சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jul 2013

தாய்ப்பால் விற்கும் ஏழை தாய்மார்கள்

 சீனாவில் பணக்காரர்களுக்கு கொடுப்பதற்காக தாய்ப்பால் விற்பனை படுஜோராக நடக்கிறது. இதற்காக ஏழை தாய்மார்கள் கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட தரமற்ற ஏராளமான பொருட்களை தயாரித்து சீன நிறுவனங்கள் உலகளவில் சந்தைபடுத்தி வருகின்றன.

                          
   

இந்நிலையில், ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன. இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர்.

தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர்.

இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கூலியாக அமர்த்தப்படும் தாய்மார்களிடம் இந்த பண வெறி பிடித்தவர்களின் வயது வந்த இளைஞர்கள் கூட நேரடியாகவோ, பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை அருந்துகின்றனர் என்பதுதான் உச்சபட்ச அவலம்.

இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு விலைக்கு தயார் செய்கின்றனர். இதில் கணிசமான பங்கை அவர்கள் எடுத்து கொண்டு மீதமுள்ள சொற்ப பணத்தை ஏழை தாய்மார்களுக்கு வழங்குகின்றனர்.

தாய்ப்பாலுக்காக வாடகை தாய்மார்களை சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் லின் யுன் என்பவர் தெரிவிக்கையில், ‘பணக்கார இளைஞர்கள் தேவைப்பட்டால் நேரடியாக பாலை அருந்தலாம். ஆனால், பெரும்பாலும் பம்ப் மூலமாக உறிஞ்சப்பட்டு அதன் பிறகுதான் சப்ளை செய்யப்படுகிறதுஎன்கிறார் கூலாக.

பெண்களை வர்த்தக பண்டமாக நடத்தும் நிலைக்கு சீனா சென்றுள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்று பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மீடியாக்களில் வெளியான செய்திகளை அடுத்து சென்சென் மாகாணத்தில் தாய்ப்பால் விற்று வந்த சின்சின்யு என்ற நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தாய்மையை புனிதமாக போற்றி வணங்கி வரும் நிலையில் பாரம்பரியம் மிக்க சீன நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் திடீர் பணக்காரர்களாகிவிட்ட ஒரு சிலரின் இது போன்ற நடவடிக்கையால் சீனாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்று ஆன்லைனில் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !                  


No comments:

Post a Comment