கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமானப் பயணச் சேவை வழங்கி வரும் மல்லையா என்ற கொள்ளைக்காரன் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள மக்களின் பணத்திலிருந்து இது வரை ஆட்டையப்போட்டுள்ள தொகை 7000 கோடிகளுக்கும் மேல். இது தவிர கிங்பிஷர் ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் 44 லட்சம், வருமான வரி 422 கோடிகளையும் கொள்ளையடித்துள்ளான் இந்த கேடி பக்கிரி.
கிங் பிஷர் ஊழியர்களின் வருமான வரி 42 கோடிகளையும் அரசுக்கு கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளான் இந்தக் கிரிமினல். 2011 இறுதியில் பணமில்லாமல் தொங்கிச் சரிந்தது கிங் பிஷர் நிறுவனம். உடனே கோடிக்கணக்கில் கொட்டி கைதூக்கி விட்டன இந்திய வங்கிகள். இந்த வகையில் SBI மட்டும் 1457 கோடி கடனாகவும், 180 கோடிகள் கிங் பிஷர் வங்கிக்-கொள்ளையன்-மல்லையா பங்குகளை(5.67% share – இதன் இன்றைய மதிப்பு வெறும் 76 கோடிகள்) துட்டு கொடுத்து வாங்கியதன் மூலமும் கொட்டியது.
தேனி மாவட்டம் போடி SBI வங்கிக் கிளையில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் புகைப்படங்களை வங்கிகளின் வாசலில் ஒட்டி, மாணவர்களை ஏதோ ஜேப்படி திருடர்களைப் போல அவமானப்படுத்தும் அடாவடித்தனத்தில் இறங்கியுள்ளன.
கடன் தள்ளுபடியை ஏப்பம் விட்ட கும்பலோடு,வங்கியில் தொழில்கடன் வாங்கி ஏப்பம் விட்டுள்ள விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிகளோடு இணக்கமாகவும், அக்கொள்ளையில் பங்காளியாவும் நடந்துவரும் வங்கி நிர்வாகம், சிறு மாணவர்களைக் கிள்ளுக்கீரைகளாக நடத்துவதையும் எட்டி உதைப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. மேலும் உழைக்கும் மக்கள் எதுவும் கேட்க மாட்டார்கள் கேட்பதற்கு துணிவு இல்லாதவர்கள் என்ற திமிருடன் தான் இந்த வங்கிகள் செயல்படுகின்றன என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன.
- படம்:தேனி மாவட்டம் போடி SBI கிளையில் எடுக்கப்பட்டது.
- படம்:தேனி மாவட்டம் போடி SBI கிளையில் எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment