சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Jul 2013

என்றென்றும் வாலி - நீங்க நினைவுகள்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்து உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்கள் இருவர். இருவரின் இயற்பெயரும் ரங்கராஜன். ஒருவர் எழுத்தாளர் சுஜாதா. இன்னொருவர் கவிஞர் வாலி.தமிழ் திரை இசை உலகில் கண்ணதாசன் எனும் ஜாம்பாவான் இருக்கும் போது ஒரு சிறுவனாக இசை உலகில் வாய்ப்பு தேடி நுழைந்தார். இசையமைப்பாளர் M.S.V. அவர்களிடம் வாய்ப்பு பெற்று தன முதல் பாடலை எழுதினார். வாலி அவர்கள் ஒரு கவிஞர் மட்டுமல்ல. நல்ல நடிகரும் கூட. இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் பார்த்தாலே பரவசம் படத்தில் அவரின் நகைசுவையான நடிப்பு எடுத்துக்காட்டு.





ஒரு நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும் , வாலியும் ஒன்றாக மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். அப்போது இருவரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். அப்போது வாலி சொன்னார் " அண்ணன் எம். எஸ்.விஸ்வநாதனை காண்பதற்க்கு  முன் இந்த ரங்கராஜனுக்கு சோத்துக்கு வக்கில்லை. அண்ணனை பார்த்ததற்கு பின் சோறு திங்க நேரமில்லை எனக்கு " என்று அவர் தனக்கு வாய்ப்பு கொடுத்ததை எல்லோர் முன்னிலையிலும் சொன்னார். அதற்க்கு எம்.எஸ்.வி அவர்கள் நான் ஒன்னும் பன்னல.வாய்ப்பு கொடுத்தேன். மத்ததெல்லாம் அவருடைய உழைப்பு தான்” என்றார். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம்.


மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 15000 பாடல்கள் எழுதியுள்ளார்.20 க்கும் மேற்ப்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். அவரின் வரிகளில் தொடக்கத்தில் இருந்த அதே இளைமையும் துள்ளலும் எந்த நிலையிலும் குறைந்ததில்லை. ஒரே படத்தில் " காலையில் தினமும் கண்விழித்தால் " என்ற இனிமையான பாடலையும் " சக்கர இனிக்கிற சக்கர " என்ற ஒரு போதையேத்தும்  பாடலையும் எழுத அவரால் மட்டுமே முடியும்.

அதே போல ஒரு நாள் காலை கருணாநிதியுடன் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் அவருடன் பங்கேற்று விட்டு மாலை போயஸ் கார்டன் சென்று வர அவருக்கு மட்டுமே தைரியம் இருக்கிறது.. அவர் இறுதியாக இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகும் " காவியத்தலைவன் " படத்திற்க்கு பாட்டு எழுத A.R.ரஹ்மானின் இசக்கூடத்துக்கு சென்று பாடு எழுதியிருக்கிறார்.

வாலி அவர்கள் தன்னை தானே வேடிக்கையாக தன் பாடல் வரிகளில் புகழ்ந்து கொள்வார்.அது அவரின்  நெருங்கிய சில நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். கமலஹாசனின் " தசாவதாரம்" படத்தில் வரும் ஓம் நமோ நாராயணா பாடலில் 

                            " ராஜலட்சுமி நாயகன் சீனிவாசன் தான் 
                             சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான் 
                             நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான் 
                              ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் "

என்ற பாடலில் எல்லோருக்கும் தான் தான் ராஜா என்று வேடிக்கையாக எழுதியிருப்பார்.

                                  

மேலும் அவரின் மறக்க முடியாத பாடல்கள் சில ( எனக்கு தெரிந்தவரை மட்டும் , ஏதும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் )

1) புதிய வானம் , புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது....
2) ஏமாற்றாதே ஏமாறாதே 
3) கால்போன போக்கிலே கால் போகலாமா 
4)  நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே 
5) காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.
6) நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் 
7) தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் 
8) மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் 
9) நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் 
10) மாதவி பொன்மயிலாள் தொகை விரித்தாள் 
11) அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே 
12) கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது 
13)  அம்மா என்றழைக்காத உயிரில்லையே 
14) காலையில் தினமும் கண்விழித்தால் 
15) முன்பே வா என் அன்பே வா 

இதுவரை வெளிநாட்டு  சுற்றுப் பயணங்களுக்கு எத்தனை அழைப்புகள் வந்தும் வாலி அவர்கள்  சென்றதில்லையாம். அப்படி விண்ணில் சிறிது தூரம் பயணிக்க பயந்தவருக்கு விண்ணைத் தாண்டி செல்லும் துணிச்சல் நிச்சயம் இருந்திருக்காது..
தமிழ் படிக்க தெரியாதவர்களில் எமனும் ஒருவன். அதனால் தான் ஒரு அழகான புத்தகத்தை கிழித்து எறிந்துவிட்டான். - கண்ணதாசன் இறந்த போது கவிஞர் வாலி எழுதிய வரிகள். சோகம் என்னவென்றால் அந்த எமன் இன்னும் தமிழை கற்றுக் கொள்ளவில்லை.


ஒருத்தர் செத்தா.. கொஞ்ச நாள் கழித்து பார்க்கும்பொழுது அவர் இந்த பூமியில் இருந்ததற்கான அடையாளமே சுத்தமாக இருக்காது.. அதுதான் சாவு..!

ஒரு நல்ல கவிஞனுக்கு ஏது சாவு..!!? 



1 comment:

  1. குறிப்பிட்ட பாடல்கள் (1 பகுதி) அனைத்தும் அருமை...

    இவரின் வரிகளுக்கு சாவே இல்லை...

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete