சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jul 2013

எண்ணை தேய்த்து குளிங்க...



கடுமையான வேலை, டென்ஷனுக்கு பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு, எண்ணை தேய்ச்சு குளிக்கிறது தான். எண்ணை தேய்ச்சு குளிக்கும் போது வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்.

சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே எண்ணை குளியல் எடுக்கக்கூடாது. சூடு எண்ணையின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள அழுக்குகள் நெகிழும். சுடுதண்ணீரை உடம்பில் ஊற்றும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா வெளியேற தொடங்கும்.

இரும்பு கரண்டியில் நல்லெண்ணையுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணை வெதுவெதுப்பாக இருக்கும் போதே தேய்க்கணும்.

இரும்புடன் எண்ணை சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணை ஊற வைத்து இருபது நிமிடம் வரை, மசாஜ் செய்யலாம். அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை எண்ணை ஊறலாம்.

எண்ணை தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சிலபேருக்கு வயிற்றில் வாயு தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி, உருட்டி தேக்க சரியாகும். இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணை சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்து குளிக்கலாம். மலசிக்கலும் போகும்.

தலையில் நல்லெண்ணையை அரக்கி தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப்பெறும். மூலையில் உள்ள ஹைப்போதாலமஸ், பிட்டியூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்டியூட்டரி சரியாக இயங்க ஆரம்பிக்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும். ஆனால் முடி கொட்டுகிறவர்கள் தலையை அரக்கித் தேய்க்கக் கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க, எண்ணையை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணையோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.

மாதவிடாய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணை குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணைத் தடவக் கூடாது. அப்படி தடவினால் கை கால் வலி வர வாய்ப்புண்டு.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !                  


No comments:

Post a Comment