சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

2016.லும் தொடரும் விஜய், அஜித், சிம்பு பற்றிய எதிர்பார்ப்புகள்!

2016 பிறந்து விட்டது 2015ம் ஆண்டைப் போலவே இந்த வருடமும் பல சர்ச்சைகள், வைரல்கள், ட்ரெண்டுகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது கண் கூடாகவே தெரிகிறது. அதில் இப்போதைக்கு நம் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
1. பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்? இந்தக் கேள்விக்கான சரியான பதில் ராஜமௌலி சொல்லி விடுவார் என எதிர்பார்க்கிறோம்
2. வாலு ஒரு வழியாக வெளியாகி விட்டது, அடுத்து இது நம்ம ஆளு குறைந்த பட்சம் ஒரு 15 முறையேனும் ரிலீஸ் தேதி அறிவித்து தள்ளிப்போகும் செய்தி வெளியாகலாம்.
3. எந்திரன் படத்தின் டீஸர், கண்டிப்பாக படம் 2017 என்பது உறுதியான நிலையில் டீஸர், பாடல்கள் வரலாம் 4. அஜித் படத்தின் பெயர் என்னவாக இருக்கலாம். என ஆளாலுக்கு ஒரு பட்டிமன்றமே நடத்தி விடுவோம். கண்டிப்பாக சிறுத்தை சிவா தான் என உறுதியாகிவிட்டது.பின்னர் என்ன அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக தெறிக்கவிடுவார்கள்.
5. விஜய் டீஸர் இந்திய அளவில் எவ்வளவு  லைக்குகள் என கணக்கிடும் தலையாய கடமையும் நமக்கு உள்ளது.
6. கமல்ஹாசன் இந்த வருடமாவது ரீமேக் படம் கொடுக்காமல் இருப்பாரா? பார்க்கலாம்
7. ஸ்ருதி ஹாசன் மலராக நடிக்கிறார் என்பதற்கே இளசுகளின் ரியாக்‌ஷன் தெறிக்கவிட்டது. படம் வந்தால் கண்டிப்பாக மீம்ஸ் கிரியேட்டர்கள் பரவச நிலையை அடைவார்கள் என்பது உறுதியாகிவிட்டது.
8. சல்மான்கான் ஒருவழியாக கொலை வழக்கிலிருந்து அவர் சொன்ன ஆண்டவன் அருளால் வெளியேறிவிட்டார். அப்படியே அந்த மான் வழக்குக்கும் சல்மானின் கடவுள் அருள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9. விஷால் இந்த வருடமாவது சுமோக்களில் பறக்காமல், காரில் சுழலாமல் ஒரு எதார்த்தப் படம் கொடுப்பாரா?
10. எல்லாவற்றிற்கும் மேல் கபாலி ரஜினியைக் காண தமிழ் நாடே காத்திருக்கு.


No comments:

Post a Comment