சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

2016 புத்தாண்டு ராசிபலன்கள்

ரக்க குணம் அதிகம் உள்ளவர்களே!
 உங்கள் ராசியை ராசிநாதனாகிய செவ்வாய் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகள், வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். நட்பு வட்டத்தால் பலனடைவீர்கள்.
7.1.16 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால், மனோபலம் கூடும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைக் கொஞ்சம், கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். கேது 12ல் நிற்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரு வீர்கள்.
8.1.16 முதல் ராகு 5ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பீர்கள். மகளின் திருமணம்  சற்றே தள்ளிப் போகும். கேது லாப ஸ்தானத்தில் அமர்வதால், தொட்ட காரியங்கள் துலங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். ஆன்மிகப் பெரியோர்கள், மகான்களின்  ஆசி களைப் பெறுவீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.16 வரை மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களின் பாக்கியாதிபதியும் விரயாதிபதியு மான குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்வதால், வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மனைவிக்கு ஹார்மோன் பிரச்னைகள் வந்து நீங்கும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
ஆனால், 8.2.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.
27.2.16 முதல் 9.9.16 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீன மடைவதால், பணப்பற்றாக்குறை ஏற்படும். கணவன்மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். ரத்தத்தில் ஹீமோ குளோபின் குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும்.
ஆண்டு முழுவதும் சனி உங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால், எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.  
வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றாலும், இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். ஏப்ரல், ஜூலை மாதங்களில் லாபம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும், ஆண்டு முழுக்க அஷ்டமத்துச் சனி உங்களுக்குத் தொடர்வதால், யாருக்கும் கடன் தர வேண்டாம். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.  வேலையாட் களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். ஏஜென்சி, மார்கெட்டிங், கமிஷன், ரியல் எஸ்டேட், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர்களை அனுசரித்துச் செல்லவும்.
உத்தியோகத்தில் எதற்கெடுத் தாலும் உங்களை மட்டம் தட்டிக் கொண்டிருந்த அதிகாரி மாறுவார். ஆகஸ்ட் மாதம் முதல் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். சின்னச் சின்ன அவமானங்களால் வேலையை விட்டுவிடலாமா என்ற ஆதங்கம் வந்து போகும்.
மாணவமாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால், படிப்பில் ஆர்வமில்லாமல் போகும். படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தவும். வேதியியல், கணிதப் பாடங்களில் மிகுந்த கவனம் செலுத்தப் பாருங்கள்.
கலைத்துறையினரே! விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மூத்த கலைஞர்களை மதிக்கத் தவறாதீர்கள்.
முன்கோபத்தைத் தவிர்த்து, ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வருடம் இது.
பரிகாரம்:
திருவாரூர் முத்துப்பேட்டை அருகிலுள்ள கெழுவத்தூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீஜடாயுபுரீஸ்வரரை வணங்கிட பிரச்னைகள் குறையும்.

