அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
பதவி பறிப்பு ஏன்?
நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இன்று காலை புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது என்று அலட்சியமாக பதில் சொன்னார் நாஞ்சில் சம்பத்.
இந்நிலையில், இன்று தந்தி தொலைக்காட்சி கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிக்காக, ரங்கராஜ் பாண்டே கேள்விகளுக்கு, நாஞ்சில் சம்பத் பதில் கொடுத்துள்ளார். அதன் ப்ரமோ வீடியோ அத்தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த டிவியிலும், நாஞ்சில் கூறிய பதில்கள் சர்ச்சைக்குறியதாக உள்ளது.
பெருவெள்ளம் புரட்டி போட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடக்கும்போது சரியா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே என்று கேள்விக்கு நாஞ்சில் சம்பத், 'எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா' என்று பதில் சொல்லும் காட்சியும் காண்பிக்கப்படுகிறது. இதே கேள்விக்கான பதில்தான் அதுவா என்பது இரவு நிகழ்ச்சி பார்க்கும்போதுதான் தெரியும் என்றாலும், இக்கேள்விக்கு இப்பதிலைத்தான் அவர் அளித்திருப்பார் என்ற எண்ணத்தில் நெட்டிசன்கள் இப்போதே ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
வெள்ளத்தில் உயிரிழந்த 500 பேரை ஏன் கண்டுகொள்ளவில்லை, அதிமுக பொதுக்குழுவில் அதுதொடர்பாக ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்ற கேள்விக்கு, தேவையில்லை, நிறைவேற்றவில்லை என்று நாஞ்சில் பதிலளிப்பது போல காட்சி ஒளிபரப்பாகிறது.
இந்தப் பேட்டிகள் உண்டாக்கிய கசப்பு உணர்வுகள் பரவுவதற்கு முன்னரே, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாஞ்சில் சம்பத் பதவியைப் பறித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது!
தனியார் தொலைகாட்சிக்கு நாஞ்சில் சம்பத், அளித்த பேட்டியில் வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணித் தலைவர்களை கடுமையாக விமர்சித்ததுதான், நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் நடந்து முடித்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் செயலாளர் ஜெயலலிததா, தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தார். தற்போதைய சூழலில் தமிழகத்தை பொறுத்த வரை, அதிமுக அசுர பலத்துடன் இருப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் கொண்டு வருவதை கடந்த 4 சட்டமன்ற தேர்தல்களில் தமிழக மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதை அதிமுக அறியாமல் இல்லை.
இதனால் மற்ற தேர்தல் போல, வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுக தலைமை கருதவில்லை. கடுமையான போட்டி இருக்கும் என்றும் பார்டரில்தான் பாசாகும் நிலை இருக்கும் என்பதையும் அதிமுக தலைமை புரிந்து வைத்திருக்கிறது. அதனாலேயே பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக தலைமை இப்படி ஒரு சூசக அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.கவுடன் நெருங்கி வரும் வேளையில், தே.மு.தி.க சண்டிக்குதிரையாக திரியும் நிலையில், அதிமுகவுக்கு கூட்டணி சான்ஸ் மக்கள் நல கூட்டணியுடன் மட்டும்தான் அமைக்க முடியும். இந்த கூட்டணியை முன்னெடுத்து செல்பவர் வைகோ. விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் உள்ளனர். தற்போது வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் மக்கள் நல கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நல கூட்டணியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் எளிதாக மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து விட வாய்ப்புண்டு. அதனை கருத்தில் கொண்டே சூழலுக்கு ஏற்ப கூட்டணி என்ற அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் அதிமுக துணை பொதுத் செயலாளரான நாஞ்சில் சம்பத் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மக்கள் நல கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார். மக்கள் நல கூட்டணி ஒரு வெத்து வேட்டு எனும்விதத்தில் மதிமுக தன்னால்தான் வளர்ச்சி பெற்றதாகவும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அந்த பேட்டியில் நாஞ்சில் வைகோ பற்றி இவ்வாறு கூறுகிறார், '' மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வைகோ. அவருக்கு கட்சினு ஒன்று தமிழ்நாட்டுல இருக்குதா?. அந்த கட்சியை ஊர் ஊராக சுமந்தவன் நான். அந்த கட்சிக்கு வானமும் சிறகுமாக இருந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.கட்சியில் இருந்து யார் யார் விலகினார்கள் என்ற விபரம் வைகோவுக்கு தெரியாது. அந்த கட்சி தரை மட்டமாகி விட்டது தமிழ்நாட்டில் வரவில்லாத ஒரே கட்சி மதிமுகதான். சங்கரன்கோவிலில் அவரது சொந்த தொகுதியில், வைகோவை ஆதரித்து வீதி வீதியாக பேசியவன் நான். அங்கேயே கரை சேர முடியதவர் வைகோ '' என்றார்.
வைகோவை மட்டுமல்ல மற்ற மக்கள் நல கூட்டணித் தலைவர்களையும் விமர்சிக்க நாஞ்சில் சம்பத் தவறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தை கட்சியையும் கூட நாஞ்சில் சம்பத் கடுமையாக தாக்கிப் பேசினார். சூழலுக்கு தக்க பேசுவோம், என்று அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், நாஞ்சில் மக்கள் நல கூட்டணித் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசியதை அதிமுக தலைமை ரசிக்கவில்லையாம். விளைவு நாஞ்சிலின் பதவி பறிப்பாம்!

No comments:
Post a Comment