சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Jan 2016

மும்பையில் விஜயகாந்த் 'ராக்ஸ்': வேட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்சில் தோன்றி அசத்தல் !

மிழகத்தில் செய்தியாளர்களிடம் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி.யில் தோன்றி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி அசத்தினார்.
மும்பையில் 6 அணிகள் பங்கேற்கும் பிரிமீயர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் நேற்றுத் தொடங்கின.  ஒர்லி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில்  இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரனுக்கு சொந்தமான சென்னை ஸ்மாசர்ஸ் அணி, மும்பை ராக்கெட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை அணி 5-3 என்ற செட் கணக்கில் வெற்றி  பெற்றது.
இந்த போட்டியை காண, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் மும்பை சென்றிருந்தார்.  பிரபல ஹிந்தி நடிகர் அக் ஷய் குமாரும் வந்திருந்தார். போட்டி முடிந்ததும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை பரிசளிக்க வருமாறும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து விஜயகாந்த், வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து கூறி பரிசளித்து பாராட்டினார்.  இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்து வரும் ஸ்டார் டி.வி.யில்,  வேட்டி அணிந்த விஜயகாந்த் மேடையேறி பரிசளிப்பது லைவ் செய்யப்பட்டதை  கண்டு தே.மு.தி.க தொண்டர்களுக்கு புல்லரித்து போனது.
 
முன்னதாக விஜயகாந்த் சென்னையில் இருந்து மும்பை புறப்படுகையில், அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அதனால் அவர் மும்பை தப்பி செல்வதாகவும்  வதந்திகள் உலா வந்தன.


No comments:

Post a Comment