அறுபத்தைந்து வயதைத் தாண்டிய ஒரு கிறிஸ்துவ மதபோதகர் செய்த செக்ஸ் அலம்பல்களால் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறது தூத்துக்குடி மாவட்ட பெந்தெ கொஸ்தே சபை.
கிறிஸ்துவ மதத்தில் உள்ள உட்பிரிவுகளில் ஒன்று பெந்தெகொஸ்தே. வழிபாட்டில் மிகவும் தீவிரத்தன்மையைக் கடைப்பிடிப்பவர்கள் இவர்கள்.
இந்த சபையில் உள்ள பாஸ்டர்கள் மற்றும் சிஸ்டர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.
இந்த அமைப்பின் பாஸ்டர்களுக்கு வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பாதான் உடை. பெண்கள் வெள்ளைச் சேலைதான் கட்டுவார்கள். நகை என்ற பெயரில் அவர்களது காது, கழுத்தில் பொட்டுத் தங்கம் கூட இருக்காது. டி.வி., பார்க்கக் கூடாது, சினிமா பாடல் கேட்கக் கூடாது, ஆசாபாசம் கூடவே கூடாது என்று இருக்கும் இவர்களை வழிநடத்தக்கூடிய மூத்த வயது பாஸ்டர் ஒருவர்தான், செக்ஸ் சில்மிஷங்களைச் செய்து தூத்துக்குடி மாவட்ட பெந்தெகொஸ்தே சபையையே திகிலில் ஆழ்த்தியுள்ளார். ஆசாபாசம்தானே கூடாது ஆபாசம் இருந்தால் என்ன என்று அவர் நினைத்து விட்டாரோ என்னவோ?
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ளது ‘தி பெந்தெ கொஸ்தே மிஷன்’. இதை சென்டர் (மையம்) என்று அழைக்கிறார்கள். மாவட்டம் முழுவதுமுள்ள இதன் கிளைகளை சபைகள் என்கிறார்கள். இந்த சென்டரில் உள்ள பாஸ்டர்தான் சபைகள் அனைத்துக்கும் தலைமை அதிகாரி போன்றவர். அப்படி ஒரு பொறுப்பில் இருந்தவர்தான் பாஸ்டர் பி.வி.மேத்யூ என்ற கேரளாக்காரர்.
அப்படி என்னதான் செய்தாராம் பி.வி.மேத்யூ?
ஜெபக்கூட்டங்களுக்கு வரும் பெண்களில் யார் யார் விதவைகள்? யார் யாரின் கணவன்மார்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்பதை பாஸ்டர் தெரிந்து கொள்வார்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் போன் போட்டு செக்ஸ் பற்றிப் பேசுவது, சென்டருக்கு வரும் பெண்களை ஜெபம் செய்யும் சாக்கில் தொடக்கூடாத இடத்தில் தொட்டுப்பேசுவது, உடன் படும் பெண்களிடம் லீலைகள் புரிவது என்று ஏகத் துக்கும் இன்பலீலைகள் புரிந்திருக்கிறார் அவர்.
மேத்யூவின் செக்ஸ் லீலைகளில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று பெண் விசுவாசிகள் (பக்தர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்) தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த வேளையில் துணிச்சலாகக் களத்தில் இறங்கி பாஸ்டரின் முகமூடியை நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார் உமா ஒய்ட்டீன் என்ற பெண்.
தூத்துக்குடி மாவட்ட மனித உரிமைக் கழக மகளிர் அணித்தலைவியாக இருக்கும் உமா ஒய்ட்டீனிடம் இது பற்றிப் பேசினோம்.
‘‘நானும் அந்த சபையின் உறுப்பினர்தான். என் உடன்பிறந்த அக்கா ஒருவரும் அந்த சபையில் ஊழியக் காரியாக இருக்கிறார். பாஸ்டர் மேத்யூ இந்த சென்டருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு வந்தார். அவர் ஒரு பாஸ்டராக இல்லாமல் பாவியாகத்தான் இருந்திருக்கிறார்’’ என்று ஆரம்பித்து அவரது லீலைகளை புட்டுப் புட்டு வைத்தார் உமா ஒய்ட்டீன்.
