திருச்சி என்பது தமிழகத்தின் இதயபகுதிபோல், தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் சுமார் 6 மணி நேரத்துக்குள் இங்கு வந்துவிடலாம், அதனால்தான் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இந்த ஊரை தமிழகத்தின் தலைநகராக அறிவிக்க முயற்சி எடுத்தார். இங்கு இருக்கும் துப்பாக்கித் தொழிற்சாலை, பெல் நிறுவனம் இருந்தாலும் திருச்சி மாநகராட்சியாக விளங்கினாலும் சென்னை, மதுரை, கோவை அளவுக்கு வளரவில்லை.
இப்போது ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் திருச்சி இடம் பெற்றிருப்பதால் பெரு நகரங்களுக்கு இணையாக வளரும் என்ற நம்பிக்கை பல தரப்பிலும் நிலவுகிறது. திருச்சி நகரில் தரமான சாலைகள், பாதாள சாக்கடை வசதி, மழைநீர்வடிகால் வசதி, போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை உள்படஅனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படிமத்திய அரசு ஆண்டுக்கு ரூ கோடி வீதம் .100 5 .500 ஆண்டுகளுக்கு தலா ரூ கோடியும், தமிழக அரசு ஆண்டுக்கு 100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ கோடியும் ஆக மொத்தம் ரூ .500 .1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துதிருச்சி நகரம் பொலிவான நகரமாக மாற்றப்படும் எனவும், இருபத்து நான்கு மணி நேர குடிநீர் சப்ளை, தடையில்லா மின்சாரம், மேம்படுத்தப்பட்ட விரைவான சாலை, ரயில், ஏழைகளுக்கு வாங்கக்கூடிய விலையில் வீடுகள் என இன்னும் பல வசதிகளை ஸ்மார்ட் சிட்டி கொண்டிருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சியும் உள்ளது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்படும் 20 நகரங்களின் பட்டியல் 2016 ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட 100 நகரங்களில் இருந்தும் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சிலமாதங்களாக திருச்சியில் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஜோன்ஸ் லாங் லாசெல்லே கன்சல்டன்ட்ஸ் நிறுவனமும், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் ஆய்வுகள் மேற்கொண்டது. கூடவே ஆலோசனைகளை பெற மாநகராட்சி கருத்துக்கேட்பு கூட்டமும், மாநகராட்சி மைய அலுவலகம், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களின் முன்பு மக்கள் கருத்துக்கேட்பு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
சமூக வலைதளங்களில் கணக்குகள் ஆரமித்தும் கருத்து கேட்கப்பட்டது. நல்ல கருத்துகளுக்கு கல்லூரி மாணவருக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ 15 ஆயிரம். மூன்றாம் பரிசாக ரூ .10 ஆயிரம் என அறிவிப்பு வெளியானது. இப்படி சுறுசுறுப்பாக கருத்துகள் எல்லாம் கேட்டு அத்துனையையும் தூக்கி போட்டுவிட்டு திருச்சியில் இதயப்பகுதியாக விளங்கும் திருச்சி மலைக்கோட்டை, மற்றும் திருச்சியின் வளர்ந்த பகுதியான தில்லை நகரை ஸ்மார்ட் நகரமாக மாற்றப்போகிறோம் என்கிறார்கள் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொள்ளும் ஜோன்ஸ் லாங் லாசெல்லே கன்சல்டன்ட்ஸ் நிறுவனம்.
இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய ஜே.எல்.எல் கன்சல்டன்ஸி நிறுவன அதிகாரி சைமன்,
'திருச்சி மலைக்கோட்டை, தில்லைநகர், காந்தி மார்க்கெட், உறையூர், அம்மா மண்டபம் ஆகிய பகுதிகள் பொலிவான நகர திட்டத்தில்தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். இந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க சாலைகள் அகலப்படுத்தப்படும், கார்களை நிறுத்துவதற்கு பல அடுக்கக கட்டிடம் கட்டப்படும். சாலையில் சைக்கிளில் செல்லவும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் தனி டிராக் அமைக்கப்படும், மழை நீர் வடிகால் வசதிசெய்யப்படும், மின்சாரம் 24 மணி நேரமும் தடையின்றி வழங்கப்படும், மின் ஆளுமை பஸ் நிலையம் (இ-பஸ்நிலையம்) அமைக்கப்படும், காவிரி ஆற்றின் வடக்கு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு இயற்கை சூழலுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்படும், மேம்படுத்துவதற்காக தேர்வுசெய்யப்பட்ட பகுதிகளில் ரூ 1,149 கோடி, நகரின் மற்ற பகுதிகளில் மேம்பாடு செய்ய ரூ கோடி என ஒட்டுமொத்தமாக ரூ .617 1,766 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. என்றார்.
இது சாத்தியமா திருச்சியின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஒரு பார்வை,
திருச்சி மாநகரப் பகுதியில், 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்து, முன்மாதிரி நகரை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் முதல் நோக்கம். ஆனால் திருச்சி மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது அரியமங்கலத்தில் இருக்கும் மாநகராட்சி குப்பைக்கிடங்கு, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போர் பலருக்கும் பல அவஸ்தைகள் கொடுக்கும் இந்த குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால், பல லட்சம் டன் குப்பை தேங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, சுகாதாரத்தை கெடுத்துள்ளது. கூடவே பலவருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்னும் ஏனோ ஆமை வேகத்திலேயே பணிகள் நடக்கின்றன. இதுமட்டுமில்லாமல் திருச்சியில் இப்போது வளர்ந்துவரும் பகுதிகளாக விளங்கும் கிராப்பட்டி, எடமைலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. திருச்சிவாசிகளின் முக்கிய பிரச்னை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இல்லாததுதான். அதற்கு தேவையான இடம் திருச்சி மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது குறைந்தபட்சம் 20 வருட புலம்பலாக உள்ளது. கூடவே திருச்சியில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் விமான நிலைய ரன்வே நீளம் குறைவுதான், இதன்காரணமாக இந்த திட்டம் இங்கு செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசாங்கம் அரபு நாடுகளுக்கும், டெல்லிக்கு திருச்சியிலிருந்து நேரடியாக செல்ல விமானங்களை விடவில்லை. சரக்கு விமான சேவை குறைபாடு உள்ளது. நெருக்கடி இல்லாத பேருந்து நிலையம் அமைப்பதே ஸ்மார்ட் சிட்டியின் அடையாளம், உய்யங்கொண்டான் வாய்காலில் அரசு மருத்துமனை, உள்ளிட்ட திருச்சியில் உள்ள மருத்துவமனையின் கழிவுகள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதுதான் உய்யங்கொண்டான் வாய்க்கால் பாழாய் போனதற்கு காரணம், இதை சரிசெய்ய வேண்டும், இதையெல்லாம் சரி செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ஏற்கனவே வளர்ச்சியடைந்த பகுதிகளை தேர்தெடுத்து அவற்றை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றியதாக காட்டிக்கொள்ளவே இந்த திட்டத்தை காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள் என புலம்புகிறார்கள் திருச்சி சமூக ஆர்வலர்கள்.

No comments:
Post a Comment