அதிகாரத்துக்கு அடிபணியாத வர்களே!
உங்கள் ராசிக்கு சுக வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களுடைய அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிடுவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். வங்கியில் லோன் கிடைத்து அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.  
1.1.16 முதல் 7.2.16 மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால், நினைத்த காரியம் நிறைவேறும். தெளிவு பிறக்கும். வருமானம் உயரும். மகனுக்குத் திருமணம் கூடிவரும். மகளின் ஆரோக்கியம் சீராகும். குழந்தை பாக்கியம் கிடைக் கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால், 8.2.16 முதல் 1.8.16 வரை குரு 4ல் அமர்வ தால், அதிக அளவில் செலவுகள் ஏற்படும்.  ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்து கொண்டே யிருக்கும்.  கணவன்மனைவிக்குள் ஈகோ பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது ஒருவித விரக்தி, மனக்குழப்பம் உண்டாகும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.
வருடம் பிறக்கும் நேரத்தில் உங்களது ராசிநாதன் சுக்ரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால், புது பதவிகள், பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  
7.1.16 வரை ராகு 5ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகள் அடிக்கடி கோபப்படுவார்கள். கேது 11ம் வீட்டில் 7.1.16 வரை தொடர்வதால், ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், 8.1.16 முதல் 4ல் ராகு 10ம் வீட்டில் கேது அமர்வதால், தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலர் சொந்த ஊர், இருக்கும் இடத்தை விட்டு விலகி வேறு இடத்துக்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் இடையூறு களும், நெருக்கடிகளும் வந்து போகும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
27.2.16 முதல் 9.9.16 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயுடன் சனி சேர்வதால், கணவன்மனைவிக்குள் மனக் கசப்புகள் வரும். சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுக ளும் எடுக்க வேண்டாம்.
ஆண்டு முழுவதும் சனி ராசிக்கு களத்திர ஸ்தானமான 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். திருமணம் தள்ளிப் போகும். ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் கணவன்மனைவிக் குள் பிரிவுகள் ஏற்படக் கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்லவும். உத்தி யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டி வரும்.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விற்பனை மூலமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். எலெக்ட்ரிக்கல், ஷிப்பிங், பெட்ரோகெமிக்கல், மளிகை, சிமென்ட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
8.1.16 முதல் கேது உத்தியோக ஸ்தானத்தில் அமர்வதால், உத்தி யோகத்தில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். ஆகஸ்ட் மாதம் முதல் குரு சாதகமாவதால், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெறுவீர்கள். சிலர் அலுவலகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
மாணவ, மாணவிகளே! தேர்வுகளிலும் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.    
கலைத்துறையினரே! கிசுகிசு தொந்தரவுகள் வரக்கூடும். பணவரவு உண்டு. உங்களுடைய படைப்புகள் எல்லோராலும் வரவேற்கப்படும்.
இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், புதிய அணுகுமுறையால் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:
திருநெல்வேலி அருகிலுள்ள பாபநாசம் தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஉலகாம்பிகை உடனுறை ஸ்ரீபாபநாசநாதரை வணங்கி வாருங்கள். நினைத்தது நிறைவேறும்.

கனிவாகப் பேசி காய் நகர்த்து பவர்களே!
உங்களுடைய ராசியை ராசி நாதன் புதனும், சேவகாதிபதி சூரிய னும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், ஆரோக்கியம் கூடும். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அவ்வப்போது உடல் உஷ்ணம் அதிகமாகும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். துணிச்ச லாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும்.  
7.1.16 வரை ராகு 4ம் வீட்டில் நிற்பதால், தாயாருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். 7.1.16 வரை கேது 10ம் வீட்டில் தொடர்வ தால், மறைமுக எதிர்ப்பு, சின்னச் சின்ன அவமானம், உத்தியோகத்தில் வேலைச்சுமை, ஒருவித படபடப்பு வந்து போகும்.
8.1.16 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும், 9ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். ராசிக்கு 3ம் வீட்டில் ராகு நுழைவதால், மனோபலம் கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். வழக்குகள் சாதகமாகத் திரும்பும். தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். 9ம் வீட்டில் கேது அமர்வதால், தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர் கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடை, தாமதம் ஏற்படும். ஆன்மிகப் பெரியோர்கள், சாதுக்கள் உதவுவார்கள்.
ஆண்டு முழுக்க சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டி லேயே வலுவாக அமர்ந்திருப்பதால், பிரச்னைகளை எதிர்கொள்ளக் கூடிய சக்தி கிடைக்கும். முன்னேற் றம் உண்டு. அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தி யமாகச் சமாளிப்பீர்கள். தந்தை யாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத் துக் கொள்வீர்கள்.
இந்த 2016ம் ஆண்டு முழுக்க குருபகவான் சாதகமாக இல்லாத தால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறு வீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும். சில சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணர்வீர்கள். மன அழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். சிலர் உங்களைப் பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாதபோது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள்.    
வியாபாரத்தில் நெளிவு, சுளிவு களைக் கற்றுக் கொள்வீர்கள். போட்டிகளைச் சமாளிக்க கடுமை யாக உழைக்க வேண்டி வரும். அவ சர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளைக் கையாளுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோமொபைல் வகைகளால் ஓரளவு லாபம் வரும். செப்டம்பர், நவம்பர் மாதங்களில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  
உங்களின் உத்தியோக ஸ்தானாதிபதியான குருபகவான் ஆண்டு முழுக்க சாதகமாக இல்லாததால், உத்தியோகத்தில் ஒரு ஸ்திரமற்ற போக்கு நிலவும். மேலதி காரி உங்களுக்குச் சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கி றாரா என்று உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். சக ஊழியர் களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். இழந்த சலுகைகளைப் போராடிப் பெறுவீர்கள்.
மாணவமாணவிகளே! நினைவாற்றல் குறையும். சமயோசித புத்தியை பயன்படுத்துங்கள்.      
கலைத்துறையினரே! உங்களு  டைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ டைவீர்கள்.  
இந்தப் புத்தாண்டு உங்களை சாதனையாளராக மாற்றுவதுடன் அடிப்படை வசதிகளையும் அதிகப்படுத்தும்.
பரிகாரம்:
திருக்கடவூர் தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅபிராமி உடனுறை ஸ்ரீஅமிர்தகடேசுவரரை பௌர்ணமி நாளில் சென்று வணங்கி வாருங்கள். நன்மை உண்டாகும்.

