சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Jul 2013

இன்றைய இளைஞர்களின் ரோல் மாடல் - சிவகார்த்திகேயன்.


எம்.பி.. படித்துவிட்டு அந்த படிப்பிற்கு தகுந்த வேலை தேடி நேரத்தை வீணாக்காமல் தனக்கு சுலபமாக வரும் வேலையை ஈசியாக செய்து முன்னேறியவர்  சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் "கலக்க போவது யாரு ?"  நிகழ்ச்சியில் பல எக்ஸ்பிரியன்ஸ்  ஆன போட்டியாளர்களை  பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னாள் வந்த இளைஞன்.அந்த நிகழ்ச்சி நடக்கும் போது  விஜய் டிவியின் போட்டியாளர்கள் சில காரணங்களுக்காக சண் டிவிக்கு மாறிய போது இவர் விஜய்  டிவியிலேயே நீடித்தார். விஜய் டிவி யின் பல நிகழ்ச்சிகள் சிவகார்த்திகேயனுக்காகவே  பிரபலமாகின. பல நட்சத்திரங்களை அவர்களுக்கு வலிக்காமல் கலாய்ப்பதில் கைதேர்ந்தவர். அதிலும் அவரின் டைமிங் சென்ஸ் பார்த்து வயிறு வலிக்க சிரித்தவர்களுக்கு தான் தெரியும்.



விஜய் டிவி லிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் சந்தானம். தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டார் சந்தானம். ஆனால் சிவகார்த்திகேயன் பசங்க பாண்டியராஜனின் இயக்கத்தில் "மெரினா " படத்தில் அறிமுகமான போது அதில் ஒன்றும் பெரியதாக ஈர்க்கவில்லை. பின்னர் தனுஷுடன் நடித்த " மூணு "  படத்தில் சிறிது நேரமே வந்தாலும் ரொம்பவும் சிரிக்க வைத்து தன் திறைமையை வெளிபடுத்தியிருந்தார். அதிலும் " டேய், நானெல்லாம் ஸ்கூலுக்கு வரதே பெருசு, ட்யுஷனுக்கு வர்றது ரொம்ப கஷ்டம்டா" வசனம் நன்றாக பிரபலமாகியது.

தனி ஹீரோவாக நடித்த " மனம் கொத்தி பறவை "  இன்னும் நல்ல பெயரை பெற்று தந்தது
மக்கள் மத்தியில் தானும் ஒரு நடிகன் என்று பதிவு செய்தார். இடையில் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்தார். ஒருகோடி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் 
பங்கேற்ற போது அவர் சொன்ன சில வார்த்தைகள் " நான் என் அப்பா அம்மா பேச்சை மீறித்தான் இந்த மீடியாத்துறைக்கு  வந்தேன். இப்படி எல்லோரையும் எண்டர்டெயின் பண்ணுவேன் என்று என் அப்பாவுக்கு தெரியாது. அவர் இப்போது இருந்திருந்தால் எனக்கு சந்தோசமாக இருந்திருக்கும் என்றார்

                                      

தன் இயல்பான நடிப்பாலும், மிமிக்ரி பேச்சினாலும் , குரும்புதனத்தினாலும் மக்கள் மனதில் விரைவாக இடம்பிடித்து விட்டார். தனுஷின் " மூணு " படத்தில் ஆரம்பித்த நட்பு  எதிர் நீச்சலிலும்  தொடர்ந்தது. தனுஷ் இவர்மேல் நம்பிக்கை வைத்து அந்த படத்தின் வாய்ப்பை அளித்தார் போலும். பெரிய லுக் இல்லாவிட்டாலும் தன் இயல்பான நடிப்பாலும், காமெடியாலும் படத்தினை தனியாளாக படத்தின் தூக்கி நிறுத்தினார். இடையில் வந்த " கேடி பில்லா கில்லாடி ரங்கா " வில் விமலுடன் நடித்திருந்தாலும் தன் பாதையில் தனியாக தெரிந்தார் சிவகார்த்திகேயன்.