‘‘ஜெபக்கூட்டங்களுக்கு வரும் பெண்களில் யார் யார் விதவைகள்? யார் யாரின் கணவன்மார்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்பதை பாஸ்டர் தெரிந்து கொள்வார். பிறகு அந்தப் பெண்களிடம் நைஸாகப்பேசி செல்போன் நம்பர்களை வாங்கிக் கொள்வார்.
இரவு பதினொரு மணிக்குமேல்தான் அவரது இன்ப லீலைகள் ஆரம்பிக்கும். அர்த்தராத்திரியில் அந்தப் பெண்களுக்கு போனைப் போட்டு பக்தியோடு பேச ஆரம்பிப்பார். அப்படியே அது மெல்ல மெல்ல செக்ஸ் பக்கம் திசைதிரும்பி விடும். பாஸ்டர் பேசுகிறார் என்பதால் பல பெண்கள் போனை பாதியில் கட் பண்ண முடியாமல் வேண்டா வெறுப்பாக அந்த அவஸ்தையை அனுபவித்திருக்கிறார்கள்.
போனில் செக்ஸ் குறும்பு செய்வது போதாது என்று சென்டருக்கு வரும் பெண்களிடம் தாராளமாக சில்மிஷங்கள் செய்திருக்கிறார். பெண்களின் தலையில் கைவைத்து ஜெபம் செய்யும்நேரத்தில்கூட கையை ஒரு மாதிரியாக திருகித்திருகி இவர் சேட்டைகள் புரிந்திருக்கிறார். யாராவது எதிர்ப்புத் தெரிவித்தால் உடனே ஆயிரம், இரண்டாயிரம் என்று அள்ளிக் கொடுத்து அவர்களது வாயை அடைத்துவிடுவார்.
அல்லது சென்டரில் இருக்கும் விலை உயர்ந்த பொருளை தூக்கிக் கொடுத்து சரிக்கட்டி விடுவார். உடன்பட்டவர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
இவரது செக்ஸ் வலையில் விழுந்த பெண்களை இவர் சுவைக்கவும் தயங்கவில்லை. இயேசுவின் வீடு என்று நாங்கள் கருதிக்கொண்டிருந்த சென்டரை, இவர் ஒரு விபசார விடுதியாகவே நடத்தியிருக்கிறார். அந்த சென்டரில் திருமணமாகாத முப்பது ஊழியக்கார பெண்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலான பெண்களை இவர் வசப்படுத்தப் பார்த்திருக்கிறார். ஒரு சிலர் இவரது வலையில் விழவும் செய்திருக்கிறார்கள்.
அவரது செக்ஸ் வலையில் விழுந்த பெய்த் என்ற ஊழியக்கார பெண் சமீபத்தில் கர்ப்பமாகியிருக்கிறாள். இந்தத் தகவல் ஊருக்குள் பரவும் முன்பே அந்தப் பெண்ணுக்குப் பணம் கொடுத்து கேரளாவுக்கு அனுப்பியிருக்கிறார் மேத்யூ. அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் பாதிக் கப்பட்ட பெண்கள் என்னிடம் வந்து அழுதார்கள். ‘அவரது கொட்டத்துக்கு நீங்கள்தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்கள்.
பெண்களை திரட்டிப்போய் சத்தம்போட்டால் சபையின் பெயர் கெட்டுவிடும் என்பதால் அவரைக் கையும், களவுமாகப் பிடிக்க முடிவு செய்தேன். முதலில் அந்தப் பெண்கள் சொல்வது உண்மைதானா என்பதை உறுதி செய்ய நானே சென்டருக்குச் சென்று பாஸ்டரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். என்னிடம் குழைநது குழைந்து பேசிய பாஸ்டர், என் செல்போன் நம்பரை கேட்டு வாங்கிககொண்டார்.