பிரதிபலன் பாராமல் உதவுபவர் களே!
உங்களின் யோகாதிபதி செவ் வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்தி ருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உங்களின் புகழ், கௌரவம் உயரும். சொந்த வீடு சிலர் வாங்குவீர்கள். புதிய பதவி தேடி வரும். பிள்ளை களிடம் குவிந்து கிடக்கும் திறமை களை இனம் கண்டறிந்து வளர்ப் பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
உங்களுக்கு 2வது ராசியில் ஆண்டு பிறப்பதால், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சூரியன் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், வருடம் பிறக்கும்போது புதன் 6ல் மறைந்தி ருப்பதால், வீண் குழப்பங்கள், எதிர் பாராத செலவுகள், உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.16 வரை உங்களின் சஷ்டம, பாக்கியாதிபதியான குருபகவான் வக்ரமாகி ராசிக்கு 3ம் வீட்டில் மறைந்திருப்பதால், சில நேரங்களில் வீண் டென்ஷன், மனஉளைச்சல், வேலைச்சுமை, வந்து நீங்கும். அத்தியாவசிய செலவுகள் அதி கரிக்கும். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
ஆனால், 8.2.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால், சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர் வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்மனை விக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
2.8.16 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவதால், பண விஷயத்தில் கறாராக இருக்கவும். எந்த ஒரு வேலையையும் போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மூச்சு திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சுவலி வந்து போகும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
8.1.16 முதல் ராகுபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் வந்து அமர்கிறார். பணம் வந்தாலும் செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். கணுக்கால், காது, மூக்கு வலி வந்து போகும். குடும்பத்திலும், கேது 8ல் மறைவதால், சிறுசிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும்.
ஆண்டு முழுக்க உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டிலேயே சனிபகவான் தொடர்வதால், சிந்திக்கும் ஆற்றல் குறையும். பிள்ளைகள் முரண்டு பிடிப்பார்கள். விட்டுப்பிடிக்கவும். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள்.
வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பி.களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமா வார்கள். பழைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். ஜனவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். உணவு, எலெக்ட்ரிக் கல்ஸ், டிராவல்ஸ், ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் குரு 3ல் மறைவதால், அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலை யையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஜனவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.  
மாணவ, மாணவிகளே! படிப்பில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்க்கும் கல்விப் பிரிவில் சிரமப்பட்டே சேரமுடியும்.
கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.
இந்தப் புத்தாண்டு அவ்வப்போது சிறுசிறு தடைகளைத் தந்தாலும், வசதி வாய்ப்புகளையும், பதவி மற்றும்  பணவரவையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாளையும், அருகிலுள்ள காக்களூர் ஆஞ்சநேயரையும் சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். மேலும் சாதிப்பீர்கள்.

