சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

2016-ல் அவசியம் கடைபிடிக்க வேண்டிய 9 பழக்கங்கள்!

புதிய ஆண்டு... புதிய நம்பிக்கை... புதிய இலக்குகள்... என புதிதாகத் தொடங்க இருக்கிறோம். 'நான் நியூ இயரிலிருந்து டயட் கன்ட்ரோல் ஃபாலோ செய்யப்போகிறேன்', 'நான் சிகரெட்டை நிறுத்திடுவேன்', 'நான் ஃபோன் பேசறதைக் குறைச்சிடுவேன்', 'அடுத்த வருஷத்துக்குள்ள எப்படியாவது என்னோட பேங்க் பாலன்ஸை அதிகமாக்கிடனும்'... இப்படி, எத்தனை எத்தனை புதிய திட்டங்கள்... புதிய இலக்குகள்.
உங்கள் புத்தாண்டு இலக்குகள் எதுவாகவும் இருக்கட்டும் அதனோடு இந்த சின்னச் சின்ன சக்சஸ் மந்த்ராக்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்... எதிர்வரும் இந்த 2016 உங்கள் வசமாகும்... 
 
ஸ்டே பாசிடிவ்

என்ன நடந்ததோ, நடக்கிறதோ, நடக்க இருக்கிறதோ எல்லாமும் சரிதான் என்ற நேர்மறை எண்ணங்களை விதைத்திடுங்கள். நினைத்தது நடந்தது சரி என்றும், நடக்காததை ரொம்பச் சரி என்றும் நினைத்துக்கொள்ளலாம். இதுவே, நம் பாதி மனஉளைச்சலைக் குறைத்துவிடும். கலர் கலர் பேப்பரில் ரிப்பன் கட்டித் தராவிட்டாலும், நமது வாழ்க்கை ஒர் அழகான பரிசுதான்.
சன்ரைஸ் மார்னிங்

நம்மில் எத்தனை பேர் சூரிய உதயத்தைப் பார்க்கிறோம் என்று நமக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொள்வோம். விடை நமக்குள்ளாகவே இருக்கட்டும். இனி வாரம் ஒருமுறை 'சன்ரைஸ்' பார்க்கலாம் என்ற முடிவை எடுங்கள். இதனுடன், பௌர்னமி நிலவின் அழகையும் ரசித்திடுவோம். மாதம் ஒருமுறை நேச்சுர் வாக். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிடித்த இடங்களைச் சுற்றிப் பாருங்கள். இப்படி, உங்களின் பயணம் முடிவில்லாமல் தொடங்கட்டும். 

நமக்குள் மாற்றம்!

மாற்றங்களைப் பார்க்க அனைவருக்கும் ஆசைதான். அது நம்மிலிருந்து தொடங்குவது இன்னும் சிறப்பானது. விரைவில், நம் மாற்றம் நாம் விரும்பும் மாற்றமாகும். நம் வாழ்வியல் பழக்கங்களிலும், உணவுப் பழக்கங்களிலும் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவோம். காபி அடிக்‌ஷனாக இருந்தாலும் சரி, லேட் நைட் துங்குவதாக இருந்தாலும் சரி, முதலில் தீயவற்றைக் கைவிடுவதும், புதிய முடிவை எடுப்பதும் நாமாக இருப்பின், அதுவே மாற்றத்திற்கான முதல் மற்றும் அடிப்படை வெற்றி.

3E-க்களோடு வாழலாம்!

Energy, ஊக்கம், ஆற்றல் என என்றென்றும் பவர் பேக்டு மனிதராக மாறிவிடுங்கள். Enthusiasm, உற்சாகமான மனிதர்களைச் சந்திப்போம். உற்சாகத்தைப் பகிர்ந்தளிப்போம். Empathy, மாற்றார் உணர்வு அறிதல். இதுவே நம்மைச் சுற்றி ஒரு அன்பு வட்டத்தை அமைத்துக்கொடுக்கும். 

குட்பை 2 நெகடிவ்

உங்களின் எனர்ஜியைக் கடந்த கால நினைவுகளுக்கும், பிடிக்காத விஷயங்களுக்கும், புறம்பேசுவதற்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும் வீணடிக்க வேண்டாம். எதிலும், ஒரு நன்மையைத் தேடிக் கண்டுபிடித்து, உங்களை நீங்கள் உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.
தாங்ஸ், சாரி எனும் மந்திர வார்த்தைகள்

நன்றி, மன்னிப்பு இந்த இரண்டு வார்த்தைகளையும் தாரளமாகப் பயன்படுத்துங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தெரிவித்து விடுங்கள். 'சின்ன உதவிதானே' என்றோ 'சின்ன தப்புத்தானே' என்றோ அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் பெருந்தன்மையாக இருப்பது, நிறைய விஷயங்களை சாதிக்கும்.

கோ நேச்சர்

பிளாஸ்டிக் பிரஷ்ஷையோ, பிளாஸ்டிக் சீப்பையோ மாற்றுவது கடினம்தான். ஆனால்,  நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில், லன்ச் பாக்ஸ், பிளாஸ்டிக் பிளேட்டை நிச்சயம் மாற்ற முடியும். இப்படி, சின்ன சின்ன மாற்றங்கள் செய்து இயற்கையோடு கொஞ்சம் இணைவோம்.
நேரத்தைப் பரிசளியுங்கள்

பிடித்தவர், உறவினர், நண்பர்கள் என உங்களின் விருப்பப் பட்டியலில் இருப்பவர்களுக்கு உங்களின் நேரமே அவர்களுக்குப் பரிசாக அமையட்டும். பொருட்களைப் பரிசளிப்பதைவிட, உங்களின் நேரத்தைப் பரிசளிப்பது அவர்களுடன் உங்களின் உறவைப் பலப்படுத்தும்.
ஹேப்பி பேங்க்

பணத்தைச் சேமிக்க எத்தனையோ திட்டங்கள். ஆனால், உங்களின் மகிழ்ச்சியைச் சேமிக்க ஒரு வங்கியைத் தொடங்குங்கள். அதன் பெயர் ஹேப்பி பேங்க். அலுவலகத்தில் நீங்கள் இன்கிரிமென்ட் வாங்கினாலும் சந்தோஷம்தான். அதேபோல பிடித்த ஆடையை அணிந்து, அந்த ஆடையில் உங்கள் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்ப்பதும் சந்தோஷம்தான். சாக்லெட் வாங்கப் போய் சாக்லேட் கேக் கிடைத்தால், குழந்தை எப்படி குஷியாகுமோ அப்படி உங்கள் மனதை மெருகேற்றிக்கொள்ளுங்கள். குட்டிகுட்டி சந்தோஷங்களைக்கூட பேப்பரில் எழுதி, ஒரு பாக்ஸில் சேமித்து வையுங்கள். ஹேப்பி பேங்க் கணக்கின் முதல் கோட்டீஸ்வரர் நீங்கள்தான்..

உற்சாகமாக, 2016 துவங்குவோம்... வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment