சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jan 2016

ஐ.ஐ.டி மட்டும்தான் வாழ்க்கையா?

டந்த வாரம் இறந்த 14 வயது மாணவனோட சேர்த்து, இந்த வருடம் மட்டும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டா இன்ஸ்டிடியூட்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் மட்டும் 30 பேர். இத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள காரணம், ஒன்றுதான்.. மன அழுத்தம்!

ஐ.ஐ.டி.யில் தேர்வாக வேண்டுமென்று, பள்ளி படிக்கும் போதே, 'எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி'  என்று இந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவன் பதினோரம் வகுப்புக்கும் , பன்னிரெண்டாம் வகுப்புக்கும் ஒரே நேரத்தில் படிக்கணும். அதே நேரம், ஐ.ஐ.டி போன்ற பெரிய நிறுவனங்களின் நுழைவு தேர்வுக்கும் படிக்கணும். இதை சமாளிக்க முடியாமல், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஐ.ஐ.டி.யில் இருக்கும் 10 ஆயிரம் இடங்களுக்கு 13 லட்சம் மாணவர்கள் போட்டி போடுகிறார்கள். இந்த போட்டியை வைத்து, ஐ.ஐ.டி கோச்சிங் என்று பணம் பார்க்கும் நிறுவனங்கள்,  வருடம் முழுக்க காலை முதல் மாலை வரை மாணவர்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. மாணவர்களை அந்த வட்டத்துக்குள்ளேயே சிந்திக்க வைக்கிறது.
 
இதைப்பற்றி சேலத்தை சேர்ந்த கல்வி ஆர்வலர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், "பெற்றோரிடமும், கல்வி  தேர்வு முறையிலும் மாற்றம் வரும் வரை இது போன்ற தற்கொலைகள் தொடரும்" என்றார்.

ஒரு மாணவனுக்கு எவ்வளவு திறன் இருக்கு, அவனால் என்ன படிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள பெற்றோர்தான் முதலில் அக்கறை செலுத்த வேண்டும். தாங்கள் விரும்பும் படிப்பை படிக்கும் சக்தி தங்களின் பிள்ளைகளிடம் இருக்கா, இல்லையானு யோசிக்க மாட்டேன் என்கிறாங்க. கடின உழைப்பால் பிள்ளைகளை அதிக செலவில் படிக்க வைப்பவர்கள், தங்களின் பிள்ளைகளின் ஆற்றல், திறன் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு எதிர்காலம் குறித்து ஒரு தெளிவான ஐடியா இல்லாதபோதும் கூட, பிள்ளையால் என்ன படிக்க முடியும் என்பதை தெரிந்துக்கொண்டுதான் வழிக்காட்ட வேண்டும். மாறாக தங்களின் விருப்பத்தை திணிக்க கூடாது.
இது ஒரு மாணவனுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட மன அழுத்தம் இல்லையே. 30 பேருக்கு அதே அழுத்தத்தில் தற்கொலை என்னும்போது கூட, தங்களின் கல்வி முறையில் தவறு உள்ளது என புரியவேண்டாமா? பரவலாக மாணவர்கள் மன அழுத்தத்தினால் தற்கொலை முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இல்லையென்றால், மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள்.
நாட்டின் வருங்காலத்தை உருவாக்குபவர்கள் இன்று இவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள் என்று அரசாங்கத்திற்கும் அக்கறை வேண்டும். அதற்கான மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

இந்த முடிவை எடுக்கும் மாணவர்கள், பெரும்பாலும் பன்னிரெண்டாவது படிப்பவர்கள்தான். பத்தாவது வரும் போதே மன அழுத்தம் ஆரம்பிக்கிறது. பதினோராம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு வரும் போது இன்னும் அதிகமாகிறது. பதினோரம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தகுதி தேர்வு நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களை மட்டும்தான் பன்னிரெண்டாம் வகுப்பில் ஐ.ஐ.டி கோச்சிங்குக்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். ஐ.ஐ.டி நுழைவு தேர்வுகள், பொது தேர்வு முடிந்து அடுத்த நாள் வைக்கணும். இருபது நாள் கழித்து தேர்வு வைத்தால்,  இடைப்பட்ட நாட்களில் மாணவர்கள் அதுநாள் வரை படித்த விசயங்கள் மறந்துபோக ஆரம்பிக்கும். ஆசிரியர்களும் 2 வருட பாடத்தை 20 நாட்களில் எப்படி நடத்த முடியும்? 

தேர்வுகள் எல்லாம் எளிமையாக பாஸ் பண்ண வைக்க வேண்டும். ஆனால், சென்டம் எடுக்க கடினமா இருக்கணும். அதுதான் ஆரோக்கியமான தேர்வு. உதாரணத்துக்கு போன வருஷம் ஜே.இ மெயின் தேர்வில் 360 மதிப்பெண்ணுக்கு 105 மார்க் தான் கட் ஆப். இதில் 310 மார்க் வாங்கினவர்கள் 100 பேர் தான். 270 மார்க் 1000 பேரும், 210 மார்க் 10,000 பேரும், 140 மார்க் 50,000 பேர் வாங்கியிருக்காங்க.  முழு மார்க் வாங்கினால்தான்  ஐ.ஐ.டி என்று இல்லாமல், 140 மார்க் வாங்கினாலே ஐ.ஐ.டி.க்கு அடுத்த அளவில் இருக்கும் என்.ஐ.டி.யில் அட்மிசன் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு.
 
