செல்போன், ஈ-மெயில், வாட்ஸ் அப், ஆப்ஸ், சி.சி.டிவி கேமரா, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் இவற்றால் நிகழும் குற்றங்கள் ஒவ்வொன்றும் சைபர் கிரைம் குற்றங்கள். இத்தகைய சைபர் குற்றங்களால் தினம், தினம் அல்லாடும் பெண்கள் ஏராளம். இந்நிலையில் பெண்கள் எல்லா இடங்களிலும் அல்ர்டாக இருக்க வேண்டிய தருணம் இது.
நகைக் கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பொது கழிவறைகளில், ஹோட்டல்களின் படுக்கை அறைகளில், பெரிய, பெரிய துணிக்கடைகளின் டிரையல் ரூம்களில் என நமக்குத் தெரியாமலே நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
மிக, மிக ரகசியமாய் நூதன முறையில் இந்த கேமராக்கள் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சமும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மறைத்து வைக்கப்படுகிறது. இப்படி கண்காணிக்கப்படும் ஒரு பெண்ணின் உருவத்தை வேறொரு நிர்வாண உருவத்துடன் பொருத்தி அந்த பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் அளவிற்கு சில சமூக குற்றவாளிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் செல்போனால் நிகழும் குற்றங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் நிகழும் குற்றங்களும் ஏராளம். நம்முடைய பாஸ்வேர்டு மட்டுமல்ல... நமக்குத் தெரியாமலேயே நாமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சைபர் குற்றங்களின் வீரியம் என்ன? பெண்கள் எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் பேசினோம்.
“இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள் கூட தேவையில்லாமல் இந்த சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மார்டன் உலகத்தில் இன்று செல்போன் வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். நம் குடும்ப விவரங்களிலிருந்து நம் அந்தரங்கம் வரை எல்லாமே அடுத்தவரால் திருடப்பட்டு விடுகிறது. அதனால் செல்போனை எப்போதும் ஒரு செக்கியூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. செல்போனுக்கு அடுத்த பிரச்னை ஃபேஸ்புக். இன்று பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை இந்த ஃபேஸ்புக் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறாகள்.

காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து, இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும் வரை ஒன்று விடாமல் எல்லா கதைகளையுமே ஃபேஸ்புக்கில் கொட்டி விடுகிறார்கள். இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் சேகரிக்க முடியும். உதாரணத்திற்கு ‘நான் கொல்லிமலைக்கு தனியாக போகிறேன்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் என்னவாகும்? அதை யாராவது ஒருவர் ஃபாலோ செய்து உங்களை பின் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்ய நேரிடும். அதே போல் அறிமுகம் இல்லாத நபர்களின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்கும் போது தேவையில்லாமல் அந்த நபரால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உங்கள் புகைப்படங்களும் மார்பிங் என்ற நவீனமுறைப்படி ஆபாசமாக்கப்பட்டு உங்களை அடுத்தவர் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
No comments:
Post a Comment