சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jul 2013

மனதைத் தொட்ட உண்மைக் கதை! ! ! !


அது ஒரு விளையாட்டு மைதானம். சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

                                              


ரெடி, ஸ்டெடி, கோ விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர். ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்தஅனைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்துஅவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"
இப்போ வலி போயிடிச்சா"

அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள்.கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.

அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.
ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆனால் குணத்தால்?

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?

மனித ஒற்றுமை
மனித நேயம்
மனித சமத்துவம்.

வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.

நம்மில் பலர் இதை செய்வதில்லை.

ஏன். நமக்கு மூளை இருப்பதணால்.

அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு   பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !                 


1 comment:

  1. மனம் கவர்ந்த உண்மை...

    உணர வேண்டிய கருத்துகளும் கூட...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete