சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2013

காதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்…



பெண்களின் மனதைக் கடலின் ஆழத்திற்கு ஒப்பிடுவார்கள். பெண்களின் மனதில் உள்ளதை அறியவே முடியாதுஎன்பது அதற்கு அர்த்தம். ஆனால் அதையும் தாண்டி, காதலில் விழுந்த பெண்களைக் கண்டுபிடிக்கவும் சில வழிகள் உள்ளன. அந்தப் பெண்களே தங்களையும் அறியாமல் அதை வெளிப்படுத்துவார்கள். அதை வைத்து அவர்கள் என்ன மன நிலையில் உள்ளனர் என்பதை அறியலாம்.

                                   

இதோ காதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்


- ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமைஉபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால், அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப் பிடித்து வாங்குவதாக இருந்தால் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

- தொலைக்காட்சி, எப்.எம் எதுவென்றாலும் அதில் காதல் பாடல் மட்டுமே கேட்கப் பிடிக்கும்.

-
காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் செல்போன் இருக்கும். அவளது அனைத்து இன்கம்மிங்கிற்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் அழைப்பிற்கு மட்டும் வைப்ரேசன் இருக்கும். அதுதான்காதல் வைப்ரேஷன்’. அந்த அழைப்பு வந்த உடன் சொல்லுப்பா என்று ஆரம்பித்து பேசிக் கொண்டிருப்பார்கள். செல்லுப்பா என்று செல்போன் கம்பெனி காரர்கள் கூறும் வரை பேசிக் கொண்டிருப்பார்கள்.

- வார இதழ்களைப் படித்தவர்கள், அதில் செய்திகளை விட்டு விட்டு கவிதைகளாய் தேடிப் பிடித்துப் படிக்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர் இதயத்தை எங்கேயோ மிஸ் செய்தமிஸ்என்று கருதிக் கொள்ளலாம்.

- தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்லதொடக்கம்’.

-
சின்னவயதிலிருந்து மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண் கொஞ்ச நாளா மஞ்சள் தேய்த்து குளிக்கலைன்னா புரிஞ்சுக்கலாம் பொண்ணு எங்கேயோலாக்ஆயிடுச்சுன்னு.

- அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை.

- பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க. அப்படின்னா அவர்கள் காதல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

- பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

                              


- “வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லைஎன்று இயற்கையை ரசித்து வர்ணிப்பாங்க. அப்படியானால் அவர்கள் யாரையோ ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று அர்த்தம்.
-
வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ளபல்ப்எரிய ஆரம்பிச்சுடுச்சு, எதிர்முனையில்பியூஸ்போயிடுச்சுன்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் காரணமே இல்லாமல் சிரித்துவிட்டு.. அப்புறம்தான் பதில் வரும்..
காதல்தேடுதலைமுடித்து விட்டதேவதைகளின் இலக்கணங்களை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்…!

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே 


No comments:

Post a Comment