என்ன ஆச்சரியம்? அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு என் லைனில் வந்து விட்டார். ‘‘எப்படி இருக்கே? அது எப்படி இருக்குது? இது எப்படி இருக்குது? என்று தலைமுதல் உள்ளங்கால் வரை எப்படி இருக்கு? என்று விசாரித்தவர், ‘எப்படிச் செய்யணும்? அப்படிச் செய்யணுமா? இப்படிச் செய்யணுமா?’ என்று இம்சை செய்து விட்டார்.
அறுபத்தைந்து வயதுக்காரரா இப்படிப் பேசுகிறார் என்று எனக்குத் தலையே சுற்றிவிட்டது. அவரது பேச்சை என் செல்லில் டேப் செய்து, அதை கேசட் டாக்கி முக்கியமானவர்களுக்குக் கொடுத்தேன். கேட்டவர்கள் எல்லாம் கிறுகிறுத்துப் போய்விட்டார்கள்.
அதையடுத்து மேத்யூவின் அறையைச் சோதனை போட சென்டரின் ஊழியர்கள் முடிவு செய்‘தார்கள். அப்படி சோதனை செய்தபோது, அவரது அறையில், 16 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகக் கிடைத்தது. அது எல்லாம் எங்களைப் போன்ற கிளைச் சபைகளின் விசுவாசிகள் கொடுக்கும் காணிக்கைப் பணம்.
அந்தப் பணத்தை அவர் ரொக்கமாகவே வைத்திருக்கக் கூடாது. சபைகளின் வளர்ச்சிக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் செலவு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அதை பதுக்கி வைத்திருக்கிறார். அறையில் இருந்து கண்டுபிடித்ததே அவ்வளவு பணம் என்றால், இன்னும் எவ்வளவு பணத்தை எங்கெல்லாம் பதுக்கி வைத்திருக்கிறாரோ?’’ என்று அதிர்ச்சி விலகாமல் பேசினார் உமா ஒய்ட்டீன்.
உமாவின் கேசட் ஆதாரம், அவரது அறையில் கிடைத்த பணம் போன்றவற்றால் பாஸ்டர் மேத்யூவை தூத்துக்குடியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 24_ம் தேதி சேலத்துக்கு மாற்றியிருக்கிறார்கள்.
‘‘மேத்யூ ஏற்கெனவே குன்னூர், பாளையங்கோட்டை போன்ற ஊர்களில் இதேபோன்ற செக்ஸ் சேட்டைகளைச் செய்து விட்டுத்தான் இங்கு வந்திருக்கிறார். இனி சேலத்திலும் அவர் இதைத்தான் செய்யப்போகிறார். எனவே அவரை, சொந்த மாநிலமான கேரளத்துக்கே மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடத் தயாராகி வருகிறார்கள் பெந்தெகொஸ்தே கிறிஸ்துவர்கள்.
இதற்கெல்லாம் பாஸ்டர் பி.வி.மேத்யூ என்ன சொல்கிறார்? சேலத்தில் இருக்கும் அவரிடம் போனில் பேசினோம்.
“அதெல்லாம் சும்மா. என்மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள்’’ என்ற இரண்டே வார்த்தையைத்தான் பேசினார் அவர்.
இதுபோன்ற பாஸ்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை இரும்புலியூரில் இருக்கும் ‘தி பெந்தெ கொஸ்தே’ சபையின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். போனை எடுத்தவர்கள் ‘‘ஒரு ஐந்து நிமிடம் பொறுங்கள், ஐந்து நிமிடங்கள் பொறுங்கள்’’ என்றார்களே ஒழிய, கடைசிவரை யாரும் பொறுப்பான பதிலைச் சொல்லவே இல்லை
நன்றி: Bhisma Chariya
No comments:
Post a Comment