சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

'பீப்' பாடலுடன் சென்னையில் புத்தாண்டு உற்சாகக் கொண்டாட்டம்!

சிம்புவின் 'பீப்' பாடலுக்கு பல்வேறு பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் அந்த பாடலை வரவேற்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நடிகர் சிம்பு, பெண்களை ஆபாசமாக வர்ணித்து பாடிய 'பீப்' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பல்வேறு தரப்பினர் காவல்நிலையங்களிலும் புகார் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் சிம்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிம்புவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதேபோல், சென்னையில் முக்கிய பகுதியில் உள்ள ஒரு 'பப்'பிலும் ஆடல், பாடல்களுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தின்போது, சர்ச்சைக்குரிய சிம்புவின் 'பீப்' பாடலும் ஒலிபரப்பப்பட்டிருக்கிறது. இந்த பாடலுக்கு  பல்வேறு இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆடியிருக்கிறார்கள். அரங்கத்தில் அதற்கு எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை. உற்சாக மனநிலையுடன் அனைவரும் தங்கள் நடனத்தை தொடர்ந்தபடி இருந்தனர்.
பீப் பாடல் சர்ச்சை ஒருபக்கம்... அதை வைத்து உற்சாகம் மறுபுறம். 
நாணயத்துக்கு எப்போதும் இரண்டு பக்கம் இருக்கும்தானே..!
பின் குறிப்பு: அந்த பார்ட்டி ஹாலில் பீப் பாடல் ஒலிப்பதும், அதற்கு இளைஞர்கள் நடனமாடும் வீடியோவும் நம் வசம் உள்ளது. ஆனால், அதை பொது தளத்தில் பகிர வேண்டாமென்ற நிலைப்பாடு காரணமாக அதை இங்கே பகிராமல் தவிர்க்கிறோம்.

No comments:

Post a Comment