மனிதாபிமானம் மறந்த பெரு நிறுவன வணிக வளாகங்கள். வாலிபரின் உயிர் குடித்த கொடூரம்!
அண்மையில் சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யு என்ற மாபெரும் வணிக வளாகத்தில் ஏற்பட்ட நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. திருநெல்வேலியை சேர்ந்த சண்முகம் (வயது 23) மென்பொறியாளர் இந்த வணிக வளாகத்தின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் . அவர் கீழே குதித்ததை வாடிக்கையாளர்கள் பலரும் பார்த்துள்ளனர். அவர் கீழே விழுந்த சத்தம் பலரையும் தட்டி எழுப்பியுள்ளது. உடனே பொதுமக்கள் என்ன நடந்தது என்று எட்டிப் பார்க்க சண்முகம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் . பொதுமக்கள் அவரது உடலின் அருகே சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என பார்த்துள்ளனர். அவரது உடலில் அசைவு இருப்பதை பார்த்த பின் அவரை சிகிச்சைக்கு உடனே எடுத்தச் செல்லுமாறு வலியுறுத்தி உள்ளனர் .

ஆனால் வணிக வளாகத்தின் நிர்வாகத்தினர் அவரது உடலின் அருகே யாரையும் அனுமதிக்கவில்லை . அவரச ஊர்தி வரும்வரை அவருக்கு முதலுதவி கூட செய்யவில்லை . சண்முகம் கீழே விழுந்தது 3.17 மணிக்கு , ஆனால் மருத்துவ அவசர ஊர்தி வந்தது 3.45 மணிக்கு. காவல்துறை வந்தது 4.00 மணிக்கு. 15 நிமிடங்களுக்கு மேல் உயிருக்கு போராடியபடியே இறந்துள்ளார் சண்முகம் . இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வணிக வளாகத்தின் நிர்வாகிகளுடன் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர். சண்முகம் தற்கொலை செய்வதற்கு முன்பான காட்சிப் பதிவுகளை தாங்கள் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கும் வளாகத்தின் நிர்வாகம் சம்மதிக்கவில்லை.
வணிக வளாகத்தின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து பொதுமக்கள் குரல் எழுப்பி உள்ளனர். மக்களை சமாதானப்படுத்த காவல் துறையை பயன்படுத்தினர் வளாகத்தின் நிர்வாகிகள். எப்படியாவது கூட்டத்தை களைய வைக்க வேண்டும், வணிக வளாகம் எவ்வித பாதிப்பின்றி எப்போதும் போல் நகரவேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே வளாகத்தின் நிர்வாகத்திடம் இருந்தது. பிறகு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்மணி சண்முகத்தை அவசர ஊர்தியில் ஏற்றிவிட்டு , வணிக வளாகத்தின் நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் கடும் வாதத்தில் ஈடுப்பட்டார். வளாக நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் காவல்துறை நிர்வாகத்திற்கு துணை போவதையும் கண்டித்து உள்ளார்.
அப்பெண்ணுக்கு பொதுமக்கள் ஆதரவு திரண்ட காரணத்தால் காவல்துறை சற்றே திணறியது , எப்படி கூட்டத்தை சமாளிப்பது என்று விழி பிதுங்கி நின்றது. சண்முகம் உயிரோடு தான் உள்ளார் என்றும் , அவரை காப்பாற்றி விடலாம் என்றும் பொய் சொல்லி சமாளித்தது. எனினும் மாலை 6 மணிவரை பொதுமக்கள் அங்கிருந்து களையவே இல்லை. அதற்குள் வளாக நிர்வாகம் சண்முகம் கீழே விழுத்த இடத்தை சுத்தம் செய்து அங்கு எதுவும் நடக்காதது போல் செய்து விட்டது . மாலை 6 மணிக்கு மேல் வந்த வாடிக்கையாளர்களுக்கு அங்கு என்ன நடந்து என்றே தெரியாமல் திரைப்படம் பார்க்கச் சென்றனர். இப்படியாக வணிக வளாக நிர்வாகம் தனது கடமையை செய்து முடித்து வழமை போல் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தியது. முடிவில் சண்முகம் இறந்து போனார் . மெத்தனப் போக்கு , அலட்சியம் காட்டிய வணிக வளாகம் , அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையை பொதுமக்கள் திட்டித் தீர்த்தது தான் மிச்சம்.
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இது போன்ற பெரு நிறுவன வணிக வளாகங்கள் கொஞ்சம் மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சண்முகத்தின் மரணம் உணர்த்துகிறது. சண்முகத்திற்காக இறுதி வரை களத்தில் நின்று போராடிய முகமறியா பொதுமக்களுக்கும் , எந்த உறவும் இல்லாமல் அவருக்காக குரல் கொடுத்த பெங்களூர் பெண்மணிக்கும் நம் பாராட்டுகள்.
விறுவிறுப்பாக
வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக
பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
No comments:
Post a Comment