சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Oct 2014

பென்டிரைவ் வைரஸ்கள்... ஃபைல்களை மீட்பது எப்படி?

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு ஃபைல்களை நகல் எடுத்துச் செல்ல பெரிதும் பயன்பட்டு வருவது, பென்டிரைவ் எனும் கையடக்க சேமிப்புச் சாதனம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஃபிளாப்பி, சிடி/டிவிடி போன்றவற்றையே அதிகளவில் பயன்படுத்தி வந்தோம். ஆனால், பென்டிரைவின் வருகைக்குப் பிறகு, ஃபிளாப்பி டிஸ்க் பயன்பாடு அடியோடு முடிவுக்கு வந்துவிட்டது. சிடி/டிவிடி-யின் பயன்பாடும் வெகுவாகக் குறைந்து வருகிறது. காரணம், பென் டிரைவின் கொள்ளளவு அதிகம் என்பதோடு... சட்டைப் பாக்கெட்டில், கீசெயினில் என்று எளிதாக எடுத்துச் செல்லுமளவுக்கு இருப்பதுதான். கணினியில் இருந்து மிக வேகமாக பைல்களை நகல் எடுக்க முடிவதும் இதன் கூடுதல் சிறப்பு. இப்படி எத்தனையோ சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், வைரஸ் பிரச்னைதான் சமயங்களில் படுத்தி எடுத்திவிடும்










பிரச்னைகள்!

*
பிரவுசிங் சென்டர், பொதுக் கணினி என பயன்படுத்தும்போது மிக எளிதில் பென்டிரைவில் வைரஸ் புகுந்துவிடும். அதனால், பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஒவ்வொரு முறையும் தவறாமல் வைரஸ் ஸ்கேன் செய்தபின்னரே பயன்படுத்த வேண்டும். கணினியில் இருந்து நீக்கும்போது, தவறாமல்சேஃப்டி ரிமூவ்கொடுத்தபிறகே நீக்கவேண்டும். இல்லாவிட்டால் பென்டிரைவ் மற்றும் கணினி பழுதாகும்.

*
பென்டிரைவை தாக்கும் வைரஸில் பல வகைகள் உண்டு. பெரும்பாலானவை ஃபைல்களை மறைத்து ஷார்ட்கட் பைல்களாக மாற்றிக் காட்டும். சில வைரஸ், ஃபைல்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். ஷார்ட்கட் ஃபைலாக மாற்றப்படும்பட்சத்தில், எம்.எஸ் டாஸ் (MS DOS) உதவியோடு சுலபமாகச் சரிசெய்துவிடலாம். ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் அதை எடுக்க வழி உள்ளது. 

எப்படி சரிசெய்வது?

*
முதலில் பென்டிரைவை கணினியில் செருக வேண்டும்.

*
பிறகு, Mycomputer ஓபன் செய்து, பென்டிரைவ் எந்த டிரைவ்வில் உள்ளது என பார்க்கவேண்டும். உதாரணமாக, H டிரைவ்  என்று எடுத்துக்கொள்வோம்.

* Start
பட்டணை க்ளிக் செய்து அதில் Run ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும். அதில் CMD என டைப் செய்து Enter பட்டணை அழுத்தினால், MS DOS பக்கமானது திரையில் தோன்றும். பின் அதில் H: என டைப் செய்து Enter பட்டனை அழுத்த வேண்டும்.

*
பின்பு, attrib -s -h /s /d *.*  என சரியாக டைப் செய்து, Enter பட்டனை அழுத்தவும். பிறகு, சில வினாடிகள் கழித்து, My computer சென்று பென் டிரைவை ஓபன் செய்தால், ஏற்கெனவே இருந்த அனைத்து ஃபைல்களும் முழுமையாக திரும்பவும் வந்திருப்பதைப் பார்க்கலாம்.


No comments:

Post a Comment