சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2013

கண்மணி அன்போடு காதலன்..

அன்புள்ள முன்னாள் காதலிக்கு

பொருள்: தங்களிடம் கொண்டிருந்த காதல் முறிந்ததின் பேரில் அனைத்து பரிமாற்றங்களை தீர்க்க வேண்டி எழுதப்படும் விண்ணப்பக் கடிதம்.

தங்களிடம் இருக்கின்ற என்னுடையபுகைப்படத்தை உடனடியாக திருப்பி அனுப்புமாறு கோரிக்கைசெய்கிறேன்.
ஏனெனில் அந்தபுகைப்படத்தில் மட்டும் தான் நான் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும்தெரிவேன் என்பதே இதற்கான முக்கிய காரணமாகும். 

மேலும் இந்த புகைப்படம் எனக்கு முதன் முதல் காதல் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.

மேலும் 1 1/2 வருடம் நான் தங்களுடன் காதலில் ஈடுபட்டிருந்த போது தங்களைகவர்வதற்காக ஏராளமான பணம் செலவழித்திருக்கிறேன். நான்செலவழித்த தொகையின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளேன். அதைகூடிய விரைவில் திருப்பி அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செலவழிந்த தொகையின் விவரம்பின்வருமாறு:

எண் விவரம் தொகை
(
ரூபாய்களில்)

1
மதிய/இரவு உணவு 3895
2
கூல்ட்ரிங்ஸ் 3938
3
ஸ்நாக்ஸ் 5645
4
ஜூஸ்கள் 3845
5
சினிமா 1235
6
இண்டர்நெட் சாட்டிங் 1690
7
மொபைல் கட்டணம் 6546
8
பெட்ரோல் 4355
9
பரிசுப் பொருட்கள் 8850
...............................................
மொத்தம் 39,999//0nlyy

மொத்தத் தொகை ரூ.39,999 (எழுத்தில்: thirty nine thousand nine hundrenden ninty nine only ).தயவுசெய்து மேற்கண்ட தொகை திருப்பி அளிக்க வேண்டுகிறேன். 

இதனால் நான் என் புது காதலிக்கு இந்த பணத்தை செலவு செய்ய ஏதுவாய்இருக்கும். மேலும் உங்களிடம் என் பரிசுகள் ஏதாவது இருந்தால் அதை பாதி விலைக்குஎடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். 

அந்த பரிசுகளுக்கானவிலையைகணக்கிட்டு அதை மேற்கண்ட தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.

இத்துடன் நீங்கள் எனக்கு எழுதிய காதல் கடிதங்களை இணைத்துள்ளேன் (எடை 4 கிகி). 

எனவே நீங்கள் உங்கள் பாய் ஃபிரண்டுக்கு மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்கள் ஃபோட்டோவையும் இணைத்துள்ளேன். எனவே உங்களின் புதிய பாய்ஃபிரண்டிடம்அதை நீங்கள்அளிக்க உதவியாய் இருக்கும்.

தங்களிடமிருந்துதொகையை எதிர்நோக்கும்
தங்கள் உண்மையுள்ள

முன்னாள் காதலன்..

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !                 


1 comment:

  1. ஹா... ஹா... நல்லது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete