சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2013

ஆடித் தள்ளுபடி


ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே வியாபார நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான். அட்சயதிருதியை விற்பனை ஒருநாள் என்றால், ஆடி மாத விற்பனையை ஒரு மாதம் முழுக்க நடத்துகின்றன வியாபார நிறுவனங்கள். ஆடி வருவதற்கு முன்பே, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், பாதிக்கு பாதி விலை என விளம்பரங்களால் அமர்க்களப்படுத்திவிடுகிறார்கள். இப்படி ஆடி மாத விற்பனையில் அசத்துவது பெரிய நிறுவனங்கள் மாத்திரமல்ல, அவர்களுக்கு இணையாக சிறு நிறுவனங்களும், சிறு கடைகளும்கூட ஆடித் தள்ளுபடி வாக்குறுதிகளை போட்டிப் போட்டுக்கொண்டு அள்ளி வீசுகின்றன. பெரிய நகரங்கள், சிறு நகரங்கள் என எல்லா இடங் களிலும் இப்போது இந்த ஆடி மாத விற்பனையை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

''பொதுவாக பண்டிகை நாட்கள் தவிர்த்த இதர மாதங்களில் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்பதால், விற்பனையை அதிகரிக்க கண்டுபிடித்த ஒரு வியாபார உத்திதான் இந்த (ஆடித்) தள்ளுபடி என்றாலும், இது எதிர்பார்ப்புக்குமேல் நல்ல வியாபாரத்தைத் தருகிறது' என்கின்றன வியாபார நிறுவனங்கள்.

                                                               



''கையிருப்பில் உள்ள துணிகளை விற்பனை செய்தால்தான் அடுத்தடுத்து வரும் பண்டிகை 
நாட்களுக்காக கொள்முதல் செய்வது எளிதாக இருக்கும் என்பதால் ஆடித் தள்ளுபடி 
அவசியமாகிறதுஇதர மாதங்களில் நடக்கும் விற்பனையை விட, ஆடி மாத விற்பனை 
சுமார் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக இப்போது ஆடி விற்பனைக்கு என்றே கொள்முதல் செய்கிறோம். விற்பனை அதிகரிப்பதால் லாப வரம்பில் சிறிதளவு குறைத்துக்கொள்வதில் எங்களுக்கு சந்தோஷம்தான். இதனால் வாடிக்கையாளர்களுக்கும் லாபம், எங்களுக்கும் விற்பனை தொய்வில்லாமல் நடக்கிறது'' என்கிறார், தி சென்னை சில்க்ஸ் பொது மேலாளர் ரவீந்திரன்.

பொதுவாக ஆடித் தள்ளுபடியில் பொருட்கள் வாங்கும்  போது னிக்க வேண்டிய சில  
விங்கள்.

விலை!
ஆடித் தள்ளுபடியில் அடிமாட்டு விலைக்கு பொருட்கள் வாங்கிவிடலாம் என்று நினைக்க வேண்டாம். 5 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் என்பது சும்மா ஒரு கவர்ச்சிக்குத்தான். அடக்க விலை வந்தால் போதும், லாபம் இல்லாமல் விற்கிறோம் என்பதெல்லாம் நம் மனதைக் குளிரவைக்கும் பேச்சுதான். பொதுவாக, கடைக்காரர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் வாடிக்கையாளர்களுக்கு தரப்படுகிறது என்பது உண்மைதான். அதாவது, விற்பனை அதிகரிப்பதால் கடைக்காரர்களால் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதுதவிர, கொள்முதல் சலுகையாக கிடைக்கும் தள்ளுபடியும் இப்படி வழங்கப்படுகிறது. இதுதான் உண்மை. 5 முதல் 15 சதவிகிதம் வரைதான் பெரும்பாலான துணிமணிகளுக்கான தள்ளுபடி. 50 சதவிகிதம் தள்ளுபடி என்பது மிகச் சில துணிகளுக்கு மட்டும்தான். ஆனால், இதைத்தான் கொட்டை எழுத்தில் போட்டு மக்களை இழுப்பார்கள் கடைக்காரர்கள். இந்த கவர்ச்சித் தூண்டிலில் நீங்கள் சிக்கிவிடாதீர்கள்.

ஸ்டாக்!
முன்னணி நிறுவனங்கள் ஆடி மாத விற்பனைக்கு என்றே கொள்முதல் செய்கின்றன. குறிப்பாக, பல நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் ஸ்டாக் வைத்து விற்பது கிடையாது. அப்போதுதான் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க முடியும். தவிர, வாடிக்கையாளர் வருகையை அதிகரிப்பதற்கான விற்பனை இலக்கை மையமாக வைத்திருப்பதால் ஸ்டாக் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிறப்பு விற்பனையாக ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்று முடித்துவிடுவதால், புதுத் துணிகள்தான் ஆடித் தள்ளுபடியில் கிடைக்கிறது. சிறிய நிறுவனங்கள், சிறு கடைகள் போன்றவற்றில் புதிய கொள்முதல் மற்றும் ஸ்டாக் சரக்குகள் இரண்டும் சேர்த்து விற்பனை செய்வார்கள். எனவே, எந்த இடத்தில் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தும், எத்தனை சதவிகிதம் தள்ளுபடி என்பதைப் பொறுத்தும் ஸ்டாக் துணியா அல்லது புதுத் துணியா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

                                                

ஃபேஷன்!
புதிய துணிமணி கொள்முதல் செய்யப்படுவதால் லேட்டஸ்ட் டிசைன், பேஷன்கள் கிடைக்கிறது. ஆனால், 20 சதவிகிதத்துக்கு மேல் தள்ளுபடி கிடைக்கும் துணி வகைகளில் லேட்டஸ்ட் ஃபேஷன் எதிர்பார்க்காதீர்கள். லேட்டஸ்ட் டிசைன்களுக்கு குறைவான தள்ளுபடியும், பழைய டிசைன்களுக்கு அதிக தள்ளுபடியும் தருவது இப்போதைய நிலைமை. ஆடித் தள்ளுபடி என்பதும் பண்டிகை கால விற்பனை போலவே நடப்பதால், புதிய ரகங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

திருப்பித் தரமுடியாது!
ஆடித் தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர் களுக்கு பாதகமான விஷயம், திருப்பித் தந்து மாற்றிக்கொள்வது. அளவு பொருந்தவில்லை என சில துணிகளை திருப்பிக் கொண்டுசென்றால், அவற்றை திரும்ப வாங்கிக்கொள்ள மாட்டார்கள். இதுமாதிரியான சமயங்களில் வாடிக்கையாளர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதால் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரலாம். தள்ளுபடியில் வாங்கும்போதே சரியான அளவில், பொருத்தமான பிடித்தமான உடைகளைத் தேர்ந்தெடுத்துவிடுவது நல்லது. பில் போடும்போதே இந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்கவும்.

தேவை!
தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வெளியூர் செல்லும் இடத்தில் எல்லாம் ஆடித் தள்ளுபடியில் வாரிக் குவிக்கவேண்டாம். முன்னணி நிறுவனம், நம்பிக்கையான தள்ளுபடி என்றால் மட்டுமே வெளியூர்களில் வாங்கலாம். அவசரத்தில் ஆசை ஆசையாக வாங்கிவிட்டு, ஊருக்குப் போனபிறகு ஓட்டை விழுந்திருக்கிறது என்று மீண்டும் கிளம்ப முடியாது. எனவே,  வீட்டில் உள்ளவர்களின் தேவை தெரியாமல், அளவு தெரியாமல் எடுத்து அவதிபடவேண்டாம். உள்ளூரில் வாங்குவதே பொருத்தமானது.

வெளிச்சம்!
பொதுவாக தள்ளுபடி துணி வகைகளை இரவில் எடுப்பதையோ அல்லது பளபளவென கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்திலோ எடுக்கவேண்டாம். பகல் நேரங்களில் எடுக்கும் போதுதான் பழைய துணியா, புதுத் துணியா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். மேலும், பளபள வெளிச்சத்தில் அந்தத் துணியின் உண்மையான கலரை யும் கண்டுபிடிக்க முடியாது. எனவே, பளபள வெளிச்சத்தை நம்ப வேண்டாம்.