தொடங்கியதை எப்பாடு பட்டாவது முடிப்பவர்களே!  
உங்களின் பாக்கியாதிபதி செவ்  வாய் 3ம் இடத்தில் பலம் பெற்றி ருக்கும் நேரத்தில் இந்த 2016ம் ஆண்டு பிறப்பதால், புதிய முயற் சிகள் அனைத்தும் வெற்றியடையும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனக்கலக்கத்துடன் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். முடிந்ததை முயற்சித்து முன்னுக்கு வரப் பார்ப்பீர்கள். சகோத ரர்களுக்கிடையே ஒற்றுமை பிறக் கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் வருமானமும் உண்டு. ஆரோக்கியம் பாதிக்கும். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், புது வேலை கிடைக்கும். விலை உயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறை விலகும்.  
ஆண்டு முழுக்க சனி 4ம் வீட்டில் அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாகத் தொடர்வதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடும்.
வருடப் பிறப்பு முதல் 7.1.16 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் நிற்பதால், கண் வலி, வீண் வாக்குவாதம், எதிர்பாராத செலவுகள், சிறுசிறு விபத்துகள், கால் வலி வந்து செல்லும். 8.1.16 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர் வதால், அவ்வப்போது கோபப் படுவீர்கள். குறிப்பிட்ட இடைவெளி யில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆனால், களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் கேது அமர்வதால், கணவன்மனைவிக்குள் மனஸ்தா பங்கள் வரும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.  
ஆண்டின் தொடக்கம் முதல் வக்ரமாகி 7.2.16 வரை மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களின் பூர்வ புண்ணியாதி பதியும், அஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சந்தேகத் தால் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆரோக் கியம் கூடும். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். 8.2.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால், பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சிலர் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வதால், பல வேலைகளை நீங்களே பார்க்கவேண்டி வரும். லாபத்தைக் குறைத்து வாடிக்கை யாளர்களைப் பெருக்குவீர்கள். ஷேர், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்.  
மாணவ, மாணவிகளே! நினைவாற்றால் கூடும். படிப்பில் அக்கறை கூடும். எதிர்பார்த்த நிறுவனத்தில் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.
கலைத்துறையினரே! போட்டிகள் குறையும். தடைப்பட்டிருந்த உங்களது படைப்பு வெளியாகும்.  
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சின்னச் சின்ன ஏமாற்றங்களைத் தந்தாலும், சிக்கனமாகவும் மௌனமாகவும் இருந்து சாதிக்க வேண்டிய வருடம் இது.
பரிகாரம்:
சென்னை பாரிமுனையில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாளிகாம்பாளை வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தரிசித்து வாருங்கள். கவலை நீங்கும்.

தன்மானம் தவறாதவர்களே!
உங்கள் ராசிக்கு சுக ஸ்தா னத்தில் சூரியனும் புதனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தன்னம் பிக்கை கூடும். எதிலும் முதலிடம் பிடிப்பீர்கள். தாயாரின் ஆரோக்கியம் கூடும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். உறவினர்களிடையே மதிப்பு மரி யாதை கூடும். ஆனால், உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், நெருங்கிய உறவுக்காரர் களுடைய திருமணத்துக்கு செலவு செய்யவேண்டி வரும். செவ்வாய் 2ல் நிற்பதால், வீண் விரயங்கள், சின்னச் சின்ன கவலைகள், கண் எரிச்சல் வந்து செல்லும்.  
இந்த 2016ம் ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிலேயே தொடர்வதால், மனோ பலம் கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு.
வருடம் பிறக்கும்போது ராசிக்குள் ராகுவும், 7ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால், பேச்சில் தடுமாற்றம், குடும்பத்தில் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வரும். மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வரும். ஆனால் 8.1.16 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகி வருடம் முடியும் வரை 12ம் வீட்டிலும், ஏழாம் வீட்டிலிருந்த கேது விலகி 6வது இடத்திலும் மறைவதால், மனப்பிரமை யில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் தெளிவு கூடும். பிரிந்த வர்கள் ஒன்று சேருவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வீடு வாங்கும் வாய்ப்பு உண்டு. தள்ளிப்போன காரியங்கள் நல்லபடி முடிவடையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வேற்று மொழியினரால் திடீர் நன்மை உண்டாகும். என்றாலும், விரய ஸ்தானத்தில் ராகு அமர்வதால், சிக்கனமாக இருக்கவும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் குரு வக்ரமாகி 7.2.16 வரை மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களின் சுக, சப்தமாதிபதியான குருபகவான் ராசியிலேயே அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். கணவன்மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனம், வீடு வாங்குவதில் தடைகள் ஏற்படக்கூடும். 8.2.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைவதால், கடனை நினைத்து அச்சம் உண்டாகும். சிறுசிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும். கடந்த கால இழப்புக்களை நினைத்துக் கவலைப்பட்டு ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
27.2.16 முதல் 9.9.16 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக் கொள்வீர்கள். லாபம் குறையும். வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யப்பாருங்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. சினிமா, சிமென்ட், மருந்து, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.  
உத்தியோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள். புதிதாக வரும் அதிகாரியால் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும்.
மாணவ, மாணவிகள் அனைத்து பாடங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அவ்வப்போது மறதி ஏற்படும்.
கலைத்துறையினரே! கிடைக் கின்ற வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். வீண் வதந்திகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் இருக்கவும்.
இந்த 2016ம் ஆண்டு அனுபவ அறிவாலும், சகிப்புத் தன்மையாலும் உங்களைச் சாதிக்க வைக்கும்.
பரிகாரம்:
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சியம்மை உடனுறை ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரரை அர்ச்சனை செய்து வழிபட, நினைத்தது நிறைவேறும்.

மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்களே!
உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்த 2016ம் ஆண்டு பிறப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.
சூரியனும், புதனும் 3ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், அரசாங்கக் காரியங்கள் முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். நல்ல வேலை கிடைக்கும்.
இந்தப் புத்தாண்டின் தொடக்கத் திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால், சளித் தொந்தரவு, தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் வந்து செல்லும். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.  
புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.16 வரை மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களின் சஷ்டம, தைரியஸ்தானாதிபதியான குரு 12ம் வீட்டில் மறைவதால், சுபச் செலவுகள் அதிகமாகும். இளைய சகோதர வகையில் அலைச்சல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் 8.2.16 முதல் 1.8.16 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். கணவன்மனைவிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் பொருளுதவி செய்வார்கள்.
8.1.16 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால், தன்னம்பிக்கையும், பணவரவும் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். ஆரோக்கியம் சிறக்கும். தாழ்வுமனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால், கேது 5ம் வீட்டுக்குள் அமர்வதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்துக்காக சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். தாய், தாய் மாமா வழியில் சங்கடங்கள் வரும். ஆன்மிகவாதிகள், சாதுக்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 26.2.16 வரை உங்களின் சப்தமாதிபதி செவ்வாய் ராசிக்குள் நிற்பதாலும், 27.2.16 முதல் 9.9.16 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதாலும் கோபப் படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சச்சரவு வரும். கணவன்மனைவிக்குள் வீண் வாக்குவாதங் கள் வரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  திருமண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும்.
இந்த ஆண்டு முழுக்க சனி 2ல் அமர்ந்து பாதச்சனியாக நடை பெறுவதால், குடும்பத்தில் அவ்வப் போது சலசலப்புகள் வரும். காலில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. தாயா ருடன் மோதல்கள் வரும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
புதிதாக முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய வாய்ப்புகளும் வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வேலையாட்கள் ஒத்துழைக்கமாட்டார்கள். துரித உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். வருடத்தின் பிற்பகுதி யில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மாணவ, மாணவிகளே! போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள்.  
கலைத்துறையினரே! உங்களின் கற்பனை விரிவடையும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
இந்த 2016ம் ஆண்டு சிறுசிறு தடைகளைக் கடந்து பெரிய இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.
பரிகாரம்:
திருநெல்வேலியில் அருள்புரியும் காந்திமதி அம்மனை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் சென்று தரிசியுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

மன்னிக்கும் குணம் கொண்ட வர் நீங்கள்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது பிறப்பதால், உங்கள் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புது பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். வருடம் பிறக்கும்போது சூரியனும், புதனும் 2ல் நிற்பதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். உங்கள் ராசி நாதன் செவ்வாய், ராசிக்கு 12ல் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் சிக்கனமாக இருக்க நினத்தாலும் முடியாமல் போகும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.
ஆண்டு முழுவதும் சனி பகவான் ஜென்மச் சனியாக தொடர்வதால், உடல் நலனில் அக்கறை தேவை.இளைய சகோதர வகையில் அலைச் சலும் செலவுகளும் ஏற்படும். கணவன்மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அயல் நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். மறதியால் பொருள் இழப்புகள் உண்டு.
1.1.16 முதல் 7.2.16 வரையிலும் மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரையிலும் உங்களின் தன, பூர்வ புண்ணியாதிபதியான குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால், மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். வங்கிக் கடன் உதவி கிட்டும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன்மனைவிக் குள் அந்நியோன்னியம் அதிகரிக் கும். அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு மணப் பாக்கியம் கூடி வரும். மழலை பாக்கியம் கிடைக்கும்.
8.2.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால், வேலைகள் அதிக மாகும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன் படுத்தி முன்னேறுவார்கள். உறவுகள் மத்தியில் அவமானம் வந்து நீங்கும்.
27.2.16 முதல் 9.9.16 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனி யுடன் சம்பந்தப்பட்டு பலவீனம் அடைவதால், சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சங்கடங்கள், பணப்பற்றாக் குறை, பழைய கடன் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும்.
8.1.16 முதல் ராகு 10ம் வீட்டில் நுழைவதால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தொழிலதிபர் கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். நல்லவர் களின் நட்பு கிடைக்கும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். ஷேர் மூலம் பணம் வரும். கேது 4ம் வீட்டில் அமர்வதால், தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, உடல்நலக் குறைபாடுகள் உண்டாகலாம். வீடு வாங்குவதும் கட்டுவதும் இழுபறியாகி முடியும். சிலருக்கு வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். சிலர் வேறு ஊருக்கு அல்லது மாநிலத்துக்கு புலம்பெயர நேரிடலாம்.
வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். ஸ்டேஷனரி, என்டர்பிரைசஸ், மூலிகை, ரியல் எஸ்டேட், கடல் வாழ் உயிரினங்களால் லாபம் அடைவீர்கள்.
8.1.16 முதல் ராகு உத்தியோக ஸ்தானத்தில் அமர்வதால், உத்தி யோகத்தில் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். மூத்த அதிகாரி களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். இத்தனை வருட காலமாக உழைத்தும் பலன் இல்லா மல் போனதே என்று ஆதங்கப் படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இழந்த சலுகைகளைப் போராடி பெறுவீர்கள்.  
மாணவ, மாணவிகளே! நினைத்த பாடப்பிரிவில் சேர கடுமை யாக உழைக்கவேண்டும். முழு முயற்சியுடன் படித்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். கலைத் துறையினருக்கு, மூத்த கலைஞர் களின் நட்பு ஆதாயம் தரும்.  உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு, ஆரம்பத்தில் உங்களை அலைய வைத்தாலும், மையப் பகுதி முதல் எதிர்பாராத பண வரவு, வெற்றிகளை தரக் கூடியதாக அமையும்.
பரிகாரம்:
தஞ்சை மாவட்டம், பாலதளி தலத்தில் அருளும் ஸ்ரீதுர்க்கை அம்மனை வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் சென்று வணங்குங்கள். பிணிகள் அகலும்.

