சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jan 2016

இப்போ உலகின் நம்பர் 1 பெளலர்... ஒரு தமிழர்!

கிரிக்கெட் பிட்ச்சில் இவர் பெளல் செய்தாலே, பிட்ச் சும்மா அதிருதுல்ல என்று கதறுகிறார்கள் பேட்ஸ்மேன்கள். அதிர்வுக்குக் காரணம் - அஷ்வின் ரவிச்சந்திரன். ‘2015-ல் இந்தியாவின் நம்பர்-1 டெஸ்ட் பந்து வீச்சாளர்’ என்று ICC ரேங்கிங் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் கெத்தாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார் ‘இந்தியாவின் ஆஃப் ஸ்பின்னர்’.

ஏற்கெனவே ICC தர வரிசைப் பட்டியலில் ஆல்ரவுண்டராக முதலிடம் பிடித்திருப்பவர், இப்போது பௌலராகவும் முதலிடத்துக்கு ஸ்பின்னியிருக்கிறார். ஒரு பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் மற்றும் பௌலர் என இரண்டு பிரிவிலும் முதலிடம் பிடித்திருப்பது இந்தியாவில் 1973-க்குப் பிறகு இதுவே முதல் முறை. 1973-ல் பிஷன் சிங் பேடி அப்படி ரேங்கிங் பிடித்தார். கிட்டத்தட்ட 42 வருடங்களுக்குப் பிறகு ஓர் இந்தியர், அதுவும் ஆல்ரவுண்டராக முதல் வரிசையில் இருப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். 2015 ஆரம்பத்தில் 15-வது இடத்தில் இருந்த அஷ்வின், வருட இறுதியில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
இந்த வருடம் நடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 62; இதுவரை ஆடிய 32 டெஸ்ட் போட்டிகளில் தொடர் நாயகன் விருது பெற்ற எண்ணிக்கை 5. இதற்குமுன் ‘200 போட்டிகளில் 5 முறை தொடர் நாயகன் விருது’ வென்ற சச்சினின் சாதனையையும் சமன் செய்திருக்கும் அஷ்வின், விரைவில் முந்திவிடுவார். இடையில் சில காலம் அஷ்வின் பெளலிங்கில் சொதப்பியபோது, ‘அவருக்கு விவேகம் வேண்டும்’ என்று ஆரம்பத்தில் சொல்லி வந்தவர்கள், இப்போது ‘‘இந்தியாவின் ரியல் ஹீரோ’’ என்று அஷ்வினைக் கொஞ்சுகிறார்கள்.

சரி... எப்படி இந்த விவேகம் வந்தது அஷ்வினுக்கு? ‘இல்லாமல் புகையாது; அள்ளாமல் குறையாது’ என்பதுபோல், அஷ்வினுக்குள் நெருப்பு பூத்த ஒரு சம்பவம் இதுதான்.
‘சொடுக்குப் பந்து’ பற்றித் தெரியுமா உங்களுக்கு? அஷ்வினின் ஆரம்பமே அதுதான்! சாதாரண டென்னிஸ் பந்தை, கேரம் விளையாடுவதுபோல் ஒரு விதமாக விரல்களால் சொடுக்குவதுதான் சொடுக்குப் பந்து. அதுதான் இப்போதைய ஸ்பின். தெருக்களில் விளையாடப்படும் டென்னிஸ் பந்துகளில் இது சுலபம். ஆனால், சர்வதேச விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ‘காரட் பந்து’களில் இது எப்படிச் சாத்தியம் என்றுதான் மலைத்திருந்தார் அஷ்வின். அந்த நேரம்தான் இவரின் ஆஸ்தான விளையாட்டு வீரர், இலங்கையைச் சேர்ந்த அஜந்தா மெண்டிஸைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘‘ஏன் முடியாது? உனக்கு நீளமான விரல்கள்; நீ நினைத்தால் அது சாத்தியம்!’’ என்று மெண்டிஸ் தந்த உற்சாகம்தான் அஷ்வினின் ஸ்பெஷல் ஸ்பின்களுக்கு உந்துகோல்.
‘‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை... கிரிக்கெட் மாஸ்டர் பிஷென் பேடியைப் பிரதிபலிப்பது மிகவும் கர்வமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் கேப்டன் கோஹ்லிதான் காரணம். டீமை அவர் வழிநடத்தும் விதம் அற்புதம். அவரின் வழிநடப்பது பெருமையாக இருக்கிறது!’’ என்கிறார் ‘மேன் இன் ஒயிட்’ அஷ்வின் ரவிச்சந்திரன். 

கமான் இந்தியா... பின்னிப் பெடலெடு தமிழா!


No comments:

Post a Comment