சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

நாடாளுமன்ற உணவகங்களின் உணவுகள் விலை உயர்வு!

நாடாளுமன்றத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உணவுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் கடுமையான பணவீக்கம் நிலவி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு மட்டும் மானிய விலையில் உணவுகள் வழங்கப்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தது. இதையடுத்து, இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உணவு குழுவுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உணவுகளின் விலையை மாற்றி அமைத்து சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதுவரை ரூ.18-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஜெக் தாளி இனி ரூ.30-க்கும், ரூ.33-க்கு விற்கப்பட்ட நான்வெஜ் தாளி ரூ.60க்கும் விற்பனை செய்யப்படும். அதேபோல், ரூ.29-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிக்கன் கறி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படும்.

மேலும், இந்த உணவுகள் லாபம், நஷ்டம் இன்றி அசல் விலையில் விற்கப்படும் எனவும், உணவுகளின் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் எனவும், இந்த விலை உயர்வு மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment