சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Oct 2014

இது பூட்டுகளுக்கு பூட்டு போடும் நேரம்!

"பூட்டு சாவி பயன்பாடு, லெமூரியா கண்டத்தோடு அழிந்து விட்டது!"  என்று இனி விவேக் தன் படத்தில் சொன்னால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.


அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மொபைல்போன் மூலம் வீடு மற்றும் அலுவலகக் கதவுகளை பூட்டவும், திறக்கவும் புதிய மென்பொருள் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இதற்குதி ஆகஸ்ட் லாக்என்று பெயரிட்டுள்ள அந்நிறுவனம், அதற்கான விலையாக 249 டாலர்களை நிர்ண்யத்துள்ளது. இந்திய மதிப்பீட்டில் இதன் விலை சுமார் 16,000. 





ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்கள் வாயிலாக இதை இயக்கலாம். கதவுகளை திறக்க போனை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்த கருவி அலுமினியத்தால் செய்யப்பட்டு மென்பொருளால் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பொருத்த 10 முதல் 15 நிமிடங்கள் வரைதான் ஆகும்.

இந்த மென்பொருள் ப்ளூடூத், பொருத்திய ஸ்மார்ட்ஃபோன்கள் மூலம் இயக்கலாம். இதன் சிறப்பு மென்பொருள் உதவியுடன் மட்டும் பயன்படுத்தாமல் சாவியைக் கொண்டும் இயக்கலாம். பேட்டரியின் இயக்கம் குறையும்போது தாமாகவே மெயில் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

யார்? யார்? எந்த கதவுகளை திறக்கிறார்கள் என்பதை அந்த நேரத்துடன் உங்களுக்கு இது காட்டுகிறது. பல ஆராய்ச்சிகளின் மூலம் பல்வேறு மக்கள் இதை வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment