வரும் 2016- சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு தி.மு.க.வுக்கே என்றொரு தகவல் கருத்துக் கணிப்பு மூலம் தெரிவதாக வந்த தகவலால், பிற கட்சிகளை விட ஒரு படிமேலாக தி.மு.க. தலைமையே அதிக டென்ஷனுக்கு ஆளாகியிருக்கிறது என்கிறார்கள். சந்தோஷப்படவேண்டிய விஷயத்துக்கு ஏன் டென்ஷனாகிறார்கள் என்ற கேள்வியுடன் அறிவாலயத்தை வலம் வந்தோம்.
எந்த கல்லூரியும் இதுவரை செய்ய முன்வராத 'கருத்துக் கணிப்பு' பணியை லயோலா கல்லூரி மட்டுமே செய்து வந்தது. பல விஷயங்களை கருத்துக் கணிப்புக்காக லயோலா கையில் எடுத்தாலும், தேர்தல் கருத்துக் கணிப்பே பெரிய அளவில் பேசப்பட்டது. பிறவற்றிலான கருத்துக் கணிப்பு பிற்காலங்களில் விமர்சனத்துக்கு ஆளாகாமல் போனாலும் தேர்தல் கணிப்பு மட்டும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது, கணிப்பு பொய்த்த போதெல்லாம்.
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மாணவர் குழுக்களே அப்போதெல்லாம், இந்தக் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வந்தன. இப்போது மீண்டும் சிக்கலில் லயோலா தலையை சிலர் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். 'நாங்கள் செய்யாத ஒரு வேலையை யாரோ செய்து விட்டு, நாங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக கதை கட்டியிருக்கிறார்கள்' என்றெல்லாம், ஒரிஜினல் கருத்துக் கணிப்புக்குழு தரப்பில் புலம்பல் கேட்க ஆரம்பித்திருக்கிறது.
இப்போது வெளியாகியுள்ள புதிய கருத்துக் கணிப்பு, முன்னாள் மாணவர்கள் குழு 'பண்பாட்டு மக்கள் தொடர்பகம்' என்ற பெயரில் வெளியிடப் பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுழன்று, 5176 பேரிடம் தாங்கள் கருத்துக் கணிப்பு நடத்தியதாக சொல்கிறது இந்த குழு.
கருத்துக் கணிப்பின் முடிவாக, 35.6% தி.மு.க.வுக்கும், 33.1% அ.தி.மு.க.வுக்கும் மக்கள் (செல்)வாக்கு இருப்பதாக சொல்லியுள்ளது. அதே கருத்துக் கணிப்பு முதல்வராகும் வாய்ப்பில் முதலிடம் கருணாநிதி, இரண்டாமிடம் ஸ்டாலின், மூன்றாமிடம் ஜெயலலிதா என்றும் சொல்லியிருக்கிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு ஓப்பன் பிரஸ்மீட் வரை போய் விட்டதோடு, இதை கணித்தவர்கள் லயோலாவின் முன்னாள் மாணவர்கள் என்றும் தகவல் ஓட, வழக்கமாக கணிப்பை வெளியிடும், 'ரிசர்ச் அசோசியேட் பீப்புள் பவுண்டேசன்' சார்பில், கார்த்திக் என்பவர் மீடியாக்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், "நாங்கள் அவர்களில்லை, இந்தக் கருத்துக் கணிப்பை செய்தது நாங்களல்ல" என்றிருக்கிறார்.
முதலில் வந்த கருத்துக் கணிப்பை விட, அந்தக் கணிப்பே தவறு அதைச் செய்தது நாங்களல்ல, என்ற இரண்டாவது தகவலே 'அறிவாலயம்' ஏரியாவை சூடாக்கி விட்டிருக்கிறதாம்.
சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்ட திமுக தலைமை, “இரண்டுவாரம் கூட ஆகலை, இப்படித்தான் ஒரு சூட்டை ஃபேஸ்-புக்கில் போட்டு விட்டுட்டீங்க... இப்போது மீண்டும் அதே மாதிரி ஒரு சூட்டை கிளப்பி இருக்கீங்க. உதவி செய்யலைன்னாக் கூட பரவாயில்லை ஃபாதர், சும்மா இருந்தா போதும்... நீங்க கட்சிக் காரர்னு எல்லோருக்குமே தெரியும். புரியுதா, புரியுதா என்று பலமுறை கோபமாகச் சொல்லி லைனை துண்டித்துவிட்டு சைலண்ட் ஆகி விட்டாராம் தலைவர்.

No comments:
Post a Comment