சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2013

பூமிக்கு கீழே இருப்பவையும் நில உரிமையாளருக்கே சொந்தம்!



'
பூமிக்கு அடியில் இருக்கும் எதுவும் அரசாங்கத்துக்குத்தான் சொந்தம்' 
-
இப்படித்தான் காலகாலமாக எல்லோருமே சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், 'அப்படியெல்லாம் எந்த சட்டமும் இல்லை. பூமிக்கு கீழே இருக்கும் கனிமங்கள் உட்பட அனைத்தின் உரிமையும் அந்த நிலத்தின் உரிமையாளருடையதே!' என்று ஒரு தீர்ப்பு சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

'
பூமிக்கு அடியில் இருக்கும் கனிம வளம், அரசுக்கு சொந்தமானது' என்று கேரள உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை எதிர்த்து நில உரிமையாளர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். 

இதை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூன்று நீதிபதிகள் பெஞ்ச், ''1957-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுரங்கம், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று சட்டத்தின் 425-ம் பிரிவில் நாட்டின் எந்தப் பகுதியிலும் முறையான அனுமதி, உரிமம் அல்லது சுரங்க குத்தகை இல்லாமல் எவரும் நிலத்தடி கனிம வளங்களை எடுக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், நிலத்தடியில் உள்ள கனிம வளத்துக்கு அரசு மட்டுமே உரிமை கொண்டது என்று இந்தப் பிரிவு குறிப்பாகச் சொல்லவில்லை. நிலத்தின் சொந்தக்காரருக்கு அந்த வளத்தை எடுக்கும் உரிமை இல்லை என்றும் இந்த சட்டப் பிரிவு கூறவில்லை. இதனால் நிலத்தடி கனிம வளத்துக்கு, அந்த நிலத்தின் சொந்தக்காரர் உரிமை கோர முடியாது என்பதை ஏற்க இயலாது'' என்று கூறியுள்ளனர்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !                  

No comments:

Post a Comment