திருச்சி அடுத்த மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தி.மு.க சார்பில் நேற்றிரவு நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மொழிப்போர் தியாக செம்மல்கள் போற்றக்கூடிய, அஞ்சலி செலுத்தக்கூடிய, வீரவணக்கம் செலுத்தக்கூடிய கூட்டமாக இக்கூட்டம் நடக்கிறது. ஆனால் அ.தி.மு.கவும் வீரவணக்கநாள் கொண்டாடுகிறது. அந்த கட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன தகுதி இருக்கிறது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை பராமரிக்க தவறி செம்மொழி அடையாளத்தை சின்னாபின்னமாக்கியவர் ஜெயலலிதா. பாவேந்தர் பாரதிதாசன் ஆய்வக நூலகத்தை முடக்கியது, பாடப்புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்டி திருவள்ளுவர் உருவத்தை மறைத்தனர். ஸ்டிக்கர் ஆட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமக்கு தாமே என வாழுகின்ற ஜெயலலிதா நமக்கு நாமே திட்டத்தை விமர்சிக்கிறார். அ.தி.மு.க பொதுக்குழு நடந்தது. அது பொதுக்குழு அல்ல பொய்க்குழு. அதில், யாரோ எழுதித் தந்ததை 30 நிமிடம் வாசித்த அவர், 25 நிமிடம் நமக்கு நாமே திட்டத்தை பற்றி பேசியுள்ளார். மக்கள் மனதில் மட்டுமல்ல முதல்வர் ஜெயலலிதா மனசிலும் நமக்கு நாமே திட்டம் பதிந்துள்ளது.
தமக்கு தாமே என வாழுகின்ற ஜெயலலிதா நமக்கு நாமே திட்டத்தை விமர்சிக்கிறார். அ.தி.மு.க பொதுக்குழு நடந்தது. அது பொதுக்குழு அல்ல பொய்க்குழு. அதில், யாரோ எழுதித் தந்ததை 30 நிமிடம் வாசித்த அவர், 25 நிமிடம் நமக்கு நாமே திட்டத்தை பற்றி பேசியுள்ளார். மக்கள் மனதில் மட்டுமல்ல முதல்வர் ஜெயலலிதா மனசிலும் நமக்கு நாமே திட்டம் பதிந்துள்ளது.
110 விதி எதற்கு பயன்படுத்துவது என தெரியாமலேயே பயன்படுத்துகிறார்கள். அதனடிப்படையில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் என்ன ஆனது? இதைபோல் 1100 அம்மா அழைப்பு மையம் எனும் கால்சென்டர் ஆரமித்துள்ளார்கள். அந்த நம்பரில் அம்மாவை அழைக்கலாம் என்றார்கள். இந்த எண் அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து அம்மாவை நானும் அழைச்சிக்கிட்டே இருக்கிறேன். லைனே கிடைக்கல. இந்த எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை என இந்தியில் சொல்கிறது என்றபடி தனது போனில் 1100 எண்ணை போட்டு டயல் செய்தார். போன் பிஸியாகவே இருந்தது.
இப்படித்தான் பல நேரங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற ஸ்டாலின், நான் எம்.எல்.ஏவாக உள்ள கொளத்தூர் தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்க்க 7810878108 என்ற எண்ணை கொடுத்துள்ளேன். அந்த எண்ணில் இதுவரை 63 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதில் முடிந்த அளவு பிரச்னைகளை தீர்த்து வைத்து வருகிறேன் என்றபடி தனது செல்போனில் இருந்து போன் செய்தார். அந்த நம்பரும் தவறு என வர ஜெர்க் ஆன ஸ்டாலின், அடுத்தடுத்து முயற்சி செய்ய லைன் கிடைத்தது.
அதன் பிறகு தொடர்ந்து பேச ஆரமித்த ஸ்டாலின், பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று மக்களை ஏமாற்றிய அ.தி.மு.க ஆட்சியை மறந்தாச்சு, கூடவே அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பதையும் மறந்திட்டாங்க. தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மக்கள் உறுதியாக உள்ளனர் என்று முடித்தார்.
No comments:
Post a Comment