு செய்து அரசோ, மூலிகை ஆராய்ச்சி அறக்கட்டளைகளோ பதிவு செய்து
வைத்துக்கொள்வது தமிழ் சித்த வைத்திய முறைக்கு செய்யும் பெரும் தொண்டாக இருக்கும்.....

அன்றைக்கு ஒரு வ.வே.சு. அய்யர் ஓடி,ஓடி ஓலைச்சுவடிகளை சேகரித்ததால் இன்றைக்கு தமிழின் வரலாறு தெரிந்தது, இனிமை புரிந்தது நமக்கு....

இதோ நம்மிடையே மூலிகை மகத்துவம் அறிந்த ஒரு சித்தராய் இவர்..... புதையலை எடுத்து, காப்பாற்றிக்கொள்வது நம் கடமை...!!


No comments:

Post a Comment