ஹிந்தி நடிகர் சல்மான்கான், அண்மையில் நடைபாதை கார் விபத்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் 27-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய சல்மான் , அன்றைய தினம் 'கான்மார்க்கெட் . காம்' என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார்.
சல்மான் தனது நிறுவனத்துக்கு 'கான்மார்க்கெட் .காம்' என்று பெயர் சூட்டியதற்கு, டெல்லியில் உள்ள கான் மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு, கான்மார்க்கெட். காம் என்ற பெயரை சல்மான் உடனடியாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '' உலகில் உள்ள 24 அதிக பணம் புழங்கும் சில்லரை வர்த்தக மையங்களில் கான் மார்க்கெட்டும் ஒன்று. நாட்டிலேயே முதன்மையானது. கடந்த 1951-ம் ஆண்டு முதல், டெல்லியில் எங்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தையில் எங்களது பொருட்களுக்கு என்று தனி மரியதை இருக்கிறது.

தற்போது நடிகர் சல்மான், கான்மார்க்கெட்.காம் என்று பெயரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால், நுகர்வோர்களும் வாடிக்கையாளர்களும் குழப்பமடைவார்கள். ஆன்லைனில் கான்மார்க்கெட்.காமில் கழிவு அறிவித்தாலும் வாடிக்கையாளர்களையும் நுகர்வோர்களையும் குழப்பும்.
கடந்த 65 ஆண்டுகளாக வர்த்தகம் புரிந்து வருகிறோம். எங்கள் சந்தை பொருட்களுக்கென்று தனி மரியாதை இருக்கிறது. சல்மானின் இந்த செயல் கண்டனத்துக்குரியது அவர் உடனடியாக தனது நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment