சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

2015ல் சந்தையில் கலக்கிய சிறந்த கேட்ஜெட்ஸ்!

2015-ம் ஆண்டு,  எதில் புரட்சியை கண்டதோ இல்லையோ கேட்ஜெட்ஸ் உலகில் மிகப்பெரிய மற்றும் ஆரோக்கியமான புரட்சியைக் கண்டது என்பதே உண்மை. அதன் பலனாக இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறந்த கேட்ஜெட்ஸின் பட்டியல் இதோ...

மைக்ரோசாப்ட் ஹாலோ லென்ஸ் ( Microsoft HoloLens ) :
முற்றிலும் “அவுட் ஆஃப் தி ஸ்க்ரீன்”  கேட்ஜெட்டாக வலம் வரும் இதை மூக்குக்கண்ணாடி போல் நாம் அணிந்துகொண்டால்,  நம் எதிரே விரிவது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளின் 3D ஹாலோகிராம் பிம்பங்கள். உதாரணமாக நீங்கள் உங்கள் லேப்டாப்பில்,  ஒரு பைக்கினை டிசைன் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இந்த லென்ஸை அணிந்துகொண்டால்  அந்த பைக்கின் முன்மாதிரி உங்கள் கண் முன் விரியும். இந்த பிம்பங்களை நீங்கள் உங்கள் கைகள் அல்லது வாய்ஸ் பயன்படுத்தி உங்கள் விருப்பத்திற்கேற்ப எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

Link :
https://www.microsoft.com/microsoft-hololens/en-us

பிரிண்ட் கேஸ்   ( Print Case ):
இதன் மூலம் உங்கள் மொபைலை இன்ஸ்டன்ட் கேமராவாக மாற்றிக்கொள்ளலாம். இது வெறும் மொபைல் கேஸ் தான். இதனை உங்கள் மொபைலிற்கு அணிவித்தால் போதும். உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்களை இதற்கென்ற பிரத்யேக ‘ப்ரிண்ட் ஆப்’ -இல் நீங்கள் பதிவேற்றம் செய்து,  இந்த கேஸினுள் வைக்கப்பட்ட போட்டோ ஷீட்டில் உங்களுக்கான போட்டோவை பிரிண்ட் செய்து,  இந்த கேஸின் மறுமுனையில் அந்த பிரிண்டட் போட்டோவை பெற்றுகொள்ளலாம்.

Link:
https://www.pryntcases.com/

லைட் எல்16 கேமரா ( Light L16 C amera ):
மொத்தம் பதினாறு 13 மெகா பிக்ஸல் கேமராக்களை உள்ளடக்கிய ஒரே பாக்கெட் சைஸ் கேமரா. போட்டோகிராபி உலகில் ஒரு அமைதியான புரட்சி என்று வர்ணிக்கப்படும் இந்த கேமராவில் உள்ள அத்தனை லென்ஸ்களின் மூலம் எடுக்கப்படும் படங்கள்,  இது வரை வெளிவந்த டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு தெளிவான, ஆழமான படங்களை எடுக்கவல்லது. ஒரு காட்சியை அனைத்து கேமராக்களும்  எடுத்த அனைத்து படங்களையும் மெர்ஜ் செய்து வரும் ஒவ்வொரு புகைப்படமும்  கிட்டத்தட்ட 52 மெகா பிக்ஸல் அளவிலானவை.


லில்லி ட்ரோன் கேமரா ( Lily ) :


ஆளில்லா விமானங்களான ட்ரோன்களின் மிகப்பெரிய புரட்சி நடந்த ஆண்டு 2015  என்று கூறலாம். ராணுவத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த ட்ரோன்கள் மீட்புப்பணிகள் , சர்வைலன்ஸ், டெலிவரி என நம் அன்றாட வாழ்வில் சற்றே அதிகமாக தலைகாட்ட ஆரம்பித்தபோது ஆர்ப்பாட்டமே இல்லாமல் எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளியது இந்த கில்லி. மனிதனின் கண்ட்ரோல் இல்லாமலேயே தானாக நம் இருப்பிடத்தை அறிந்து,  நம்மைச் சுற்றிக்கொண்டே நம் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் படம்பிடித்து தள்ளும் இந்த கேமராவை காற்றில் தூக்கி வீசிவிட்டால் போதும்,  இதன் இறக்கைகள் விரிந்து தானாக பறக்கத்துவங்கிவிடும்.

Link:
https://www.lily.camera/

லைவ்ஸ்க்ரைப் 3  ஸ்மார்ட் பென்  ( Livescribe 3 Smartpen):


ஸ்மார்ட் அக்செஸரீஸ் வரிசையில் இப்பொழுது பேனா. லைவ்ஸ்க்ரைப் நோட்புக்கில் நீங்கள் எழுதுவதை இதன் இன்ப்ரா ரெட் கேமரா பதிவு செய்யத்தொடங்கும் அந்த கணத்திலேயே உங்களைச் சுற்றி கேட்கும் ஒலியை அந்த நோட்ஸுடன் ஸிங்க் செய்து இதன் பிளாஷ் மெமரியில் பதிவு செய்துகொள்ளும் இந்த ஸ்மார்ட் பென். கையில் பேனா பிடித்திருக்கும் உணர்வையே மறக்கச் செய்யும் டிசைன் கொண்ட இந்த ஸ்மார்ட்பென்னில் 400 முதல் 800 மணிநேரங்கள் வரையிலான ஆடியோக்களை பதிவு செய்துகொள்ளலாம். இதன் பேட்டரி பதினான்கு மணி நேரங்கள் தாக்குப்பிடிக்கிறது. 

Link:
https://www.livescribe.com/en-us/smartpen/ls3/

அமேசான் எகோ ( Amazon Echo ) :


இந்த வருடம் முழுவதும் கூகுள் முதல் ஃபேஸ்புக் வரை அனைத்து நிறுவனங்களும் ஏதேனும் ஒரு கண்டுப்பிடிப்பில் மும்முரமாக இருக்க,  அமேசான் தன் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக பரிசளித்தது இந்த அமேசான் எகோ. வாய்ஸ் கண்ட்ரோல்டு ஸ்பீக்கர் என்பதைத் தாண்டி நிற்கும் இதன் ஸ்பெஸிஃபிகேஷன்கள் சந்தைக்கு புதிது. ‘அமேசான்’ அல்லது ‘அலெக்ஸா’ என்ற கட்டளைச்சொல்லின் மூலம் இயக்கப்படும் இதனிடம் நீங்கள் டைம், வெதர் ரிபோர்ட் கேட்கலாம், டைமர் செட் செய்யலாம், மளிகை லிஸ்ட் தயார் செய்ய சொல்லலாம், இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை கேட்கலாம், கடந்த மேட்சில் சென்னையின் எஃப் சி அணியின் ஸ்கோர் பற்றி விவாதிக்கலாம்... இன்னும் எவ்வளவோ என நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல். 

Link:
http://www.amazon.com/Amazon-SK705DI-Echo/dp/B00X4WHP5E  

ஃபிட் பிட் சார்ஜ் ஹச் ஆர் ( Fit Bit Charge HR ) :


