சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!

ஹேங்" - சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடுப்பேற்றும் விஷயம் இது! 

இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான். 

இப்பிரச்னை ஆண்டிராய்டு மொபைல்களில் மட்டுமன்றி, ஐஓஎஸ் மொபைல்கள் வரை எல்லாப் போன்களிலும் சகஜமான விஷயம் தான்! கணினிகளும் ஹேங் ஆவது உண்டு! 
நாம் அனைவரும் பல நேரங்களில் அவசரநிலையில் தான் இருப்போம். ஆனால் நம் மொபைல் போன் நாம் சொல்லும் பேச்சை என்றுமே கேட்பதே இல்லை. சரியான நேரம் பார்த்து திடீரென்று ஹேங் ஆகி விடும். இதனால் பலரும் அடிக்கடி மொபைல் போனை திட்டியது கூட உண்டு. அப்படிப்பட்ட ஹேங் மொபைல்களை எப்படிப் பழையபடி வேகமாகச் செயல்பட வைப்பது என்று இனி பார்ப்போம்.


*தேவையில்லாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்யவும். 

*எந்த ஆப்ஸ்களையும் அன் இன்ஸ்டால் செய்யும் செட்டிங்கில் டேட்டாவை க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்யவும். 
*போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷன்களை Force stop கொடுக்கவும். 

*ஆண்டிராய்டு அசிஸ்டன்ட், க்ளீன் மாஸ்டர் போன்ற அப்ளிகேஷன்களைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து Cache, thumbnails போன்றவற்றை க்ளீன் செய்யவும். 

*முடிந்த வரை ஸ்மார்ட் போன்கள் வாங்கும் போது 1ஜிபி ரேம் மற்றும் 1.2GHz பிராசசர் கொண்ட மொபைலை வாங்கவும். 

*மொபைல் போன்-க்கு வரும் எஸ்.எம்.எஸ்கள் மற்றும் மெயில்களைப் படித்துவிட்டு தேவையில்லை என்றால் உடனடியாக டெலீட் செய்யுங்கள். 

*மொபைலில் முடிந்தவரை தேவையான காண்டாக்ட்களை மட்டும் வைத்துக் கொண்டு மீது உள்ளவற்றை டெலீட் செய்து விடுங்கள். 

*ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால் மெமரி கார்ட்டில் இன்ஸ்டால் செய்யவும். போன் மெமரியில் செய்யாதீர்கள். 

*போன் மெமரியை எப்போதும் கால் பங்கு காலியாகவே வையுங்கள். 

*2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேக்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி ரீசெட் செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஒருமுறைக்கு இரண்டு பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு ரீசெட் செய்யுங்கள். 

*3 நாளைக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து போடுங்கள். 
*அதிகக் கிளாரிட்டி மற்றும் அதிக MB ரிசொலியூசன் கொண்ட புகைப்படங்களை மெயின் ஸ்கிரீன்னில் வால்பேப்பராக வைக்காதீர்கள். 

*மெயின் ஸ்க்ரீன்னில் முடிந்த வரை எந்த icon-னின் shortcut-ம் வைக்காதீர்கள். 

*சில மொபைல்களில் மெமரி கார்டு-ல் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் அதிகம் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புண்டு. 

*மொபைலில் வைரஸ் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புகள் அதிகம். மொபைலில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் ஆப்ஸ்கள் சரியாக ஸ்கேன் செய்வதில்லை. இதற்கு மாற்றாக ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி மாதமொரு முறை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். 

*ப்ளே ஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ்களை மட்டுமே இன்ஸ்டால் செய்யவும். 

*மொபைலின் மென்பொருளை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு வரவேண்டும். 

"இனியும் உங்க மொபைல் ஹேங் ஆனால் கம்மின்னு இத தூக்கி போட்டுட்டு வேற மொபைல் வாங்கிடுங்க பாஸ்!" 



No comments:

Post a Comment