சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jul 2013

நம்ம அரசியல்வாதிகளும் பஞ்ச் பேசினா , எப்படி இருக்கும் ?

எத்தனை நாளைக்கு தான் நம்ம சினிமா ஹீரோக்களே பஞ்ச் பேசி நம்மை பாடாப் படுத்துறது..? கோபம் கொண்ட நம்ம அரசியல்வாதிகளும் பஞ்ச் பேசினா , எப்படி இருக்கும் ? வாங்கலே !!

மன்மோகன் சிங் : "என் ஆட்சியில ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன் வெல்த், ஹெலிகாப்டர்னு ஒவ்வொரு ஊழலும் நானா செதுக்கினது !"

விஜயகாந்த் : " இந்த நாள்... காலண்டர்' குறிச்சி வச்சிக்கங்க, எப்படி என் கட்சி எம்.எல்.-க்களை உங்க பக்கம் இழுத்து, என் மேல் அவதூறு வழக்குகளாப் போட்டு என்னை ஊர் ஊரா சுத்த விடுறீங்களோ, அதே மாதிரி, நான் சி.எம் ஆனதும் உங்க மேல் அவதூறு வழக்குகளாப் போட்டு, உங்களை ஊர் ஊரா சுத்தவிடலை, நான் கேப்டன் இல்லை !"

வைகோ : " நடைப்பயணம் போறதுனா அவ்வளவு சாதாரணமா போச்சா? நடைப்பயணம் போற தேதிய முதலில் சொல்லி, கட்சியில அஞ்சு, பத்துன்னு நிதி திரட்டி நடக்க ஆரம்பிச்சா , 2 கி.மீ தாண்டுனதுமே தலை சுத்தும். கால் எல்லாம் வலிக்கும். இடையில யாரை எதிர்த்துப் போராட்டம் நடத்துறோமோ, அவங்களே காரை விட்டு இறங்கி, " போராட்டமா, சொல்லவேயில்ல? எதுக்காக இந்த போராட்டம்"னு டீட்டைலு கேட்டு உள்ளுக்குள்ள அழவைப்பங்க . இதை எல்லாம் ஓவர் டேக் செஞ்சு, பப்ளிசிட்டி ஆகி தேர்தலில் கூட்டணி கேட்டு வந்தா ஒரு கட்சியும் சீட் தர மாட்டாங்க. அப்படியே கூட்டணி சேர்ந்தாலும் அந்தக் கட்சி தோத்துடும், என்ன தண்ணியா? குடிங்க, குடிங்க.... கேட்கிற உங்களுக்கே இப்படினா, நடக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும்.?"

கார்த்திக் : "கட்சியில ஆட்கள் இல்லைனு சொல்லலை; இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன் !"

நாராயணசாமி : "என் கணக்கை நீ முடிக்கப் போறியா ? எண்ணி 15 நாளில் நான் உன் கணக்கை முடிக்கிறேன் "

-
டைம்பாஸ்


No comments:

Post a Comment