2015 -ம் ஆண்டின் சிறந்த ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது இது. ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் என்பன நம் இதயத்துடிப்பு , நாம் உட்கொள்ளும் கலோரிக்களின் அளவு , நாம் நடக்கும் தூரம் போன்ற உடலின் சில முக்கிய ஹெல்த் பாக்டர்களை தொடர்ந்து கண்காணிக்க உதவும் வாட்ச் போன்ற கருவிகள். மற்ற எல்லா ஃபிட்னஸ் ட்ராக்கர்களும் தினந்தோறும் நாம் நடக்கும் தூரத்தை கணக்கிடுவதில் ஏதேனும் ஒரு பிழை இழைத்தாலும் இது தனக்கான வேலையை மிகத்துல்லியமாக செய்து முடிக்கிறது. தானாகவே செயல்படத் துவங்கும் ஸ்லீப் ட்ராக்கர், வைப்ரேஷன் வசதி கொண்ட அலாரம், குறைந்த விலை ஆகியவை மற்ற ஃபிட்னஸ் ட்ராக்கர்களை விட இந்த ஃபிட் பிட் –ஐ சந்தையில் முதலிடம் பிடிக்க வைத்திருக்கின்றது .

Link:
https://www.fitbit.com/in/chargehr

சோனி ஸ்மார்ட் வாட்ச் 3 ( Sony Smartwatch 3) :

ஆப்பிள், சாம்சங் ,எல்.ஜி. ,பெப்பிள் என ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பல ஜாம்பவான்களின் தலை தென்பட்டாலும் சோனியின் பங்களிப்பு மிகவும் நுட்பமானது. இதன் GPS –இல் ஆப்பிள் தோற்றுப் போனது. இதன் வசீகரமான ஸ்லீக்கி டிசைனில் சாம்சங் தோற்றுப்போனது. இதன் ஸ்போர்ட்ஸ் ஸ்டைலிங் வசதிகள் மற்றும் விலையே பெப்பிள் ,மோட்டோரோலா, எல்.ஜி. போன்ற பெருநிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களை சந்தையில் பின்னுக்கு தள்ளியதற்கான முக்கியக் காரணிகள் !!! 

Link:
http://www.sonymobile.com/global-en/products/smartwear/smartwatch-3-swr50/

ஐபேட் ஏர் 2 ( Ipad Air 2 ):


ஐபேட் ஏர் 2 இந்த ஆண்டின் சிறந்த டேப்லெட். அமேசான் நிறுவனத்தின் டேப்லெட்கள் மிகக் குறைந்த விலையானதாக இருந்தாலும் பெர்பார்மன்ஸிலும் ஸ்க்ரீன் குவாலிட்டியிலும் ஐபேட் ஏர் 2-ஐ இது வரை முந்தியதில்லை. மேலும் ஐபேட் ஏர் 2 உடன் ஒப்பிடுகையில் பட்ஜெட்டிலும் ஸ்க்ரீன் சைஸிலும் சாம்சங் , சோனி நிறுவனங்களின் டேப்லெட்கள் என்றும் பின்தங்கியே உள்ளன. ஐபேட் ஏர் 2 –இன் விலை மட்டும் சற்று விமர்சனத்திற்குள்ளானாலும் இந்த ஆண்டின் சிறந்த யூசர் ஃபிரெண்ட்லி ஸ்பெஸிஃபிகேஷன்கள் கொண்ட டேப்லெட்டாக திகழ்கிறது இந்த ஐபேட் ஏர் 2 !!

Link:
http://www.apple.com/shop/buy-ipad/ipad-air-2

நெக்சஸ் 6P (Nexus 6P ):


மொபைல் சந்தையில் நெக்சஸ் என்ற பெயருக்கு என்றும் ஒரு தனித்துவம் உண்டு. இந்த வருடமும் அதன் பங்களிப்பிற்கு   சற்றும் குறைவில்லை. தன் டிசைனில் தொடங்கி மிகச்சிறந்த கேமரா , ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், பியூர் கூகுள் சாப்ட்வேர், பெர்பார்மன்ஸ் என  அனைத்திலும் 2015 ஆம் ஆண்டின் அத்தனை மொபைல்களையும் வரிசையில் பின்னுக்குத் தள்ளி இந்த வருடத்தின் ஆகச்சிறந்த மொபைல் என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது இந்த நெக்சஸ் 6P !!!   


No comments:

Post a Comment