சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Jul 2013

ராஜ்ய சபா தேர்தலில் தேமுதிக-வின் தோல்வி எதனால்?முதல்வர் ஜெயலலிதா சொன்னது போல் திராணி இல்லாமல் போனது கேவலம்தான்.தமிழக சட்டசபையில் பிரதான எதிர்கட்சி என்றாலும் டெல்லியில் லாபி செய்ய அனுபவம் இன்மையும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை ஓரணியில் இணைக்க முடியாததும் முதல் காரணம்.

                                       
          
சரி  அடுத்த வாய்ப்பு என்ன என்று கண்டறிந்து அதையாவது செயல் படுத்தியிருக்கலாமே?
ராஜ்ய சபா தேர்தலில் அதிமுக அதிரடியாக 5 வேட்பாளர்களை அறிவித்ததும் கம்யுனிஸ்ட்கள் இரண்டும் தனித்து இருந்தன. தற்போது 2 MLA க்களை  கொண்டுள்ள தேமுதிக என்ன செய்திருக்க வேண்டும்? 10 MLA க்களை  கொண்டு இருக்கும் மார்க்சிஸ்ட், மற்றும் 8 MLA க்களை  கொண்டு இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அணி அமைத்திருக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் உட்கட்சி குழப்பத்தில் இருந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தேமுதிக வழிய சென்று எங்கள் MLA க்களின் ஆதரவும் உங்களுக்கே அதனால் பயப்படாமல் நீங்கள்  T.ராஜாவை நிறுத்துங்கள் என்று சொல்லியிருந்தால் இன்று T.ராஜாவும் வெற்றி பெற்று இருப்பார். தேமுதிகவும் தேசிய அளவில் சிறிதளவாவது முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் முகத்திலும் கரியை பூசியிருக்கலாம்.
22 MLA க்களை வைத்துவிட்டு என்ன தைரியத்தில் தேமுதிக தனி வேட்பாளரை நிறுத்தியதோ? தெரியவில்லை.

                               

தேமுதிகவை பொருத்தவரை விஜயகாந்த் க்கு அரசியல் ஆலோசகர் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தான். அவரின் பேச்சை கேட்டுத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றால் இந்த அருமையான சந்தர்ப்பத்தை விஜயாகாந்த் பயன்படுத்திக்கொண்டு  பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியிலிருந்து நீக்கலாம் அல்லது டம்மி பீசாக வைத்து கொள்ளலாம்.

                                


அல்லது பண்ருட்டி ராமச்சந்திரன்  சொல்லியதை எல்லாம் கேட்பாரா விஜயகாந்த் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். அதுசரி தேமுதிகவின் இன்னொரு "அதிகாரமையம் " மச்சான் சுதீஷ் சொல்லித்தான் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக தோல்வியடைந்து இருக்கிறது என்றால் "நீயெல்லாம் நல்லா வருவா" என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். வழக்கம் போல தேமுதிகவின் தொண்டர்கள்  " கேப்டன் வாழ்க " கோஷம் போடவேண்டியதுதான்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !

No comments:

Post a Comment