சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Oct 2014

கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவும், நம்மூர் எஸ்டிஆரும்


ற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறுஎன்பது மாதிரி கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பரபரப்பை கிளப்பிட்டு இருக்கு 'பரப்பன அக்ரஹாரா'... "இதுல இது வேறயா..?" என்று முணுமுணுக்கிறார்கள்.
இது அரசியல் மேட்டர் இல்லீங்க... ஆனா, 'சினிமாவுக்குள்ள புகுந்துவிட்ட அரசியல்என்று இது சம்பந்தமாக காட்டமாகப் பேட்டி கொடுத்துள்ளார் கன்னடத்து நடிகை ஹர்ஷிகா பூனாச்சா.
 



விஷயம் பழசுதான். இந்த சீனில் ஹீரோ - வழக்கம்போல நம்ம வம்பு நாயகன் சிம்புதான்! சென்ற மாதம் மலேசியாவில் நடந்த 'ஷிமிமிவிகி அவார்டு' ஃபங்ஷனில் கலந்து கொள்ளச் சென்றவர்களில், கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவும், நம்மூர் எஸ்டிஆரும் அடக்கம். 

அதுதான் இப்போது பிரச்னைக்குள்ளாகியிருக்கிறது வலைதளங்களில். அங்குள்ள மலேசிய ஹோட்டல் ஒன்றில், சிம்புவும் ஹர்ஷிகாவும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதுபோன்ற ஒரு வீடியோ, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்டர்நெட் என்று வைரலாகப் பரவி கிடக்கிறது
விஷயம் கேள்விப்பட்டுநமக்குத்தான் இது புதுசு இல்லையேஎன்பது மாதிரி அசால்ட்டாக இருந்து விட்டார் சிம்பு. ஆனால், நம்ம பயலுகதான் பாய்சன் கிடைச்சாலே பாயாசம் மாதிரி சாப்பிடுவாய்ங்களே? பாயாசமே கிடைச்சா......?

கடந்த ஒரு மாதத்தில், ‘டீஸரை விட அதிகம் பேர் ஷேர் செய்யப்பட்ட வீடியோ என்ற பெரும் புகழ் பெற்றுவிட்டது மேற்படி விஷயம்பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, ஒரு கட்டத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கி எழுந்து ட்வீட்டி விட்டார் ப்யூட்டி ஹர்ஷிகா!

‘‘
சில நாட்களுக்கு முன்புதான் இந்த வீடியோவை நான் பார்த்தேன். சத்தியமாக அது நாங்கள் இல்லை. சில வேலைவெட்டி இல்லாதவர்கள் பண்ணிய முட்டாள்தனமான செயல் இது. வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் இப்படிச் செய்திருக்கிறார்கள். நீங்கள் விளையாட என் போன்ற நடிகைகளின் வாழ்க்கைதான் கிடைத்ததா?’’ என்று காட்டமாக ட்வீட்டி இருக்கிறார்.
மேலும், சிம்புவும் நானும் அப்படிப்பட்ட நண்பர்கள் கிடையாது; எங்களுக்குள் அப்படி எந்த புரிதலும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார் அம்மணி.

சிம்புவும் போனா போகுது என்று சமீபத்தில்தான் இந்த வீடியோ பதிவு பற்றி மறுப்பு தெரிவித்திருக்கிறார் அசால்டாக.



No comments:

Post a Comment