சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jul 2013

ஜாக்கிங் போறீங்களா...?


உலகின் எல்லா மூலைகளில் இருப்பவர்களும் ஜாக்கிங் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியும் இல்லையா...? அதில் நாமும் ஒருவர் என்பதில் நமக்கு சந்தோஷம்தான்...! இதில் நான் ஜாக்கிங் போறதில்லியே... என்று தோள் குலுக்கி சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

                                       



ஜாக்கிங் உடலுக்கு நல்லதா கெட்டதா? இது வெயிட்டை குறைக்கிறதா இல்லையா...? என்பதை வைத்து மிகப்பெரிய ஆய்வில் இறங்கியிருக்கிறார் அமெரிக்காவின் புகழ்பெற்ற டாக்டர் ஜெரால்டு.

90 களில் ஜாக்கிங் ஒருவிதமாக இருந்தது. அப்போது ஓடுவார்கள். இப்படி ஓடுவதால் குதிகால்களில் வலி வர ஆரம்பித்ததும் ஒருகட்டத்தில் ஷூ அணிவதால் தான் வலி வருகிறது என்று முடிவு செய்து ஷூவைக் கழற்றி வீசிவிட்டு ஓடினார்கள்.

பின்னர், ஷூ போடாமல் ஓடினாலும் வலி வருகிறது. ஆகவே, குதிகால் வலி எடுப்பதற்கும், ஷூ அணிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற முடிவை எடுத்தார்கள். ஷூக்களை அணிந்தார்கள். இதில் முக்கியமான ஒன்றை எவருமே கவனிக்கவில்லை. செயல்படுத்தவுமில்லை.

அதாவது... ஜாக்கிங் என்றால் ஒரே சீராக ஓடவேண்டும். இதைத்தவிர எல்லாவிதமாகவும் யோசித்தார்கள் என்கிறார் டாக்டர் ஜெரால்டு.

ஜாக்கிங் போகும்போது அணிவதற்காகவே ஷூக்கள் தயாராகின்றன. இதை அணிந்து கொண்டு ஓடினால் எந்த வலியும் வராது. அதேபோல, சீராக, ஒரே மாதிரி ஓடினாலும் வலி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்கிற ஜெரால்டு, இன்னொரு குண்டைத் தூக்கிப்போடுகிறார். அதிகம் ஓடினால், முகத்தில் சுருக்கம் விழும். கிழடு தட்டும். இளமை காணாமற்போகும்.

                                         

அய்யோ... என்று அலறுகிறீர்கள்தானே...?

ஆண்களுக்கு கூடுதலாக, தம் அடிப்பதால் முகச்சுருக்கம் ஏற்படும். ஜாக்கிங் செல்வதாலும் முகச்சுருக்கம் ஏற்படும். ஓடுவதால் தோல் பகுதி இறுக்கமாகும் என்பது எல்லா மருத்துவர்களுக்கும் தெரிந்ததுதான் என்கிறார்.

ஆனால், இதெல்லாம் சுத்தப்பேத்தல் என்கிற டாக்டர் ஜான் புரூவர் ஜெரால்டை திட்டித்தீர்க்கிறார்.

ஜாக்கிங் போவது உடலுக்கு மிகமிக நல்லது. ஆரோக்கியமும் கூட...! ஓடினால் வெயிட் குறையும். வெயிட் குறையும்போது, தோல் சுருங்குவது இயல்பான ஒன்றுதான்...! இதை பெரிதுபடுத்தி ஜாக்கிங் செல்பவர்களை பயமுறுத்துவது பைத்தியக்காரத்தனம் என்கிறார் டாக்டர் ஜான் புரூவர்.

இன்னொரு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள். ஜாக்கிங் போகிற பெண்களுக்கு மார்பகம் தளர்ந்து போகிறது!

இதற்காக, 20 பெண்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

உள்ளாடை அணிந்து (பிரா) ஓடச்சொல்லியிருக்கிறார்கள். உள்ளாடை அணியாமல் ஓடச்சொல்லியிருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் பிரா, சாதாரண பிரா என்று அணிந்து ஓடச் சொல்லியிருக்கிறார்கள். இதனைக் கொண்டு ஆய்வு செய்ததில், ஜாக்கிங் ஓடுகிற பெண்களுக்கு மார்பகங்கள் தளர்ந்து போகின்றன... என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் விட சூப்பரான ஆய்வு இதுதான்...!

அதாவது... ஜாக்கிங் செல்வதால் ஏற்படுகிற முக்கியமான பலன் என்ன தெரியுமா...? காது நன்றாக கேட்குமாம்...!

ஏன்... எதனால்... என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடுவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இப்படிச் சிராவதால் செவிப்பறைகள் முழுவீச்சில் திறந்துகொள்கின்றன. ஆகவே, கேட்கும் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். நல்லா கேட்டுகிட்டீங்களா...?


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !                 

No comments:

Post a Comment