சுதந்திர மனப்பான்மை கொண் டவர் நீங்கள்.
உங்களுக்கு 9வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்க ளின் இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். வழக்கு சாதகமாகும். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
உங்களின் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய், லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், மனோபலம் அதிகரிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். ராசியிலேயே சூரியனும், புதனும் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.16 வரை மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசியாதிபதியும், சுகாதிபதியுமான குருபகவான் 10ம் வீட்டில் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். சூழலுக்கு ஏற்ப நீங்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர், உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. தாயாருடன் மனத் தாங்கல் வந்து போகும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழிச் சொந்தங் களுடன் மனஸ்தாபம் வந்து போகும். வாகனம் அடிக்கடி பழுதாகும்.
8.2.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால், உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரச்னை களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
8.1.16 முதல் ராகு பகவான் ஒன்பதாம் வீட்டில் நுழைவதால், தன்னம்பிக்கை பிறக்கும். வேலைகள் தடையின்றி முடியும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வீடு கட்ட, புதிதாக தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எனினும், செலவுகளும் துரத்தும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அவருடன் மனத்தாங்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. கேது 3வது வீட்டில் அமர்வதால், ஞானத்தைக் கொடுப்பார். தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. இளைய சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.  
இந்த வருடம் முழுக்க சனி பகவான் ராசிக்கு 12ம் வீட்டில் ஏழரைச்சனியின் ஒருபகுதியான விரயச் சனியாகத் தொடர்வதால், இனம் தெரியாத கவலைகள் வந்து செல்லும். வேலைகளைப் போராடி முடிக்கவேண்டி இருக்கும்.  மகான் களின் ஆசி கிட்டும்.  
27.2.16 முதல் 9.9.16 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால், மனக்குழப்பங்கள் வரும். பிள்ளைகளால் டென்ஷன், அலைச் சல் அதிகரிக்கும்.
வியாபாரம் சூடுபிடிக்கும். எனினும், அவ்வப்போது ஏற்படும் போட்டிகளைச் சமாளிக்க வேண் டியது வரும். விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கமிஷன், ஸ்பெகுலேஷன், பிளாஸ்டிக், கன்சல்டன்சி, ஏற்றுமதி வகைகளால் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் இறங்கவேண்டாம்.
10ல் குரு அமர்வதால், உத்தியோக சிக்கல்களை நினைத்து புலம்புவீர்கள். சிலர், பணியிலிருந்து கட்டாய ஓய்வுப் பெறக் கூடிய சூழ் நிலை உருவாகும். மேலதிகாரி களிடம் பணிந்து போகவும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக் கும். சம்பள பாக்கியைப் போராடி பெறுவீர்கள். மாணவ, மாணவிகளே! ஏழரைச் சனி நடைபெறுவதால் கவனமாகப் படிக்கவும். கலைத் துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்தப்புத்தாண்டின் முற்பகுதி முன்னேற்றம் தருவதாகவும், பிற்பகுதி தொலை நோக்கு சிந்தனையின் தேவையை உணர்த்துவதாகவும் அமையும்.
பரிகாரம்:
கோவை மாவட்டம், கோவில்பாளையம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாலகாளேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். நன்மை உண்டாகும்.