அதிக தள்ளுபடி!
தள்ளுபடி நேரங் களில் பழைய டிஸ்பிளே துணிகள், மடிப்பிலேயே இருந்த துணிகள், சில குறைபாடுள்ள துணிகளுக்குத்தான் அதிக தள்ளுபடி தரப் படுகிறது. இவற்றை வாங்குவதால் பயன் உண்டா என்பதைக் கவனித்து செயல்படவும். ஏதோ ஓர் ஆர்வத்தில் வாங்கிவிட்டு, வெளியில் போட்டுச் செல்ல முடியாது. வீட்டில் பயன்படுத்தவேண்டுமானாலும் இவற்றை வாங்கலாம். அதற்காக அதிக டேமேஜ், வெளுத்துபோன துணிகளை வாங்கவேண்டாம். தரப்பட்டிருக்கும் பணத்திற்கு மதிப்பு இருக்க வேண்டும்.ஆக, இந்த ஆடியில் பர்ச்சேஸ் செய்ய கிளம்பும்முன் மேற்சொன்ன இந்த விஷயங்களை மனதில் அவசியம் நிறுத்திக்கொள்ளுங்கள்!

                                                      

 எலெக்ட்ரானிக் பொருட்கள்!
எலெக்ட்ரானிக் பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இந்த ஆடி சீஸனில் தள்ளுபடிகளை வாரி இறைக்கின்றன. குறிப்பாக, ஜீரோ சதவிகித வட்டி, குறைந்த முன்பணம், கேஷ் பேக் ஆஃபர் என பல்வேறு சலுகைகளையும் தருகின்றன. இதிலும், பல கவர்ச்சிகரமான தூண்டில்கள் போடப்படுகின்றன.  

குறைந்த முன்பணம்!
குறைந்த முன்பணம் என்பது எல்லாப் பொருட்களுக்கும் கிடையாது. சில குறிப்பிட்ட பிராண்ட் பொருட்களுக்கு மட்டும்தான் தரப்படுகிறது. குறிப்பிட்ட பொருளை தயாரிக்கும் நிறுவனமும், ஃபைனான்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்கும் ஒரு சலுகைதான் இது. ஆனால், குறைந்தபட்சம் இரண்டு தவணை தொகையை முன்பணமாக கட்ட வேண்டிவரும். மேலும், இந்த சலுகையில் வாங்கும்போது அதிகபட்ச விற்பனை விலையில் தான் வாங்கவேண்டியிருக்கும். பேரம் பேசி வாங்க முடியாது. இதனால் நூறு முதல் சில ஆயிரங்கள் பேரம் பேசி வாங்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

ஜீரோ சதவிகித வட்டி!
இதுவும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள், சில குறிப்பிட்ட பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கைதான். .எம்.. தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்பது உண்மைதான். சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனமும், பிராண்டும் சேர்ந்து ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய வட்டியைத் தருவதாகச் சொல்கின்றனர். ஆனால், பிராசஸிங் கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளரை கட்டச் சொல்வதால் ஒரு வகையில் இது மறைமுகமாக வாடிக்கையாளரை ஏமாற்றும் வேலைதான். ஆனால், பிராசஸிங் கட்டணம் வாங்காமல் ஜீரோ சதவிகித வட்டிச் சலுகை என்றால் வாடிக்கையாளருக்கு ஆதாயம் என்று சொல்லலாம்.

கேஷ் பேக் ஆஃபர்!

இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தரப்படுவதில்லை. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அதுவும் அந்தந்த கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அறிவிக்கின்றன. இது நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன். இது குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்தில்தான் கிடைக்கும் என்பதில்லை. எந்த நிறுவனத்தில் பொருட்களின் விலை குறைவாக இருக்கிறதோ, அங்கு வாங்கினாலும் இந்த சலுகையைப் பெறமுடியும். கேஷ் பேக் ஆஃபர் என்கிற கவர்ச்சியில் எடுத்த எடுப்பில் விழுந்துவிடாமல், இரண்டு, மூன்று கடை ஏறி இறங்கி விசாரித்தபின் பொருட்களை வாங்குவது நல்லது.



No comments:

Post a Comment