சிவகார்த்திகேயன் ஒரு பலகுரல் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது அதிலயும் ரஜினி குரல் செம்ம ஹிட். அது மாதிரியே தமிழ் நாட்டின் எல்லா மாவட்ட தமிழும் நல்லாவே பேசுவார். திடீர் என்று ஒரு நிகழ்ச்சியை அல்லது நடனத்தை மிமிக்ரி செய்யுமாறு கூறினால் உடனே செய்து கை தட்டு வாங்கிடுவார் சிவா.

                             

ஆடுவதிலும் பயங்கர காமெடி பண்ணிடுவார் சிவகார்த்திகேயன், எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த் போன்றவர்கள் போல ஆடியுள்ளார். அதுவும் ...ரொம்ப நல்லா ரசிக்கும்படியே இருக்கும்.மறக்க முடியாத காமெடி சம்பவம் என்றால், கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அவார்ட் தந்தவுடன் சிவகார்த்திகேயன் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் "உங்கள் குரலில் உங்களை பற்றி நான் கவிதை சொல்ல அனுமதிக்க வேண்டும்" என வேண்ட, அவரும் உடனே அனுமதித்தார். ..ஆனால் அவர்குரலில் அவர்முன்னிலையில் இமிட்டேட் செய்ய ..கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் அசந்துவிடவில்லை ...போட்டாரே ஒரு போடு.. ."எப்போதுமே போலிக்குத்தான் அசலைவிட மதிப்பு அதிகம், என்று குட்டு வைக்க சிவகார்த்திகேயன் வழிந்தார். அதுவும் ரசிக்கும் விதமாக தான் இருந்தது.
விஜய் டிவியின் "விஜய் அவார்ட்ஸ் " நிகழ்ச்சியில்  கோபிநாத்துடன் இணைந்து தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன்  கடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் திரையுலக நட்சத்திரமாக கலந்து கொண்டு " சிறந்த அறிமுகம் " பிரிவில் போட்டியாளராகவும் இருந்தார். விஜய் டிவி இவரை உலகுக்கு அறிமுகபடுத்தியதற்காக பெருமை பட்டு கொள்ளலாம்.

அடுத்து இவர் " வருத்தபடாத வாலிபர் சங்கம் " மற்றும் மான் கராத்தே " என்ற படத்திலும் நடித்து வருகிறார். மிக முக்கியமான தகவல் என்னவென்றால் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வாணி நடிக்கிறார் என்பதுதான் கோலிவுட்டின் புதிய செய்தி.

சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதை ஒரு சிறிய காணொளி 

                                          

மிகுந்த சிரமப்பட்டுஅதிகம் உழைத்து இந்த உயரத்தை அடைந்து இருக்கிறார்   சிவகார்த்திகேயன்தற்போதைய இளைஞர்களுக்கு நல்ல பிரன்ட்லி ஹீரோ-வா மாறி   இருக்கார்அதனால  இன்னும் கொஞ்சம் பொறுப்போட ஜாலி-யா அவர் வழக்கமான ரூட்ட
 பிடிச்சி போனா இன்னும்   நிறைய வெற்றிய பார்க்கலாம்னு தொடர்ந்து தனக்கு தகுந்த காமெடி கதைகளையே தேர்வு செய்து நடித்து வரும் சிவகார்த்திகேயனின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய  வாழ்த்துவோம்

 இந்த பதிவை இப்படியே முடித்தால் நல்ல இருக்காதுஅது சரி வரிசை கட்டி எல்லோரையும் கலாய்த்த சிவகார்த்திகேயனை நாமளும் கலாய்க்கனும்ல .


so சிவகார்த்திகேயனுக்காக ஒரே ஒரு பஞ்ச்  

" மச்சி நீ பிரியா ஆனந்த் கூட  நடிச்சதே எங்களால பொறுத்துக்க முடியல... 
இப்போ ஹன்சிகா கூடயே டூயட் பாடப்போற.... ம்ம்ம்ம்ம்   நீயெல்லாம் நல்ல வருவ "


2 comments:

  1. ஆழ்ந்த ஆர்வம், உழைப்பு... சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா, உங்கள் ஆதரவு என்னை மேலும்மேலும் ஊக்கபடுத்துவதாக உள்ளது.

      Delete