கற்பூர புத்தி கொண்டவர் நீங்கள்.
உங்களின் சுகாதிபதியும், லாபாதிபதியுமான செவ்வாய், 10ல் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக் கும். உயர்ந்த பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். ஆனால், எட்டா வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், உடல் நலக் குறைவும், வீண் விரயங்களும் வந்து போகும்.
27.2.16 முதல் 9.9.16 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால், உங்களுடைய தனித் தன்மையை இழந்துவிடாதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். எவரையும் பகைத் துக் கொள்ளாதீர்கள்.
இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப ஸ்தானத்திலேயே வலுவாக அமர்ந் திருப்பதால், வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.
8.1.16 முதல் ராகு எட்டில் மறைவதால், அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். தடைப் பட்ட காரியங்கள்  ஒவ்வொன்றாக முடியும். திடீர்ப் பயணங்கள் அதி கரிக்கும். கணவன்மனைவிக்கு இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளும், அதன் காரணமாக விவாதங்களும் வந்து நீங்கும். உறவினர்களிடமும் நண்பர் களிடமும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
8.1.16 வரை கேதுவும் ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைவதால், சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். பல் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். காலில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.16 வரை மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களின் தைரியஸ்தானாதிபதியும், விரயாதி பதியுமான குரு பகவான் 9ம் வீட்டில் நிற்பதால், மனதில் தொக்கி நிற்கும் தாழ்வுமனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள்.
8.2.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் ராசிக்கு 8ல் மறைந்து இருப்பதால், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும். அசதி, சோர்வு வந்து நீங்கும்.
வியாபாரத்தில், மறைமுக எதிர்ப்பு களையும் தாண்டி லாபம் உண்டாகும். புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்ய பண உதவிகள் கிடைக்கும். மக்கள் அதிகம் கூடும் புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.  ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, ஜுவல்லரி வகைகளால் பணம் சம்பாதிப்பீர்கள். புதிய பங்குதாரர் களைச் சேர்ப்பீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்க வேண்டும்.
உத்தியோகத்தில், தேங்கிக் கிடந்த பணிகளை எல்லாம் விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்துக்குத் தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள்.
மாணவ, மாணவிகளே! நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். உங்களுடன் போட்டி, பொறாமை கொண்டவர்களும், இனி வலிய வந்து பேசுவார்கள். கலைத் துறையினருக்கு வருமானம் உயர புதிய வழிவகை பிறக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக் கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.  
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, முற்பகுதியில் மந்த நிலையையும், மையப் பகுதியில் செலவுகளையும் தரக்கூடியதாக இருந்தாலும், ஆண்டின் இறுதிப் பகுதி எதிர்பாராத முன்னேற்றங்களைத் தரக்கூடிய தாக அமையும்.
பரிகாரம்:
திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி தலத்தில் அருளும் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீநீலகண்டேஸ்வரரை அர்ச்சித்து வணங்குங்கள். தடைகள் விலகும்.

