சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

பெண்கள் நைட்டி அணிந்து தெருவுக்கு வந்தால், ரூ.500 அபராதம்!


நைட்டி அணிந்து பெண்கள் தெருவுக்கு வந்தால், மகாரஷ்ட்ர கிராமம் ஒன்றில், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவிமும்பை அருகேயுள்ள கோதிவலி கிராமத்தில் பெண்களுக்கு நைட்டி அணிந்து தெருவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களுக்கு  பெண்கள் அணியும் இது போன்ற உடைகளே காரணமாக இருப்பதாக கூறி நைட்டி போன்ற உடைகளுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த மகளிர் மன்றம் தடை விதித்துள்ளது. 

நைட்டிக்கு விதிக்கப்பட்டத் தடை குறித்து கோதிவலி கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகததில் நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது, அதில் ''கோதிவலி கிராமத்தை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் கூறப்படுவதாது, இனிமேல் நைட்டி அணிந்து தெருவுக்கோ சாலைக்கோ வந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே கிராமத்தை சேர்ந்த பல பெண்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவாகரத்தில் போலீசார் தலையிட வேண்டுமென்ற கோரிக்கையும் வலு பெற்றுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கிராமத்து மக்களை இது போன்று கட்டுப்படுத்த எந்த மகளிர் அமைப்புக்கும் உரிமையில்லை. கிராம பஞ்சயாத்துக்கும் உரிமையில்லை. எனவே இது போன்ற உத்தரவுகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


No comments:

Post a Comment