சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள வருமான வரித்துறை அதிகாரி


சென்னை மண்டல வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணசாமி தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து,  சென்னை மண்டல வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணசாமியின் சென்னை மற்றும் பழநி அருகேயுள்ள ஆயக்குடி உள்ளிட்ட அவரது வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஆயக்குடி என்ற பெயரில் அவர் நடத்தி வந்த நிறுவனங்களிலும் சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

இதில் கிருஷ்ணசாமி தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் வருமானத்திற்கு அதிகமாக 6.1 கோடி ரூபாய் அவர் சொத்து சேர்த்திருப்பதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


No comments:

Post a Comment