உழைப்பால் சாதிப்பவர் நீங்கள்.
உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 2016ம் வருடம் பிறப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முழுவதுமாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். கணவன்மனைவிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்கும்.
வருடம் பிறக்கும்போது சூரிய னும், புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களுடைய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர் கள். மகனுக்கு புதிய வேலை கிடைக்கும். நல்ல இடத்தில் மணப் பெண்ணும் அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால், விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
இந்த வருடம் முழுக்க உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10ம் வீட்டிலேயே தொடர்வதால், உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பண வரவு கூடும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தொலைந்துபோன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.16 வரை மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களின் தன, லாபாதிபதியுமான குரு 8ம் வீட்டில் மறைந்திருப்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். மனதில் இனம் தெரியாத அச்சம் ஏற்பட்டு மறையும்.
8.2.16 முதல் 1.8.16 வரை 7ம் வீட்டில் அமர்ந்து குரு உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால்  கவலைகள் நீங்கும்; முகம் மலரும். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்பு கள் உங்கள் கைக்கு மாறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
7.1.16 வரை ராகு 8லும், கேது 2லும் நிற்பதால், பேச்சில் தடுமாற்றம், தர்மசங்கடமான சூழ்நிலைகள் வந்து நீங்கும். 8.1.16 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள் கேதுவும், 7ம் வீட்டில்  ராகுவும் அமர்கிறார்கள். கேது ராசிக்குள் வருவதால், தலைச் சுற்றல், சோர்வு, காய்ச்சல் வந்து நீங்கும். கடன் பற்றிய கவலை மனதை வாட்டும். 7ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால், வீண் விரயம், ஏமாற்றம், சின்னச் சின்ன இழப்புகள் வந்து செல்லும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். அனுசரித்துப் போவது அவசியம். மனைவிவழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும்.
வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத் தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், ஸ்டேஷனரி, விடுதி, அழகு சாதனப் பொருட்கள் மூலம் லாபமடைவீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங் களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும். மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும்.
மாணவ, மாணவிகளே! படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பாடங்களை உடனுக்குடன் படித்துவிடுவது நல்லது. விளையாட்டில் வெற்றி உண்டு. கலைத்துறையினரே! வெகுநாட்களாக தடைப்பட்ட வாய்ப்பு இனி கூடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, கடந்த ஆண்டைவிட அதிக வளர்ச்சியையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
காஞ்சிபுரம் தலத்தில் அருளும் ஸ்ரீவழக்கறுத்தீசுவரரை தாமரை அல்லது மல்லிகைப் பூவால் அர்ச்சித்து வணங்குங்கள். மகிழ்ச்சி பெருகும்.

இரக்க குணம் அதிகம் உள்ளவர் நீங்கள்.
உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டில் சூரியனும், புதனும் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர் கள். பணவரவு அதிகரிக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், தன்னிச்சையாகச் செயல்பட்டு முன்னேற நினைப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் இந்த 2016ம் ஆண்டு பிறப்பதால், எதிரிகளின் தொல்லை விலகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும்.
8.1.16 முதல் ராகு 6ம் வீட்டில் நுழைவதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். ஷேர் மூலமாக பணம் வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கேது 12ம் வீட்டில் மறைவதால், மற்றவர்களைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். செலவுகளும் தொடரும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் செவ்வாய் 8ல் நிற்பதால், சகோதரர் களால் பிரச்னைகள் ஏற்படும். சொத்துக்களை வாங்குவதிலும் விற்பதிலும் அவசரம் வேண்டாம்.  
புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.16 வரை மற்றும் 2.8.16 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசி நாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தாயின் ஆரோக்கியம் சீராகும். மனைவி வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். 8.2.16 முதல் 1.8.16 வரை குரு 6ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால், வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.
ஆண்டு முழுக்க சனிபகவான் 9ம் வீட்டிலேயே இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். வேற்று மொழியினர்களால் ஆதாயம் உண்டாகும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னை தீரும். ஆனால், தந்தைக்கு ஆரோக்கியம் பாதிக்கப் படும். அவருடன் கருத்து வேறுபாடு தோன்றும். பிதுர்வழிச் சொத்து வகையில் பிரச்னை ஏற்படும்.  பணவரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். அதிகாரத்தில், நல்ல பதவியில் இருக்கும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
27.2.16 முதல் 9.9.16 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்ப தால், மனஇறுக்கம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள் வந்து செல்லும். வாழ்க்கைத் துணை யின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.
வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். பற்று  வரவு கணிசமாக உயரும். புதிய முதலீடு களால் வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உங்களுடைய எதிர்பார்ப்பு களுக்கு ஏற்ற பங்குதாரர் அமை வார். துணி, பதிப்பகம், சிமென்ட், மற்றும் இரும்பு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழி யாகக் கட்டி முடிப்பீர்கள்.
உத்தியோகத்தில், மேலதிகாரி ஒருசில தருணங்களில் கடிந்து கொண்டாலும், பெரும்பாலும் உங்கள் மீது பரிவு காட்டுவார். சக ஊழியர்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வர். அலுவலகத்தில் மதிப்பு  கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.    
மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப் படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத் துறையினரின் யதார்த்த படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பிறமொழி வாய்ப்பு களால் புகழடைவீர்கள்.  
மொத்தத்தில், இந்த வருடத்தின் பிற்பகுதி, உங்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்:
தஞ்சை மாவட்டம் திட்டை எனும் தென்குடித்திட்டை தலத்தில் அருளும் ஸ்ரீவசிஷ்டேஸ்வரரை வழிபட, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். 


No comments:

Post a Comment