இதுவே தமிழ்நாடு பொதுத் தேர்வில், 200/200 மார்க் 9,000 பேர் வாங்குகிறார்கள். இதை பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். அதனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இந்த பொதுத் தேர்வு ஆரோக்கியமானதும் கிடையாது. பொதுத் தேர்வு 50 கேள்விகள் எல்லா மாணவர்களுக்கும் எளிமையாக இருக்க வேண்டும். அடுத்த 50 கேள்விகள் கடினமாக இருக்க வேண்டும். அதில் 90 சதவீதம் மார்க் வாங்குபவர்களைதான் ஐ.ஐ.டி.க்கு போக அனுமதிக்க வேண்டும். 4.30 மணிக்கு பள்ளி நேரம் முடிந்து, 5.30 முதல் 9.30 மணி வரை ஐ.ஐ.டி கோச்சிங் கொடுக்கிறாங்க. சனிக்கிழமை, ஞயிற்றுகிழமைகளில் ஐ.ஐ.டி அட்வான்ஸ் மற்றும் மெயின் தேர்வுக்கு, சிறப்பு வகுப்புகள் எடுக்கிறாங்க... தேர்வுகளும் வைக்கிறாங்க. ஒரு பொது விடுமுறை கூட விட்டு வைப்பதில்லை. ஒரு நாள் கூட ரெஸ்ட் இல்லை.

இந்தாண்டு, நல்ல ரிசல்ட் கொடுத்தாதானே அடுத்தாண்டு, நிலையா நிற்க முடியும் என கல்வி நிறுவனங்களும் அதிக அளவு கோச்சிங் கொடுக்கிறாங்க. அடுத்தடுத்து படி படி என சொல்லும் பள்ளி, கோச்சிங் ஒரு பக்கம்... இவ்வளவு செலவு செய்து படிக்க மாட்டேன் என்கிறான் என சொல்லும் பெற்றோர்கள் மறுபக்கம். அப்ப அந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் எந்த அளவில் இருக்கும்? எந்த கல்வி நிறுவனமும் ஞாயிற்றுக்கிழமை இயங்க கூடாது. மாணவர்களுக்கு ரெஸ்ட் கொடுக்கணும் என முதலில் கொண்டு வரவேண்டும்.

எல்லா ஊர்களிலும் இன்று ஐ.ஐ.டி கோச்சிங் பெரிய பிசினஸ் ஆகிவிட்டது. ஒவ்வொரு கோச்சிங் இன்ஸ்டிடியூட்டிலும், பிள்ளைகளை படிக்க வைக்க குறைந்தது ஒரு லட்சம் அவசியம். எந்த பள்ளியில் ஐ.ஐ.டி கோச்சிங்கும் சேர்த்து நடத்துக்கிறார்களோ அங்குதான் பெற்றோர்கள் அலை மோதுகிறார்கள். எங்க பள்ளியில் படித்தவர்கள் 100 பேர் ஐ.ஐ.டி.யில் தேர்வாகியிருக்கிறார்கள் என நிறைய விளம்பரம் கொடுக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறு. கல்விக்கு விளம்பரம் தேவையில்லை. அந்த பள்ளி நிறுவனத்தின் சாதனைகளை அவர்களின் இணையதளத்தில் போட்டுக்கொள்ளலாம். இப்படி ஊர் முழுக்க விளம்பரப்படுத்தும்போது, பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

ஐ.ஐ.டி என்பது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு நல்ல சாய்ஸ்தான். உங்களின் பிள்ளை பத்தாவது சி.பி.எஸ்.சி தேர்வில் 9/10 க்கு மேல் மார்க்ஸ் இருந்தா, ஐ.ஐ.டி.க்கு படிக்க வைக்கலாம். ஆனால், 7/10, 8/10 வாங்கின பிள்ளைகளை ஐ.ஐ.டி.க்கு திணிக்காதீர்கள். சேமிப்பை பிள்ளைகளின் படிப்பில் கொட்டுகிறார்கள். பிள்ளைகள் படிக்க திணறும்போது, 'நான் கஷ்டப்பட்டு இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைக்கிறேன், நீ சரியா படிக்க மாட்டேன் என்கிறாய்' என்று வார்த்தைகளால் ஒரு குற்ற உணர்ச்சியை பிள்ளைகள் மனதில் விதைகிறார்கள். 'அய்யோ, அம்மா அப்பா பாவம்... நம்மளாலதான் சரியா படிக்க முடியல!' என நாளடைவில் மாணவர்கள் வருந்தப்பட ஆரம்பிக்கிறார்கள்.

பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கும் மாணவர்களுக்கு நிறைய தன்னம்பிக்கை வகுப்பு, யோகா, ஒருநாள் விடுமுறை போன்றவை அதிகமாக தேவைப்படுகிறது. ஐ.ஐ.டி மட்டும்தான் உலகமா? மாணவர்கள் சாதிக்க, உலகத்தில் இன்னும் நிறைய துறைகள் இருக்கின்றன..! 

No comments:

Post a Comment