சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Jan 2016

இரு வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்: அமெரிக்காவில் அபூர்வம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் புத்தாண்டிற்கு ஒரு நிமிடம் முன்னர் ஒரு குழந்தையும், புத்தாண்டின் ஒரு நிமிடம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்த அபூர்வம் நிகழ்ந்துள்ளது.
 
நம்ம ஊர்ல புது டிரஸ் போட்டுட்டு,  கைல மிட்டாயோட ஒரே உருவத்தோட ரெண்டு பேர் வந்து நிப்பாங்க. கேட்டா ‘ட்வின்ஸ்’னு சொல்லுவாங்க. அவங்கள புதுசா பாக்கறவங்கெள்ளாம் ஜீன்ஸ் பட செந்தில் மாதிரி தான். யாரு மூத்தவங்க, யாரு இளையவங்கன்னே கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட இரட்டையர்கள் ஒரு பத்து நிமிட இடைவெளிக்குள்ளாகவே இவ்வுலகைப் பார்த்திருப்பார்கள். அந்த ஒரு நாள்ல இரண்டு பேருக்கும் பிறந்த நாள் வரும்போது வீடே கொண்டாட்டமா இருக்கும். பெற்றோர்கள், பொதுவாகவே இரட்டையர்களாய்ப் பிறப்பவர்களை இயற்கை தந்த வரமாகவே பார்ப்பார்கள். அதனால் அந்த பிறந்த நாட்கள் நம்மூர் ஆளுங்கட்சியின் பொதுக்குழுவைப் போல் களைகட்டும்.


புத்தாண்டுப் பரிசு

இந்நிலையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகானத்தில் 2015ல் ஒரு குழந்தை, 2016ல் ஒரு குழந்தை என இரு வேறு ஆண்டுகளில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. சான்டிகோ நகரின் ஜியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரைபல் வெலன்சியாவிற்கு கடந்த டிசம்பர் 31-ம் தேதி பிரசவம் நடந்தது. புத்தாண்டு பிறப்பதற்கு 1 நிமிடம் முன்பாக, அதாவது நள்ளிரவு 11.59 அளவில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அடுத்த இரண்டு நிமிடத்தில், அதாவது புத்தாண்டிற்குப் பிறகு, 2016 ஜனவரி 1 அன்று அதிகாலை 12.01 மணிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இப்படி இரு வேறு ஆண்டுகளில் இரட்டையர்கள் பிறந்ததால் மருத்துவமணையிலிருந்த அனைவரும் புத்தாண்டோடு, இந்த ஆச்சரியத்தையும் சேர்த்துக் கொண்டாடினர். 

பெண் குழந்தைக்கு ஜேலின் எனவும்,  மகனுக்கு லூயிஸ் எனவும் பெயரிட்டுள்ளது லூயிஸ் – மரைபல் தம்பதி. தனது பெயரையே மகனுக்கும் வைத்துள்ள லூயிஸ்,  “இதை புத்தாண்டு எங்களுக்குக் கொடுத்த பரிசாக நினைக்கிறோம். என் வாழ்க்கையிலேயே இது மிகவும் மகிழ்ச்சியான நாள்” என்று பூரித்தார்.
மைனர் மாப்பிள்ளை படத்தில்,  “ நீ என்னைவிட அரை மணி நேரம் லேட்டா பொறந்தவன்” என விஜயகுமார் தன் தம்பியிடம் திமிறாகக் கூறுவார். இந்த அக்கா,  தனது தம்பியிடம் என்ன சொல்லும்? - “நீ என்னவிட ஒரு வருஷம் லேட்டா பொறந்தவன்டா” - அப்டினுதானே சொல்லும்.  


No comments:

Post a Comment