சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Jul 2013

வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க

நம் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முக்கிய காரணம் என்ன தெரியுமா?

நம் நாட்டின் இயற்கை வளம் ஒருபுறமிருக்க நம் நாட்டின் மகத்தான மனித வளத்தை வெளிநாட்டு நிறுவனகள் மறைமுகமாக கொள்ளையடிக்கின்றன.அவர்கள் நாட்டில் அனைத்து வசதிகளும் இருந்தும் நம் நாட்டில் தொழிற்சாலைகளை தொடங்குகிறார்கள். வேலைவாய்ப்பு கொடுக்கிறோம் என்ற பெயரில் நம் நாட்டு அரசாங்கமும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால் வேலைக்கு அமர்த்தும் தொழிலாளர்களுக்கு வேலைக்கேத்த சம்பளம் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அவர்கள் நாட்டில் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட நம் நாட்டில் மிகவும் குறைவாகவே கொடுக்கின்றன வெளிநாட்டு நிறுவனங்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன்.

இப்போது இந்தியாவில் பென்ஸ் கார் 45 லட்ச ரூபாயில் இருந்து கிடைக்கிறது. பெரும்பணக்காரர்கள்  வெளிநாட்டு தயாரிப்பு என்பதால் போட்டிபோட்டு கொண்டு வாங்குகிறார்கள் . ஆனால் அந்த காரின் பெரும்பாலான உதிரி பாகங்கள் இந்தியாவில் தான்  அதுவும் இந்திய நிறுவனங்களால் தான் தயாரித்து அனுப்பபடுகின்றன. அவர்கள் அங்கே அதை கார்களில் பொருத்தி மட்டுமே அனுப்புகின்றனர். இது எதனால் நடக்கிறது? என்றால் அங்கு தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஊதியம் அதிகம் .

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு கொடுக்கும் சம்பளத்தில் இரண்டு அமெரிக்க தொழிலாளிகளை அல்லது தைவான் நாட்டு தொழிலாளிகள் 5 பேரையோ அல்லது பிரேசில் நாட்டு தொழிலாளிகள் 8 பேரையோ வேலைக்கு வைத்து கொள்ள முடியும்.
ஆனால் இந்தியாவில் ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு கொடுக்கும் சம்பளத்தில் ஏறக்குறைய 128 பேரை வலைக்கு அமர்த்தி கொள்ளலாம்.

ஒரு இந்திய தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 25 ரூபாய் என்றால் ஜெர்மன் தொழிலாளிக்கு 1150 ரூபாய் கொடுக்கவேண்டும்.அதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கின்றனர். கடந்த இரோபது ஆண்டுகளாக இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள்  பல தொழில்களில் முதலீடு செய்துள்ளன. அதுவும் சுற்றுப்புற சூழலுக்கும், தொழிலாளிகளின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்க கூடிய தொழில்கள் தான் இந்தியாவிற்கு வருகின்றன. முதலீடு என்ற பெயரில் 
நம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளைவிக்கிறன

அதற்க்கு நம் நாட்டு அரசும் இங்கு இருக்கும் முதலாளிகளும் துணை போகிறார்கள். ஒரு சிறு உதாரணம் எங்கள் திருப்பூர் பகுதியில் நடப்பதை சொல்கிறேன்.பின்னலாடை தொழில் உலகளவில் யாரும் தொடமுடியாத இடத்தில் உள்ளது திருப்பூர். ஆனால் துணிகளுக்கும் சாயமிடும் டையிங் வேலைகளால் நிலத்தடி நீர் , நொய்யல் ஆறு என அனைத்தும் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. இங்குள்ள முதலாளிகள் தங்கள் லாபம் ஒன்றே குறிக்கோள் என்று நினைத்து கொண்டு எவன் எப்படி போனால் என்ன என்று சாய கழிவுகளை ஆற்றில் கலந்து விடுகின்றனர். தொழிலாளிகளுக்கும் சியான ஊதியம் கொடுப்பதில்லை. பெங்களூரு நிறுவனங்களை விட திருப்பூரில் தொழிலாளிகளுக்கு சம்பளம் குறைவே. ஆனால் லாபம் ஈட்டி தருவது திருப்பூர் மட்டுமே எப்போதும் முன்னணியில் உள்ளது. அரசாங்கத்துக்கும் அந்நிய செலாவணி என்ற பெயரில் வருமானம் இருக்கிறது.


இனியாவது இந்தியா விழித்துக் கொண்டு நாட்டுக்கும் நாட்டு மக்களின் நலனுக்கும் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் வருங்கால இந்தியா ஊனமுற்ற  இந்தியாவாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment